Wednesday 28 February 2018

பிப்ரவரி 27 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

தேசிய துறைமுகங்கள், நீர்வழி போக்குவரத்து உட்பட சென்னை தையூரில் ரூ.70 கோடியில் கடலோர தொழில் நுட்ப ஆய்வு மையம்: நிதின் கட்கரி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
  • மத்திய கப்பல் போக்குவரத்து்த்துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச் சக இணைச் செயலாளர் (சாகர் மாலா திட்டம்) ஆர்.கே.அகர்வாலும் ஒப்பந்தத்ததில் கையெழுத்திட்டு ஆவணங்களை பரிமாறிக்கொண்டனர்.


வாடகை பைக் திட்டம்: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகம்
  • சென்னை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ஸ்கூட்டி முதல் ஹார்வி டேவிட்சன் பைக் வரை வாடகைக்கு எடுத்துச் செல்லும் நிலை வந்துள்ளது.
  • இதற்காக எஸ்எப்ஏ என்ற தனியார் இருசக்கர வாகன நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கெனவே வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தகப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், விரைவில் பைக், ஸ்கூட்டர் திட்டமும் செயல்படுத்தபடவுள்ளது.
இந்தியர்களிடம் கிட்னி தானம் பெற இலங்கையில் தடை
  • இந்தியாவில் இருந்து இளைஞர்களைக் கொண்டு வந்து அவர்களிடமிருந்து சட்ட விரோதமான முறையில் கிட்னிகள் அதிகப் பணம் கொடுத்து வாங்கப்படுவதாக எழுந்த சர்ச்சையைடுத்து இலங்கை அரசு வெளிநாட்டவர்களிடமிருந்து கிட்னி தானம் பெறுவதற்கு தற்காலிக தடை விதித்துள்ளது என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

இந்தியா

இந்தியாவின் முதல் பிஎஸ் 6 கார்: மெர்சிடஸ் பென்ஸ் அறிமுகம்
  • இந்தியாவின் முதல் பிஎஸ் 6 விதிகளைக் கொண்ட டீசல் காரை மெர்சிடஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இது எஸ்-கிளாஸ் வரிசையில் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டதாகும். புதிய எஸ் 350டி கார் பாரத் 6 விதிகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளது.
எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்தது
  • உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 2 சிறப்பு நீதிமன்றங்களை, டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.
  • நீதிபதி அர்விந்த் குமார் தலைமையில் ஒரு சிறப்பு நீதிமன்றமும், நீதிபதி சமர் விஷால் தலைமையில் ஒரு சிறப்பு நீதிமன்றமும் அமைத்துள்ளது.

உலகம்

பெண்கள் இனி ராணுவத்தில் சேரலாம்: சவுதி அரசு அறிவிப்பு
  • சவுதி அரேபியா சமீபகாலத்தில் மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக ராணுவத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு பார்க்கப்படுகிறது.
  • ராணுவத்தில் சேர விருப்பமான பெண்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு என்றும் இது கட்டாயம் இல்லை என்றும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் உள்ள கட்டுப்பாட்டை நீக்க சட்டத் திருத்தம்: அதிபர் பதவியில் நீடிக்க ஜி ஜின்பிங் முடிவு- அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கை
  • சீனாவில் ஒருவர் 2 முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை நீக்க அதிபர் ஜி ஜின்பிங் முடிவெடுத்துள்ளார். இதனால் பல பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்று அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள் ளனர்.
  • சீனாவில் அதிபர், துணை அதிபர் பதவிகளில் ஒருவர் 2 முறை மட்டுமே இருக்க வேண்டும். இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்று சீன அரசியல் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

வணிகம்

இணையச்சேவை: 47வது இடத்தில் இந்தியா
  • குறைந்த தரம் மற்றும் குறைந்தபட்ச பயன்பாடு காரணமாக அனைவரையும் உள்ளடக்கிய இணையச்சேவையில் இந்தியா 47-வது இடத்தில் இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

விளையாட்டு

டென்னிஸ் தரவரிசையில் பெடரர் முதலிடம்
  • சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 10,105 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
லீக் கோப்பை கால்பந்து மான்செஸ்டர் சிட்டி அணிசாம்பியன்
  • இங்கிலாந்தில் நடந்த லீக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

PDF Download

No comments:

Post a Comment