Monday 27 March 2017

27TH MARCH REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

வர்த்தகம் :

உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை: மூன்றாவது இடத்தில் இந்தியா
உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கையில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு உள்நாட்டு விமான பயணிகளின் எண் ணிக்கை 10 கோடியாக இருந்தது.


முதல் இடத்தில் அமெரிக்கா வில் 71.9 கோடி நபர்கள் விமா னத்தில் பயணம் செய்திருக் கின்றனர். அடுத்து சீனாவில் 43.6 கோடி நபர்கள் பயணம் செய்திருப்பதாக சிஏபிஏ என்னும் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. நான்காவது இடத்தில் இருக்கும் ஜப்பானில் 9.7 கோடி நபர்கள் விமானத்தில் பயணம் செய்திருக்கின்றனர்.
இந்தியாவின் உள்நாட்டு விமான சந்தை கடந்த இரு ஆண்டுகளில் 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் 4-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது இடத்துக்கு வரும் என சிஏபிஏ இந்தியாவின் கபில் கவுல் தெரிவித்தார். அதே சமயத்தில் மூன்றாவது இடத்திலே நீண்ட காலம் இருக்க வேண்டி இருக்கும். முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா மற்றும் சீனாவைப் பின்னுக்கு தள்ளுவது என்பது இப்போதைக்கு முடியாது என்றும் அவர் கூறினார்.
நிஸானின் புதிய டெரானோ அறிமுகம்
நிஸான் டெரானோ காரை நொய்டாவில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யும் அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் கிலோம் சிகூர்ட்.
ஜப்பானைச் சேர்ந்த நிஸான் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய டெரானோ காரை புது தில்லி அருகே நொய்டாவில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
நிஸான் இந்திய நிறுவனத்தின் தலைவர் கிலோம் சிகூர்ட் புதிய எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் எட்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவோம் என்று தெரிவித்தோம்.
திட்டமிட்டபடி புதிய மாடல்களை ஒவ்வொன்றாக விற்பனைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.
அதன்படி, இப்போது மேம்படுத்தப்பட்ட டெரானோ விற்பனைக்கு வருகிறது. மாடலுக்கு ஏற்ப ரூ. 9.99 லட்சம் முதல் ரூ. 13.6 லட்சம் வரை இவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் எஸ்.யு.வி. ரக பயணிகள் வாகனங்களில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம். உலகம் முழுவதும் அந்த வகையான எங்களது 'பெட்ரோல்', 'கஷகாய்', 'முரானோ' மாடல் கார்கள் மிகவும் புகழ் பெற்றவை.

உலகம் :

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சீனாவில் திங்கள்கிழமை காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் யுனான் மாகாணம், யாங்பி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: மாவட்டத்தின் அஜியா பகுதியில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 அலகுகளாகப் பதிவானது. பூமிக்கு 12 கி.மீ. ஆழத்தில் அந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தப் பகுதியிலும் அதற்கடுத்த புபிங் என்னும் இடத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. தீயணைப்புப் படையினர், மருத்துவக் குழுக்கள் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். உயிரிழப்பு, பொருள் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை என்று யாங்பி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா:

கடும் எதிர்ப்புக்கு இடையே ஜிஎஸ்டி இணைப்பு மசோதாக்கள் மக்களவையில் தாக்கலானது: ஜூலை 1-க்குள் அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்
நாட்டின் வரி சீர்திருத்த நடவடிக்கையில் முக்கிய இடத்தை பிடிக்கவுள்ள சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) தொடர்பான 4 இணைப்பு மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.
ஒரே நாடு, ஒரே வரி திட்டம் என்பதை அமல்படுத்தும் வகையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மத்திய ஜிஎஸ்டி (சி.ஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐ-ஜிஎஸ்டி), யூனியன் பிரதேச ஜிஎஸ்டி (யூ.ஜிஎஸ்டி) மற்றும் இழப்பீடு சட்டம் ஆகிய 4 மசோதாக்களை மக்களவையில் அறிமுகம் செய்தார்.

தமிழகம்:

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம்: கையெழுத்திட்டது மத்திய அரசு!   
நெடுவாசல் பொதுமக்களின் எதிர்ப்பையும்  மீறி ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு இன்று கையெழுத்திட்டது
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பூமிக்கு அடியில்  இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் திட்டமிட்டபடி நாடு முழுவது 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டதிற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்தது.
அதன்படி இன்று புதுதில்லியில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மத்திய பெட்ரோலியத்துறை சார்பாக உயர் அதிகாரியான ராகேஷ் மிஸ்ரா ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

விளையாட்டு:

ஒடிஸாவில் உலகக் கோப்பை ஹாக்கி
2017 ஆடவர் உலக ஹாக்கி லீக் பைனல், 2018 ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி ஆகியவை ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெறுகின்றன.
உலக ஹாக்கி லீக் பைனல் போட்டி 2017 டிசம்பர் 1 முதல் 10 வரையும், உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி 2018 நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரையும் நடைபெறவுள்ளன. இந்த இரு போட்டிகளுக்காக ஒடிஸா அரசு ரூ.75 கோடியை செலவிடுகிறது.
மியாமி மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால், கெர்பர்
மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் நடால் 0-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபரை தோற்கடித்தார்.
ஆயிரமாவது ஏடிபி டென்னிஸ் போட்டியில் விளையாடிய நடால், முதல் செட்டை 0-6 என்ற கணக்கில் இழந்ததால் அவர் வெற்றி பெறுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த இரு செட்களில் ஆக்ரோஷமாக ஆடிய நடால், மிக எளிதாக அந்த செட்களைக் கைப்பற்றி வெற்றி கண்டார்.


No comments:

Post a Comment