Friday 17 March 2017

17TH MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

இந்தியாவில் 890 செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு
இந்தியாவில் 890-க்கும் மேற்பட்ட தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன என்று மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.


 
மாநிலங்களவையில் மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்த்தன் ராத்தோர் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியதாவது:
 
மத்திய அரசு இதுவரை 890-க்கும் மேற்பட்ட தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அனுமதி கொடுப்பதில் கட்டுப்பாடு விதிக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. இப்போது, புதிதாக 112 சேனல்கள் தொடங்குவதற்கான மனுக்களை மத்திய அரசின் பரிசீலித்து வருகிறது.
 
அகில இந்திய வானொலியின் பண்பலை (எப்.எம்.) விளம்பரங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.186 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
’பிரெக்ஸிட்'டைத் தொடங்குவதற்கான மசோதா: பிரிட்டன் அரசி ஒப்புதல்
 
ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான (பிரெக்ஸிட்) நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கான மசோதாவில், அந்த நாட்டின் அரசி எலிசபெத் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஐரேப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கு ஆதரவு தெரிவித்து, கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்கள் ஆதரவு அளித்தனர். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதற்கு முன்னர், அதுதொடர்பாக பிற உறுப்பு நாடுகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
 
அதற்கான மசோதா, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் இந்த வாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
இந்த நிலையில், பிரிட்டன் அரசு எலிசபெத்தும் அந்த மசோதாவில் கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ’பிரெக்ஸிட்' நடவடிக்கையில், ஒரு முக்கியக் கட்டத்தை அடைய பிரதமர் தெராச மே-க்கு முழு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா:

உத்தராகண்ட் முதல்வராகிறார் திரிவேந்திர சிங் ராவத்!
உத்தராகண்ட் மாநில பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மாநில முதல்வராக  திரிவேந்திர சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார்.
 
உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பா.ஜனதா 57 தொகுதிகளில் வெற்றியடைந்து. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் பா.ஜனதா அரசு ஞாயிறு அன்று பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது.
 
அதற்க்கு முன்னதாக இன்று நடைபெற்ற பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திரிவேந்திர சிங் ராவத் மாநில முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜே பி நட்டா, கட்சித் தலைவர்கள் ஷியாம் ஜாஜு, சரோஜ் பாண்டே மற்றும் கண்காணிப்பாளர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இவர்கள்தான் திரிவேந்திர சிங் ராவத்தை கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அறிவித்தனர்.

மிஸோரம்: வரி இல்லாத பட்ஜெட் தாக்கல்
மிஸோரம் மாநிலத்தில் 2017-18-ஆம் நிதியாண்டுக்காக வரி இல்லாத, உபரி பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
 
ரூ.8,803.10 கோடி மதிப்பிலான பட்ஜெட்டில் உபரி வருவாய் ரூ.331 கோடியாகும்.
 
மிúஸாரம் சட்டப் பேரவையில் அந்த மாநில நிதி அமைச்சர் லால்சவ்தா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து கூறியதாவது: நிகழ் நிதியாண்டுக்கான (2017-18) பட்ஜெட்டில் மொத்தம் ரூ.8,803 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.750 கோடி, புதிய பொருளாதார வளர்ச்சி கொள்கையை அமல்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சாலை பராமரிப்புக்காக ரூ.239.50 கோடி நிதியும், புதிய சாலைகள் அமைப்பதற்காக ரூ.657.64 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
 
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் உதவியுடன் மிúஸாரமில் மேற்கொள்ளப்பட்டுவரும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.366 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் லால்சவ்தா. 

விளையாட்டு:

ரோஜர் பெடரரிடம் வீழ்ந்தார் நடால்
 
பிஎன்பி பரிபாஸ் ஓபன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ரபேல் நடாலை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார் ரோஜர் பெடர். மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
 
அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்த்து விளையாடிய 9-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார்.
 
இந்த ஆட்டம் 68 நிமிடங்களில் முடிவடைந்து.மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 4-6, 6-7 என்ற நேர் செட்டில் 15-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸிடம் தோல்வியடைந் தார். கடந்த வாரம் நடைபெற்ற மெக்சிகோ டென்னிஸ் போட்டி யிலும் ஜோகோவிச்சை, கிர்ஜி யோஸ் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கால் இறுதியில் கிரிஜியோஸ், ரோஜர் பெடரருடன் மோத உள்ளார். 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 3-6, 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷியோ காவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் வாவ்ரிங்கா, ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை எதிர்கொள்கிறார்.

வர்த்தகம் :

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிர்வாக இயக்குநராக வெள்ளையன் சுப்பையா நியமனம்
 
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக வெள்ளையன் சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
 
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (டிஐ இந்தியா) நிறுவனத்தின் இயக்குநர் குழு அடங்கிய நிர்வாகக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், டிஐ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்புக்கு வெள்ளையன் சுப்பையாவை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 
அவரது பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். வரும் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி முதல் வெள்ளையன் சுப்பையா நியமனம் நடைமுறைக்கு வரவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருக்கும் எல்.ராம்குமாரின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு வெள்ளையன் சுப்பையா அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

No comments:

Post a Comment