Tuesday 14 March 2017

14TH MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

அந்தமான்-நிகோபாரில் நிலநடுக்கம்
அந்தமான் - நிகோபார் தீவில் இன்று  நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


இந்தியா:

கோவா முதல்வராக பாரிக்கர் இன்று பதவியேற்பு
கோவா முதல்வராக பாஜக மூத்த தலைவர் மனோகர் பாரிக்கர் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார். அவருடன் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் உள்பட 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
கோவா சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிகபட்சமாக காங்கிரஸ் 17-இல் வெற்றி பெற்றது.
பாஜக 13 இடங்களில் வென்றது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா ஃபார்வர்டு கட்சி, சுயேச்சை வேட்பாளர்கள் தலா 3 இடங்களில் வென்றனர். தேசியவாத காங்கிரஸ் ஓரிடத்தில் வென்றது.
பெரும்பான்மை பெற்ற பாஜக: இதனிடையே, பாரிக்கர் முதல்வராக வேண்டுமென்ற நிபந்தனையுடன், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா ஃபார்வர்டு கட்சி மற்றும் இரு சுயேச்சை வேட்பாளர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். இதையடுத்து பாஜகவுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 21 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தது.
கூடுதல் பொறுப்பாக ஜேட்லி வசம் பாதுகாப்புத் துறை
பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை மனோகர் பாரிக்கர் ராஜிநாமா செய்ததை அடுத்து, அந்தப் பதவி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பிரதமரின் அறிவுரையின்பேரில், பாரிக்கரின் ராஜிநாமா உடனடியாக ஏற்கப்பட்டது. அதேபோல், பிரதமரின் அறிவுரையின்பேரில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கூடுதல் பொறுப்பாக பாதுகாப்புத் துறை இலாகா அளிக்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை கூடுதல் பொறுப்பாக அருண் ஜேட்லி வகிப்பது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன்பு, கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி வரையிலும் அந்தப் பதவியை கூடுதல் பொறுப்பாக அவர் கவனித்து வந்தார்.

தமிழகம்:

அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க 21ம் தேதி கடைசி
பணி: அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் (பிரிவுகள்: ஜியாலஜி, மைனிங், பி.டபிள்யூ.டி., அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் மற்றும் நெடுஞ்சாலைத் துறை)
மொத்த காலியிடங்கள்: 53
கல்வித் தகுதி: பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு (ஜியாலஜி)
வயது வரம்பு: 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம்: ரூ.50, எழுத்துத் தேர்வுக்கு: ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in  என்ற இணைய தளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2017_05_not_eng_asst_geologist.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.03.2017
தேசிய தொழில்நுட்ப கழகத்தில் பணி
பணி: Technician Apprentice (பிரிவுகள்: CSE/IT, Civil, ECE, EEE, ICE, Mech/ Prod/ Industrial, Machinist, Automobile, Fitter, Welder, Turner, Sheet Metal/Foundry
மொத்த காலியிடங்கள்: 23
சம்பளம்: ரூ.6,615.
கல்வித் தகுதி: டிப்ளமோ, ஐடிஐ (பொருத்தமான பிரிவுகளில் படித்திருக்க வேண்டும்).
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu -என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி: The Registrar, National Institute of Technology Tiruchirappalli - National Institute of Technology, Tiruchirappalli - 620015.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.  
மேலும் விவரங்களுக்கு: http://www.nitt.edu/home/other/jobs/Apprenticship-Apllicaition-2017.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.03.2017
பாரத ரிசர்வ் வங்கியில் பணி:16க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பாரத ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 16க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி மேலாளர் (ராஜ்ய பாஷா)
காலியிடங்கள்: 10  
கல்வித் தகுதி: ஹிந்தியில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: டெக்னிக்கல் மேனேஜர் (சிவில் பிரிவு)
காலியிடங்கள்: 2  
கல்வித் தகுதி: பி.இ. சிவில் இன்ஜினியரிங் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: உதவி மேலாளர் (செக்யூரிட்டி)
காலியிடங்கள்: 7
தகுதி: ராணுவப் படை,  கடற் படை,  விமானப் படை பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்ட மூன்று பதவிகளுக்கும் விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 600; ஆதிதிராவிடர்  பழங்குடியினர் பிரிவினருக்கு ரூ. 100.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVT3P010317DCE 800A92DD244EA9E1078D6AF73684A.PDF
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.03.2017

விளையாட்டு:

இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ்: வாவ்ரிங்கா, வீனஸ் வில்லியம்ஸ் 4-ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் தங்களது பிரிவில் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-ஆவது சுற்றில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஷ்ரைபருடன் மோதினார் வாவ்ரிங்கா. இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் வாவ்ரிங்கா 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் பிலிப்புக்கு எதிரான தனது 5-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார் வாவ்ரிங்கா.

வர்த்தகம் :

கெவின்கேரிலிருந்து வெளியேறியது சைரஸ் கேபிடல்
நுகர்பொருள் துறையின் முன் னணி நிறுவனமான கெவின் கேர் நிறுவனத்திலிருந்து பிரை வேட் ஈக்விட்டி நிறுவன மான சைரஸ் கேபிடல் வெளியேறியுள்ளது. கெவின் கேர் நிறுவனத் தில், சைரஸ் கேபிடல் ரூ.250 கோடி முதலீடு செய்திருந்தது. நான்கு ஆண்டுகளில் வெளி யேறும் வகையில் இந்த முதலீட்டை மேற்கொண்டிருந்தது.
இது தொடர்பாக கெவின்கேர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்தின் தலைவர் சி.கே.ரங்கநாதன், சைரஸ்கேபிடல் வைத்திருந்த பங்குகளை அனைத்தையும் வாங்கியுள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 100 சதவீத பங்குகளும் சி.கே.ரங்கநாதன் வசம் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
கெவின்கேர் நிறுவனத்தில் 2013ம் ஆண்டில் ரூ.250 கோடியை சைரஸ் கேபிடல் முதலீடு செய்திருந்தது. நான்கு ஆண்டு களுக்குள் வெளியேறுவது என்கிற அடிப்படையில், குறுகிய காலத்தில் இரண்டுமுறை இந்த முதலீட்டை மேற்கொண்டிருந்தது.
‘‘சைரஸ் கேபிடல் முதலீடு, மாற்றம் தேவைப்பட்ட நேரத்தில் பக்கபலமாக இருந்தது, மிகப் சிறப்பாக செயல்பட்டது’’ என்று சி.கே.ரங்கநாதன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment