Thursday 23 March 2017

23RD MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

இனி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வந்தாச்சு 'பேஸ்புக் லைவ்'!
அலைபேசி வழியாக மட்டுமின்றி இனி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்களும் 'பேஸ்புக் லைவ்' வசதியை பயன்படுத்தமுடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது


பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் தனது பயனாளர்களுக்காக 'பேஸ்புக் லைவ்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.இதன்மூலம் அவர்கள் தங்கள் அலைபேசி வழியாக பதிவு செய்யும் வீடீயோக்களை நேரடியாக ஒளிபரப்பும் வசதி இருந்தது. அலைபேசி மூலம் செயல்பட்டு வந்த இதனை  டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்  வழியாக அணுகும் வசதியானது, முதலில் தனியான பயனாளர்களுக்கு இல்லாமல், முகநூல் பக்கங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு  வந்தது.
தற்போது இந்த வசதியை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழி முகநூல் பயனாளர்களு ம் மேற்கொள்ள இயலும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலானது நேற்று பேஸ்புக் நிறுவன வலைப்பூ பதிவொன்றின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மேம்படுத்தப்பட்ட வசதிகள் இதில் அறிமுகம் செய்ப்பட்டிருப்பதாகவும் அந்த பதிவு தெரிவிக்கிறது.

இந்தியா:

உத்தரகண்ட் பேரவை தலைவராக பிரேம் சந்திர அகர்வால் தேர்வு
உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் சந்திர அகர்வால் (56) வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
70 உறுப்பினர்கள் அடங்கிய உத்தரகண்ட் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 57 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து, புதிய முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் கடந்த 18-ஆம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், சட்டப் பேரவைத் தலைவர் பதவியிடத்துக்கு பாஜக சார்பில் பிரேம் சந்திர அகர்வால் நிறுத்தப்பட்டார். அதற்கான வேட்பு மனுவை அவர் புதன்கிழமை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் தரப்பில் வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தலைவராக பிரேம் சந்திர அகர்வால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விளையாட்டு:

மியாமி ஓபன்: டேன் இவான்ஸ் அதிர்ச்சித் தோல்வி: மகளிர் பிரிவில் பெளசார்டு வெளியேற்றம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றார் அங்குர் மிட்டல்; உலக சாதனையையும் சமன் செய்தார்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 43-ஆம் நிலை வீரரும், பிரிட்டனைச் சேர்ந்தவருமான டேன் இவான்ஸுக்கு, உலகின் 108-ஆம் நிலை வீரரும் அமெரிக்காவைச் சேர்ந்தவருமான எர்னெஸ்டோ எஸ்கோபிடோ அதிர்ச்சித் தோல்வி அளித்தார்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் முதல் சுற்று ஆட்டத்தில் எர்னெஸ்டோவை சந்தித்தார் இவான்ஸ்.
இருவருக்கும் இடையே விறு விறுப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தின் முடிவில், எர்னெஸ்டோ, 7-5, 0-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் எர்னெஸ்டோ 10 ஏஸ்களை பறக்க விட்டிருந்தார்.
முன்னதாக, இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின்போது 2-ஆவது சுற்றில் டேன் இவான்ஸ் வெளியேறியிருந்த நிலையில், இந்தப் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுள்ளார்.
தோல்விக்குப் பிறகு பேசிய டேன் இவான்ஸ், 'எர்னெஸ்டோ அருமையாக விளையாடினார். 3-ஆவது செட்டின் தொடக்கத்திலேயே நான் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், எர்னெஸ்டோ அதில் என்னை முந்திக்கொண்டுவிட்டார். நான் மிகவும் மோசமாக சர்வ் செய்தேன். 2-ஆவது சர்வில் என்னால் பாயிண்டுகளை பெற இயலவில்லை' என்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய எர்னெஸ்டோ, 'இது எனக்கு மிகவும் சிறப்பான நாள். மாஸ்டர்ஸ் போட்டியில் முதல் முறையாக தகுதி பெற்றுள்ளேன். மியாமியில் பெற்ற இந்த வெற்றி எனக்கு மிகப்பெரியது.
முதலில் மெதுவாக ஆடத் தொடங்கினேன். 2-ஆவது செட்டில் எனது ஆற்றல் குறைவாக இருந்ததால், சரியாக திட்டமிட்டபடி ஆட இயலவில்லை. எனினும், 3-ஆவது செட்டில் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி' என்றார்.
இதனிடையே, மற்றொரு முதல் சுற்று ஆட்டத்திலும், உலகின் 45-ஆம் நிலை வீரரும், பிரிட்டனைச் சேர்ந்தவருமான கைல் எட்மன்டை, உலகின் 95-ஆம் நிலை வீரரும், அமெரிக்காவைச் சேர்ந்தவருமான ஜேர்டு டோனால்ட்சன் 2-6, 7-6(4), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
பிரிட்டிஷ் ஓபன்: ஜோஷ்னா வெளியேற்றம்
லண்டனில் நடைபெற்று வரும் பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, 2-ஆவது சுற்றில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஜோஷ்னா அந்த சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையும், எகிப்து நாட்டவருமான ரனீம் எல் வெலிலியை எதிர்கொண்டார். இதில், 8-11, 7-11, 7-11 என்ற செட் கணக்கில் ஜோஷ்னா தோல்வியைத் தழுவினார்.
முன்னதாக, ஜோஷ்னா தனது முதல் சுற்றில் உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ரேச்சல் கிரின்ஹம்மை எதிர்கொண்டு, 11-6, 8-11, 11-6, 12-10 என்ற செட் கணக்கில் வென்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
தற்போது ஜோஷ்னா வெளியேறியதை அடுத்து, பிரிட்டிஷ் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக, இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல், வீரர் செளரவ் கோஷல் ஆகியோர் தகுதிச்சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகம் :

ஜி.எஸ்.டி. அமலாக்கம் ஏற்றுமதியில் உலக நாடுகளுடன் போட்டியிட உதவும்
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலாக்கம் காரணமாக ஏற்றுமதியில் உலக நாடுகளுடன் நாம் போட்டியிட முடியும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது: பல்வேறு வகையான மறைமுக வரி விதிப்புகளுக்கு மாற்றாக, ஜி.எஸ்.டி.யை ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே சந்தை என்ற உணர்வை இந்த புதிய வரி விதிப்பு முறை உருவாக்கும். மேலும், மாநிலம் அல்லது மண்டலங்களுக்கிடையில் வர்த்தகம் மேற்கொள்வதில் எந்தவித தடையும் இருக்காது.

No comments:

Post a Comment