Friday 31 March 2017

31ST MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

இந்திய ஓபன்: சாய்னாவை வீழ்த்தினார் சிந்து
இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.


தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சிந்து 21-16, 22-20 என்ற நேர் செட்களில் சாய்னா நெவாலை தோற்கடித்தார்.
இதுவரை சிந்துவும், சாய்னாவும் இரு முறை மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் 2014-இல் நடைபெற்ற சையது மோதி பாட்மிண்டன் போட்டியில் சாய்னா, சிந்துவை வீழ்த்தியிருந்தார். இப்போது சிந்து வெற்றி கண்டுள்ளார்.

இந்தியா:

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் அதிகாரி பணி
இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர், நிதி அதிகாரி மற்றும் மூத்த மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணி: Manager (Manufacturing Shop) - 02
பணி: Finance Officer - 03
பணி: Finance Officer - 01
பணி: Fire Officer - 01
பணி: Senior Medical Officer - (General Medicine) - 01
பணி: Senior Medical Officer (Medicine) - 01
பணி: Senior Medical Officer (Medicine) - 01
பணி: Medical Officer (General Duty) - 01
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 + வங்கிக் கட்டணம் ரூ.50
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Manager (HR),
Recruitment Section, HR Department,
Hindustan Aeronautics Limited,
Corporate Office, 15/1 Cubbon Road,
Bangalore - 560 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hal-india.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5 வரை கூடுதல் அவகாசம்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைகழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதனையடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவோர் www.cbseneet.nic.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணபிக்கும் முறை கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி துவங்கியது.
மே மாதம் 7-ஆம் தேதியன்று நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியா முழுவதும் 80க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நீட் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச மருத்துவ மாநாடு: தில்லியில் ஏப்.6-இல் தொடக்கம்
உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மருத்துவ மாநாடு தில்லியில் வரும் ஏப்ரல் 6, 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
உலக சுகாதார தினத்துக்கான (ஏப்.7) இந்த ஆண்டுக் கருத்து மன அழுத்தம். இதுகுறித்த மருத்துவ மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், யுனெஸ்கோ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் இணைந்து இம்மாநாட்டை நடத்துகின்றன.
தொலைதூர மருத்துவத்தின் மூலம் மனஅழுத்தத்தை நிர்வகிக்க முடியும் என்பதால் தொலைதூர மருத்துவமும் மனஅழுத்தமும் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

தமிழகம்:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் கடந்த 2014ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவர் பதவியேற்றதிலிருந்து நீதித்துறையில் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுச் சென்றார். அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கர்நாடகாவின் குலுவாடி ரமேஷ் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.இவர் இதற்கு முன்னதாக தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவராவார்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? லட்சுமி விலாஸ் வங்கியில் அதிகாரி பணி
லட்சுமி விலாஸ் வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்குக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகின்றனர்.
பணி: புரபேஷனரி அதிகாரி
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20 - 30க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம: சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, கரூர்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 650
விண்ணப்பிக்கும் முறை: http://careers.lvbank.com என்ற இணைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.04.2017
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி : மே மாதம் நடைபெறலாம்
மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://careers.lvbank.com/docs/PO-Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வர்த்தகம் :

5 பொதுத் துறை வங்கிகளுக்கு புதிய நிர்வாக இயக்குநர்கள்
5 பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக இயக்குநர் பணியிடங்களுக்கான பெயர்களை வங்கி வாரியக் குழு (பி.பி.பி.) பரிந்துரை செய்துள்ளது.
2017-18-ஆம் நிதி ஆண்டில் 5 பொதுத் துறை வங்கிகளில் நிர்வாக இயக்குநர் பணியிடங்கள் காலியாகவிருக்கின்றன. அந்தப் பணியிடங்களை நிரப்பும் வகையில் முன்னாள் தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) வினோத் ராய் தலைமையிலான வங்கி வாரியக் குழு தகுதியான விண்ணப்பதாரர்களுடன் நேர்காணல் நடத்தியது.
அதன் அடிப்படையில், தற்போது பல்வேறு வங்கிகளில் செயல் இயக்குநர்களாகப் பணிபுரிந்து வரும் சுனில் மேத்தா, தீன பந்து மொஹபத்ரா, ராஜ்கிரண் ராய், ஆர்.ஏ. சங்கர நாராயணா மற்றும் ஆர்.சுப்ரமணியகுமார் ஆகியோரை வங்கிகளின் நிர்வாக இயக்குநர் & தலைமைச் செயல் அதிகாரி பணியிடங்களுக்கு நியமிக்க பி.பி.பி. பரிந்துரைத்துள்ளது.

No comments:

Post a Comment