Thursday 16 March 2017

16TH MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

2018-ஆம் ஆண்டுக்கான ஹெச்1பி விசா விண்ணப்பம் ஏப்ரல் 3 முதல் பெறப்படுகின்றன
2018-ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1 பி விசாவுக்கான விண்ணப்பங்கள் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறை அலுவலகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி முதல் பெறப்படுகின்றன.அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள், வெளிநாட்டவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு வேலைக்கு அமர்த்துவதற்கு இந்த விசா வழிவகை செய்கிறது.


 
வழக்கமாக இந்த விண்ணப்பங்கள் பெறப்படும் தேதியை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறை வெளியிடும். ஆனால், இந்த ஆண்டு அந்த விண்ணப்பங்கள் எத்தனை நாள்கள் பெறப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை இதுவரையிலும் வெளியிடவில்லை.
 
பொதுவாக, வாரத்தில் முதல் 5 பணி நாள்களில் விண்ணப்பங்களை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைத் துறை பெறும்.பொது பிரிவில் 65 ஆயிரம் பேருக்கும், உயர்கல்வி பெற விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 20 ஆயிரம் பேருக்கும் ஹெச்1பி விசா வழங்கலாம் என்று அமெரிக்க நாடாளுமன்றம் நிர்ணயித்துள்ளது. இந்த விசாக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு விண்ணப்பித்து வருகின்றனர். 2018-ஆம் நிதியாண்டு என்பது வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா:

பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் அமரீந்தர் சிங்
பஞ்சாப் மாநில முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அமரீந்தர் சிங் இன்று பதவியேற்றுக்கொண்டார்.பஞ்சாப் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77-இல் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் (15)-பாஜக (3) கூட்டணி 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனையடுத்து அமரீந்தர் சிங்கை, ஆட்சியமைக்குமாறு ஆளுநர் வி.வி.சிங் பட்னூர் அழைப்புவிடுத்தார்.
இந்நிலையில் பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் இன்று பதவியேற்றுக்கொண்டார்.  அவருக்கு பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பட்னூர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மேலும் முதல்வருடன் சேர்த்து முன்னாள் கிரிக்கெட் விரர் நவ்ஜோத்சிங் சித்து உட்பட 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.
கர்நாடக பட்ஜெட் (2017-18)
தமிழகத்தில் அம்மா உணவகம் செயல்படுவது போல பெங்களூரில் 198 வார்டுகளிலும் "நமது உணவகம்' தொடங்கப்படும் என கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்து பேசியது:
பெங்களூரு மாநகராட்சியில் ரூ. 690 கோடியில் 43 முக்கியச் சாலைகள் நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்படும். டெண்டர் ஷூர் திட்டத்தில் நகரின் மத்திய பகுதியில் உள்ள 25 முக்கிய இணைக்கும் சாலைகள் ரூ. 250 கோடியில் மேம்படுத்தப்படும்.
போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள 12 இடங்களில் ரூ. 150 கோடியில் வளர்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ. 200 கோடியில் 200 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபாதைகள் மேம்படுத்தப்படும்.
9 சதுக்கங்களில் ரூ. 421 கோடியில் சாலை வகை பிரிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தேவையான இடங்களில் ரூ. 150 கோடியில் ரயில் மேம்பாலம், சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்.
ரூ. 300 கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படும். போக்குவரத்து பொறியியல் பணிகளுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியாருடன் இணைந்து நடைமேம்பாலம் அமைக்க ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ. 50 கொடியில் ஆயிரம் கழிவறைகள் கட்டப்படும். முதல்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும். 75.095 கி.மீட்டருக்கான 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ரூ. 26,405 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மைசூரு சாலையிலிருந்து கெங்கேரி வரையும், புட்டேனஹள்ளியிலிருந்து அஞ்சனாபுரம் வரையிலும் மெட்ரோ ரயில் பாதை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 4,200 கோடியில் பட்டு வாரியத்திலிருந்து கே.ஆர்.புரம் வரை 17 கி.மீட்டர் தொலைவுக்கு புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும்.
3-ஆம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதையின் மூலம் சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் பணிகளுக்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. பெங்களூரு மாநகரின் போக்குவரத்தை குறைக்க ரூ. 345 கோடியில் புறநகர் ரயில் சேவையை தொடங்க ரயில்வே துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். பெங்களூரில் சுற்றுச்சூழலைப் பாதுக்காக்கும் வகையில் சைக்கிள் பயணத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
மணிப்பூர் முதல்வரானார் பீரேன் சிங்: 9 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்பு
மணிப்பூர் மாநில முதல்வராக பீரேன் சிங் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மேலும் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
மாநிலத் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பீரேன் சிங்குக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
மணிப்பூர் மாநில வரலாற்றில் பாஜக தலைமையிலான அரசு, அங்கு ஆட்சி அமைப்பது இதுவே முதன்முறையாகும்.
மொத்தம் 60 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூருக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும், அதற்கு அடுத்தபடியாக பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி ஒரு இடத்தைக் கைப்பற்றியது.

தமிழகம்:

தமிழக பட்ஜெட் 2017-18: முக்கிய அம்சங்கள் விரிவாக
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. தமிழக நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் :பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய ஜெயக்குமார்,வருவாய் வரவுகள் - 1,59,363 கோடி அளவிலும், வருவாய் செலவு 1,75,293கோடி என்ற அளவிலும், வருவாய் பற்றாக்குறை 15,930 கோடி என்ற அளவிலும் இருக்கும்.2017 - 18ம் ஆண்டின் மொத்த நிதி பற்றாக்குறை ரூ.41,977 கோடி. மூலதன செலவுகள் ரூ.27,789 கோடியாகும்பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்த வரும் நிதியாண்டில் ரூ.41,925 கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள் ரூ.20,231 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.41,977 கோடியாக இருக்கும்.2017 - 18ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை கடந்த ஆண்டின் அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பு பயல தற்போது 1188 ஆக இருக்கும் மாணவ சேர்க்கை இடங்கள் இனி 1362 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.உயர்கல்வித் துறைக்கு ரூ.3,680 கோடி நிதி ஒதுக்கீடு.அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு ரூ.2,656 கோடி ஒதுக்கீடு.உயர் கல்வி உதவித் தொகைக்கு 1,580 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

விளையாட்டு:

பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ் தொடர்: கால் இறுதியில் சானியா ஜோடி தோல்வி
அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனுக்கு எதிராக பந்தை ஆக்ரோஷமாக திருப்புகிறார் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். பிஎன்பி பரிபாஸ் ஓபன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடர், ஸ்பெயின் ரபேல் நடால் ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் 4-வது சுற்றில் தோல்வியடைந்தார். இரட்டையர் பிரிவு கால் இறுதியில் சானியா ஜோடி வெளியேறியது.
அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் சகநாட்டை சேர்ந்த 26-ம் நிலை வீரரான பெர்னாண்டோ வெர்டஸ்கோவை வீழ்த்தினார்.9-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 7-6(7-3), 7-6(7-4) என்ற நேர் செட்டில் 24-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சனை தோற்கடித்தார்.
4-வது சுற்றில் நடால்-பெடரர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போர்டோவை வீழ்த்தினார்.

வர்த்தகம் :

ரிலையன்ஸ், ஏர்செல் இணைப்புக்கு பங்குச் சந்தைகள், ‘செபி’ ஒப்புதல் 
ரிலையன்ஸ், ஏர்செல் நிறுவனங்கள் இணைப்புக்கு பங்குச் சந்தைகள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளன.மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ), தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) ஆகிய பங்குச் சந்தை கள் ஒப்புதல் வழங்கியுள்ளன.
இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்துக்கு (என்சிஎல்டி) விண்ணப்பிக்க வேண்டும். இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கு மாறு கோர வேண்டும் என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
இணைப்பில் உருவாகும் நிறு வனத்தில் ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ், ஏர்செல் லமிடெட் ஆகிய நிறுவனங்கள் சம அளவிலான பங்குகளை அதாவது தலா 50 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும்.கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தொலைத் தொடர்புத்துறை சேவையில் 4-வது பெரிய நிறுவனமாகத் திகழ்ந்த ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதாக அறிவித்தது. ஏர்செல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.65 ஆயிரம் கோடியாகும். நிகர மதிப்பு ரூ.35 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment