Wednesday 22 March 2017

22ND MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை
வட கொரியா தனது புதிய ரக ஏவுகணையை புதன்கிழமை பரிசோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்தது.
இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


வட கொரியாவின் புதிய வகை ஏவுகணை, அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வோன்ஸான் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை பரிசோதிக்கப்பட்டது.
எனினும், அந்தப் பரிசோதனை தோல்வியடைந்ததாகவே நம்பப்படுகிறது.
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏவுகணை எந்த வகையைச் சேர்ந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பகுதிக்கான அமெரிக்க பாதுகாப்புப் படைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் டேவிட் பென்ஹாம் கூறுகையில், ’வட கொரியா புதன்கிழமை பரிசோதனை செய்த ஏவுகணை, புறப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியது' என்றார்.அணு ஆயுத பலம் கொண்ட வட கொரியா, இந்த மாதத் தொடக்கத்தில் 4 ஏவுகணைகளை பரிசோதித்ததும், அவற்றில் 3 ஏவுகணைகள் போர்ப் பதற்றத்தைத் தூண்டும் வகையில் ஜப்பானுக்கு அருகே விழுந்ததும் நினைவுகூரத்தக்கது.
செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டம்: டிரம்ப் ஒப்புதல்
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் நாஸாவின் திட்டத்துக்கு நிதி ஒத்தீடு செய்வதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அந்த மசோதாவில், வரும் 2018-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படவிருக்கும் செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டத்துக்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாஸாவுக்கு 1950 கோடி டாலர் (சுமார் ரூ. 1.27 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தில், செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் திட்டமும் ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது: நாஸா ஆய்வு மையம் கடந்த 60 ஆண்டுகளாக ஆற்றி வரும் சாதனை கோடிக்கணக்கான அமெரிக்கர்களை வியப்படையச் செய்திருக்கிறது.
பிரான்ஸ்: உள்துறை அமைச்சர் ராஜிநாமா
தனது இரு மகள்களுக்கு நாடாளுமன்றப் பணிகளை வாங்கித் தந்தது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புரூனோ லே ரூக்ஸ் ராஜிநாமா செய்தார். அவருக்குப் பதிலாக சுற்றுலாத்துறை அமைச்சர் மத்தியாஸ் ஃபெக் புதிய உள்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியா:

பட்டச் சான்றிதழ்களிலும் இனி ஆதார் எண்: முறைகேடுகளைத் தடுக்க யுஜிசி அறிவுறுத்தல்
சான்றிதழ் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ்களில் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில், போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதும், வேறு சில முறைகேடுகளில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்தச் சான்றிதழ் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இடம்பெறச் செய்ய யுஜிசி அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.
பட்டச் சான்றிதழ்களிலும் இனி ஆதார் எண்: முறைகேடுகளைத் தடுக்க யுஜிசி அறிவுறுத்தல்
சான்றிதழ் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ்களில் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில், போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதும், வேறு சில முறைகேடுகளில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்தச் சான்றிதழ் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை இடம்பெறச் செய்ய யுஜிசி அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.
நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ் மற்றும் 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலி: மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ் மற்றும் 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியா முழுமைக்கும் 6,396 ஐ.ஏ.எஸ் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் தற்போது 4,926 பணியிடங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள 1,470 ஐ.ஏ.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறியுள்ளார்.
இதில் அதிகபட்சமாக பிகார் மாநிலத்தில் 128 ஐ.ஏ.எஸ் பணியிடங்களும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 117 ஐ.ஏ.எஸ் பணியிடங்களும், மேற்கு வங்க மாநிலத்தில் 101 ஐ.ஏ.எஸ் பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல நாடு முழுமைக்கும் 4,802 ஐ.பி.எஸ் பணியிடங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3,894 ஐ.பி.எஸ் பணியிடங்களில் மட்டுமே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 908 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு:

ஃபெடரேஷன் கோப்பை கூடைப்பந்து: மகளிர் பிரிவில் தமிழக அணி வெற்றி
மகளிர் பிரிவில் மோதும் தமிழக, மேற்கு வங்க வீராங்கனைகள்.
ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் மகளிர் பிரிவில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகம், அரைஸ் அறக்கட்டளை, கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம், பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றின் சார்பில் 31-ஆவது தேசிய கூடைப்பந்துப் போட்டிகள் கோவை, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை தொடங்கின.
இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவின் முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராணுவ அணி 57-51 என்ற புள்ளிக் கணக்கில் விமானப் படை அணியைத் தோற்கடித்தது. இரண்டாவது ஆட்டத்தில், டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணி 75-64 என மத்திய ரயில்வே அணியை வென்றது.
மகளிர் பிரிவு: மகளிர் பிரிவின் முதல் ஆட்டத்தில், தெலங்கானா 70-39 என பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

வர்த்தகம் :

மலிவு விலை 4ஜி செல்லிடப்பேசிகளுக்கான சிப்செட் அறிமுகம்
தொலைத் தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான குவால்காம் டெக்னாலஜீஸ் நம்பர் பேட் வசதி கொண்ட மலிவு விலை 4ஜி செல்லிடப்பேசிகளுக்கான சிப்செட்டை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜிம் கதே கூறியதாவது:
இந்தியா மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் 4ஜி செல்லிடப்பேசி மற்றும் நம்பர் பேட் வசதியுடன் கூடிய ’ஃபீச்சர்' செல்லிடப்பேசிகளுக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளது.
இதனை உணர்ந்தே நிறுவனம் ’குவால்காம் 205' என்ற சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது. இதனை, நம்பர் பேட் வசதி காணப்படும் ’ஃபீச்சர்' ரக செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தி 4ஜி வசதியைப் பெறமுடியும்.
இவ்வகை செல்லிடப்பேசிகள் விலை குறைவானதாகும். அதன் மூலம் சாமானிய வாடிக்கையாளர்களும் 4ஜி அனுபவத்தைப் பெற முடியும் என்றார் அவர்.

No comments:

Post a Comment