Wednesday 29 March 2017

29TH MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

தொடங்கியது பிரெக்ஸிட்: பிரிட்டனின் விலகல் கடிதம் ஐரோப்பிய கவுன்சிலிடம் அளிப்பு
 
ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக விருப்பம் தெரிவிக்கும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே-யின் கடிதத்தை ஐரோப்பியக் கவுன்சில் தலைவர் டொனாலட் டஸ்கிடம் அளிக்கும் ஐரோப்பிய யூனியனுக்கான பிரிட்டன் தூதர் டிம் பாரோ.


ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே-யின் கடிதத்தை, அந்த அமைப்புக்கான பிரிட்டன் தூதர் ஐரோப்பியக் கவுன்சிலிடம் புதன்கிழமை அளித்தார்.
 
இதன்மூலம், 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனைவிட்டு வெளியேறுவதற்கான (பிரெக்ஸிட்) பிரிட்டனின் அதிகாரப்பூர்வ நடவடிக்கை புதன்கிழமை தொடங்கியது.
 
ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறும் நாடுகள், பிற உறுப்பு நாடுகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று லிஸ்பன் ஒப்பந்தத்தின் 50-ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அந்தப் பிரிவின் அடிப்படையில், பிற உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் விருப்பத்தை, ஐரோப்பியக் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தில் பிரதமர் தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.
 
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 5 நாள் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியா வருகை
 
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 5 நாள் அரசு முறைப் பயணமாக நாளை இந்தியா வருகிறார். நாளை சென்னையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் 31-ம் தேதி தில்லி செல்கிறார்.
 
தனது இந்தியப் பயணம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ,” 5 நாள் பயணமாக இந்தியா செல்ல இருக்கிறேன். இந்தியா 1957 முதல் மலேசியாவுடன் நெருங்கிய நண்பனாக உள்ளது.
 
இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர் நோக்கி உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஏப்ரம் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்தும் பல்வேறு உலக நடப்புகள் குறித்தும் பேச இருப்பதாக தெரிகிறது.
 
அமெரிக்காவில் ஒபாமாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளை நீக்கம்: டிரம்ப் அதிரடி
 
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் சுற்றுச்சூழல் ஆணையையும், பாரிஸ் உலக சுற்றுச்சூழல் உடன்படிக்கையையும் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்தார். வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நேற்று புதிய ஆணையில் கையெழுத்திட்டார்.
 
முன்னாள் ஒபாமாவின் சுற்றுச்சூழல் ஆணையையும், பாரிஸ் உலக சுற்றுச்சூழல் உடன்படிக்கையையும் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்தார். வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நேற்று செவ்வாய்கிழமை புதிய ஆணையில் கையெழுத்திட்டார்.
 
மாநிலங்களவையில் நிதி மசோதா நிறைவேறியது: எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த 5 திருத்தங்கள் ஏற்பு
 
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி மசோதா புதன்கிழமை நிறைவேறியது. அப்போது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த 5 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
 
எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட 5 திருத்தங்களில், 3 திருத்தங்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கால் கொண்டு வரப்பட்டவை. எஞ்சிய 2 திருத்தங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியால் கொண்டு வரப்பட்டவை ஆகும்.
 
இந்த 5 திருத்தங்களும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மாநிலங்களவையால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
 
அதாவது, 27 மற்றும் 34 வாக்குகள் வித்தியாசத்தில் திருத்தங்களுக்கு ஒப்புதல் கிடைத்தது. மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, வாக்கெடுப்புக்கு முன்னதாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
 
இந்தியா:
 
ஐந்தாண்டு திட்டத்துக்கு பதில் மூன்றாண்டு செயல் திட்டம்: ஏப்ரல் 1 முதல் அமல்
 
இப்போது நடைமுறையில் உள்ள ஐந்தாண்டு திட்டத்துக்குப் பதிலாக, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூன்றாண்டு செயல் திட்டத்தை அமல்படுத்த நீதி ஆயோக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 
இப்போதைய 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டம் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் மூலம் நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்ட ஐந்தாண்டு திட்டத்தின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
 
மூன்றாண்டு செயல் திட்டத்தின்கீழ் மாநில அரசுகள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இலக்குகளை எட்ட வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதி குறைக்கப்படும். அதே நேரத்தில் மத்திய அரசு கூறும் இலக்கைகளை எட்டும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று தெரிகிறது.
 
மத்திய அரசுடன் ஒத்துழைக்கும் வகையில் மாநில அரசுகள் சீர்திருத்தங்கள் தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றும் என்று நீதி ஆயோக் காத்திருந்தது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் இதில் ஒத்துழைக்கவில்லை என்று நீதி ஆயோக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
மியாமி மாஸ்டர்ஸ்: வாவ்ரிங்கா அதிர்ச்சித் தோல்வி: காலிறுதியில் ஃபெடரர், நடால்
 
அரையிறுதிக்கு முன்னேறிய உற்சாகத்தில் கரோலின் வோஸ்னியாக்கி.
 
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
 
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற 4-ஆவது சுற்றில் வாவ்ரிங்கா 6-4, 2-6, 1-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் இளம் வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
 
தோல்வி குறித்துப் பேசிய வாவ்ரிங்கா, '2-ஆவது செட்டின் ஆரம்பத்தில் ஒரு கேமில் மோசமாக ஆடினேன். அது எனக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. ஏன் மோசமாக ஆடினேன் என தெரியவில்லை. ஆனால் உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்துவிட்டேன். இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது' என்றார்.

விளையாட்டு:

இந்திய ஓபன் 2-ஆவது சுற்றில் சாய்னா, சிந்து
 
இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
 
தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் பி.வி.சிந்து 21-17, 21-16 என்ற நேர் செட்களில் சகநாட்டவரான அருந்ததியை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் ஜப்பானின் சேனாவை எதிர்கொள்கிறார் சிந்து. சாய்னா தனது முதல் சுற்றில் 21-10, 21-17 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஷின் லீயைத் தோற்கடித்தார்.
 
உலகக் கோப்பை கால்பந்து: பிரேசில் அணி தகுதி
 
உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சியில் பிரேசில் அணியினர்.
 
ரஷியாவில் 2018-இல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க முதல் அணியாக பிரேசில் தகுதி பெற்றுள்ளது.
 
2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் அமெரிக்க நாடுகளுக்கான தகுதிச்சுற்று உருகுவே தலைநகர் மான்டிவிடியோவில் நடைபெற்று வருகிறது.
 
இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியைத் தோற்கடித்தது. அதேநேரத்தில் பெரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணிக்கு அதிர்ச்சித் தோல்வியை அளித்தது.
 
கிராண்ட்மாஸ்டர் ஆகிறார் தமிழக வீரர் ஸ்ரீநாத்
 
தமிழக செஸ் வீரர் ஸ்ரீநாத் நாராயணன் இந்தியாவின் 46-ஆவது கிராண்ட்மாஸ்டர் ஆவது உறுதியாகியுள்ளது.
 
ஷார்ஜா மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ஸ்ரீநாத், அதில் ஸ்பெயினின் கிராண்ட்மாஸ்டரான டேவிட் ஆன்டனை வீழ்த்தியதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் ஆவதை உறுதி செய்துள்ளார்.
 
2002-இல் இந்தியாவின் இளம் ஃபிடே ரேட்டிங் வீரராக உருவெடுத்த ஸ்ரீநாத், 2005-இல் பிரான்ஸில் நடைபெற்ற 12 வயதுக்குள்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றார்.

வர்த்தகம் :

நஷ்டத்தில் இயங்கும் 7 பொதுத்துறை நிறுவனங்களை மூட பரிந்துரை
 
நஷ்டத்தில் இயங்கும் 7 பொதுத் துறை நிறுவனங்களை மூடுவது தொடர்பான பரிந்துரையை மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அனுப்பியுள்ளது.
 
இந்நிறுவனங்களால் அதிகரித்து வரும் நஷ்டத்தைக் குறைக்க இவற்றை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என மத்திய அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பிய பரிந்துரையில் குறிப் பிட்டுள்ளது.
 
நலிவடைந்த மற்றும் நஷ்டத் தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை சீரமைப்பது தொடர்பான ஆலோசனை வழங் கும் பொறுப்பு நிதி ஆயோக்கிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஏற்கெனவே 26 பொதுத்துறை நிறுவனங்களை ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை அமைச்சரவை குழுவுக்கு அனுப்பியுள்ளது. இதில் 7 நிறுவனங்களை மூடிவிடலாம் என அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment