Tuesday 21 March 2017

21ST MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: பில்கேட்ஸ் முதலிடம், டிரம்ப் 544-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்
ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார். ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் சரிவை சந்தித்துள்ளார்


போர்பஸ் இதழ் 2017-ஆம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்களின் பட்டியலை நேற்று திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் 86 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துக்களை கொண்டுள்ள தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் கொண்ட மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார். அடுத்ததாக வாரன் பஃபெட் 75.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உள்ள சொத்துக்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மகிழ்ச்சியான மக்கள் வசிக்கும் நாடுகளில் முதலிடத்தில் நார்வே... 122-வது இடத்தில் இந்தியா..!
மக்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தியதில், நான்காம் இடத்திலில் இருந்த நார்வே முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை என்ற காரணத்தினால், 118-வது இடத்தில் இருந்த இந்தியா 122-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், உலகத்தில் எந்த நாட்டு மக்கள் அதிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என்று 'வேர்ல்டு ஹேப்பினஸ் ரிப்போர்ட்' பட்டியலிட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரம், ஆரோக்கியம், அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழக்கை என அனைத்திலும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாடு எது? என்ற அடிப்படைத் தகுதிகளோடு கணக்கிடப்பட்டு வருகிறது.

இந்தியா:

ஓமன் செல்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, விரைவில் அரசு முறை பயணமாக ஓமன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஓமனில் ஆட்சி செய்யும் சுல்தான் காபூஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தனது உறவினரான சயீத் அசாத் பின் தாரிக் அல் சயித்தை துணைப் பிரதமராக நியமித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் ஓமன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா- ஓமன் இடையே பல ஆண்டுகளாக நட்புறவு நீடித்து வருவதால், இதனை மேம்படுத்தும் விதமாக பிரதமரின் பயணம் அமையும் எனவும், கோதுமை, அரிசி, சர்க்கரை ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தங்கள் அப்போது கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
சரக்கு-சேவை வரியின் (ஜிஎஸ்டி) நான்கு துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மத்திய சரக்கு-சேவை வரி மசோதா-2017 (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யுடிஜிஎஸ்டி), ஜிஎஸ்டி-யால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்யும் மசோதா ஆகிய 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த மசோதாக்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் பண மசோதாவாக நிகழ் வாரத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
ரயில்வே நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்
ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களும், அத்துறை சார்ந்த துணை மானியக் கோரிக்கைகளும் மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறின.
நடப்பு நிதியாண்டுக்கான (2017-18) பொது பட்ஜெட்டுடன் இணைந்து ரயில்வே பட்ஜெட்டையும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த மாதம் 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் ரயில்வே துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ரயில்வே துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.1,78,350 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும்.
இந்நிலையில், ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறின. மேலும், 2016-17 மற்றும், 2013-14-ஆம் நிதியாண்டுகளுக்கான துணை மானியக் கோரிக்கைகளும் அவையில் நிறைவேறின.

தமிழகம்:

டிஎன்பிஎல் நிறுவனத்தில் மேலாளர், அதிகாரி பணி
தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் திருச்சி கிளைக்கு நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கு விருப்பமும் பொறியியல் துறை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Deputy Manager (IT) / Assistant Manager (IT) / Officer (IT) - 02
தகுதி: பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பட்டம், எம்சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.03.2017 தேதியின்படி 28 - கணக்கிடப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/it%20advt-3.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

விளையாட்டு:

தரவரிசையில் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி ஜடேஜா முதலிடம்!
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் ஜடேஜா. அதேநேரத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆல்ரவுண்டர்கள் தரவரிசையிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஜடேஜா அற்புதமாகப் பந்துவீசி வருகிறார். சமீபகாலமாக அஸ்வினுடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்திருந்த ஜடேஜா, ராஞ்சி டெஸ்டுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் அஸ்வினைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். 7 புள்ளிகள் குறைவாகப் பெற்று (862) அஸ்வின் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பேட்டிங்கில் ஸ்மித் முதலிடத்திலும் புஜாரா இரண்டாம் இடத்திலும் உள்ளார்கள். விராட் கோலி 4-ம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ்: 5-ஆவது முறையாக பட்டம் வென்றார் ஃபெடரர்
இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் பட்டம் வென்றார். இது, இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் அவர் பெறும் 5-ஆவது பட்டமாகும்.
அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில், சகநாட்டவரான ஸ்டான் வாவ்ரிங்காவுடன் மோதினார் ஃபெடரர். இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஃபெடரர் வெற்றி பெற்றார்.

வர்த்தகம் :

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்-ஏர்செல் ஒப்பந்தத்துக்கு சி.சி.ஐ. அனுமதி
கம்பியில்லா தொலைத் தொடர்பு சேவைப் பிரிவைப் பிரிப்பது தொடர்பாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்(ஆர்-காம்)-ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இந்திய நிறுவனப் போட்டி ஆணையம் (சி.சி.ஐ.) அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திங்கள்கிழமை மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் வயர்லெஸ் சேவைப் பிரிவை தனியாகப் பிரித்து, ஏர்செல் மற்றும் டிஷ்நெட் வயர்லெஸ் நிறுவனங்களிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்போது அந்த ஒப்பந்தத்துக்கு இந்திய நிறுவன போட்டி ஆணையம் தனது ஒப்புதலை அளித்துள்ளது என்று அந்த அறிக்கையில் ஆர்-காம் தெரிவித்துள்ளது.
ஆர்-காம் மற்று ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவற்றின் வயர்லெஸ் தொலைத்தொடர்பு செயல்பாடுகளைத் தனியாகப் பிரித்து ரூ.65,000 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த புதிய நிறுவனத்தை உருவாக்குவது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டன.
வோடஃபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைப்பு! நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக்கம்
மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற இணைப்பு அறிவிப்பு நிகழ்ச்சியில் ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, வோடஃபோன் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி விட்டோரியோ கொலாவோ.
பிரிட்டனைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான வோடஃபோன் மற்றும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லுலார் ஆகியவை இணைவதாக திங்கள்கிழமை அறிவித்தன.
இணைப்பு நடவடிக்கையை அடுத்து உருவாகும் நிறுவனத்துக்கு குமாரமங்கலம் பிர்லா தலைவராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்ய பிர்லா நிறுவன குழுத்துக்கு ரூ.3,874 கோடி மதிப்பிலான 4.9 சதவீத பங்குகளை மாற்றிய பிறகு புதிய நிறுவனத்தில் வோடஃபோன் நிறுவனத்தின் பங்கு மூலதனம் 45.1 சதவீதமாக இருக்கும். ஐடியா நிறுவனம் 26 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும். எஞ்சிய பங்கு மூலதனம் இதர பங்குதாரர்கள் வசம் இருக்கும்.
வோடஃபோன்-ஐடியா இணைப்பால் உருவாகும் புதிய நிறுவனத்தை வோடஃபோன் மற்றும் ஆதித்ய பிர்லா குழுமம் இணைந்து நிர்வகிக்கும் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment