Monday 20 March 2017

20TH MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

இந்தியா:

இனிமேல் இணைய வசதி இல்லாமலே காலநிலை முன் அறிவிப்பு: வந்தாச்சு மெஷ் டெக்னாலஜி!
காலநிலை முன் அறிவிப்புகளை அலைபேசிகள் வழியாக இணைய வசதி இல்லாமலேயே பரிமாறிக் கொள்ள உதவும் புதிய வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


உலக அளவில்புகழ்பெற்ற மென்பொருள் தயாரிப்பு சேவை நிறுவனமான ஐ.பி.எம், தனது துணை நிறுவனமான 'தி வெதர் கம்பெனி' உடன் இணைந்து நாட்டின் முதல் அலைபேசி வழி எச்சரிக்கை முறையை கண்டுபிடித்துள்ளது. 'பீர் டு பீர் கம்யூனிகேஷன்' முறையில் செயல்படும் இந்த செயலியானது, இணைய சேவையில்லாத இடங்களிலும், அலைபேசி சிக்னல் இல்லாத இடங்களிலும் தகவல் பரிமாற்றத்திற்கு உதவுகிறது. இதனைக் கொண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலநிலை பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

உலகம் :

அமெரிக்காவில் பொதுப்பணித் துறை இயக்குநராக இந்தியர் நியமனம்
அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரின் பொதுப்பணி மற்றும் பொறியியல் துறையின் புதிய இயக்குநராக இந்திய பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெக்சாஸ் மாகாணம் ஹுஸ் டன் நகர பொதுப்பணித் துறையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். சுமார் ரூ.13,400 கோடி மதிப்பிலான இந்தத் துறை யின் இயக்குநராக உள்ள டேல் ருதிக், விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, இந்திய-அமெரிக்கரான கருண் ஸ்ரீராமாவை (53) புதிய இயக்கு நராக நியமித்துள்ளார் அந்த நகர மேயர் சில்வெஸ்டர் டர்னர்

இந்த நியமனத்துக்கு ஹுஸ்டன் நகர கவுன்சில் ஒப்புதல் வழங்கி விட்டால், ஸ்ரீராமா வரும் ஏப்ரல் 3-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள் வார். இதன்மூலம் இந்தப் பதவியைப் பிடித்த முதல் ஆசியர் என்ற பெருமை இவருக்குக் கிடைக்கும்.
ஹைதராபாத்தை பூர்விக மாகக் கொண்ட ஸ்ரீராமா, உஸ் மானியா பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டமும் (கட்டிட பொறியியல்), ரூர்க்கி பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டமும் (நிலநடுக்க பொறியியல்) படித்துள்ளார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர், எம்பிஏ மற்றும் கட்டிட பொறியியலில் ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். கட்டு மானத் துறையில் 28 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.
பாகிஸ்தானின் வெளியுறவு செயலாளராக பொறுப்பேற்றார் தெமினா ஜன்ஜுவா
ஐ.நா. சபையின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றி வரும் தெமினா ஜன்ஜுவா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜக்காரியா கூறுகையில் “பாகிஸ்தானின் வெளியுறவு செயலாளராக தெமினா ஜன்ஜுவா இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
1984-ம் ஆண்டு வெளியுறவு பணியில் சேர்ந்த ஜன்ஜுவா, பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு:

பிசிசிஐ புதிய சட்டம்: நிரந்தர வாக்குரிமையை இழந்தது மும்பை: உறுப்பினராகின வடகிழக்கு மாநிலங்கள்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) புதிய சட்டத்தின் படி, மும்பை கிரிக்கெட் சங்கம் தனது நிரந்தர வாக்குரிமையை இழந்தது.
பிசிசிஐயின் புதிய சட்டத்தை, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழு இறுதி செய்துள்ளது.
இதன்படி, மும்பை தனது நிரந்தர உறுப்பினர் பதவியையும், வாக்குரிமையையும் இழந்துள்ளது. மறுபுறம், மணிப்பூர், மேகாலயம், மிúஸாரம், நாகாலாந்து, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு முழு உறுப்பினர் அந்தஸ்தும், வாக்குரிமையும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், உத்தரகண்ட் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலங்களுக்கும் முழு உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி, ஒரு மாநிலத்துக்கு ஒரு முழு உறுப்பினர் அந்தஸ்து மட்டுமே அளிக்கப்படும்.

வர்த்தகம் :

பிஎம்பி வங்கியை எஸ்பிஐ-வுடன் இணைப்பதற்கு 3 மாதங்களில் ஒப்புதல்
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியோடு (எஸ்பிஐ) பாரதிய மகிளா வங்கியை (பிஎம்பி) இணைப்பதற்கு 3 மாதத்தில் இறுதி ஒப்புதல் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரத ஸ்டேட் வங்கியோடு அதன் ஐந்து துணை வங்கிகளை இணைப்பதற்கு கடந்த மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால் சில காரணங்களால் பாரதிய மகிளா வங்கியை எஸ்பிஐ வங்கியோடு இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. தற்போது சில பிரச்சினைகள் முடிவுக்கு வந்திருப்பதால் இறுதி ஒப்புதல் இன்னும் 3 மாதங்களில் வழங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே பாரதிய மகிளா வங்கியை எஸ்பிஐ வங்கியோடு இணைப்பதற்கு முதல்கட்ட ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியிடுப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment