Monday 19 February 2018

பிப்ரவரி 17 & 18 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து
  • பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற வழக்கில், புதுச்சேரி மாநிலத்தின் கோரிக்கையான 7 டிஎம்சி தண்ணீர் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், தமிழகத்துக்கு எவ்வளவு தண் ணீர் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • 7 டிஎம்சி தண்ணீர் முறையாக கிடைக்கும்பட்சத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என நம்புகிறோம்.
  • உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரியை பொறுத்தவரையில் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.

காவிரி மேலாண்மை வாரிய பலன்களை பெற நீர்வள பாதுகாப்பு வாரியத்தை தமிழகம் அமைக்க வேண்டும்: எம்.எஸ்.சுவாமிநாதன் யோசனை
  • காவிரி மேலாண்மை வாரியத்தின் பலன்களைப் பெற நீர்வள பாதுகாப்பு வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் யோசனை தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது ஜெயலலிதா சிலை 21-ந் தேதி பீடத்தில் நிறுத்தப்படுகிறது
  • அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா அவருக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 7 அடி உயரத்தில் ஆளுயர வெண்கல சிலை வைக்கப்பட இருக்கிறது.
  • அவரது பிறந்தநாளான வரும் 24-ந் தேதி சிலையை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலை இருக்கும் இடத்திற்கு வலதுபுறம் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கப்பட இருக்கிறது.
  • இதற்காக, எம்.ஜி.ஆர். சிலை அருகே பள்ளம் தோண்டப்பட்டு, தற்போது பீடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தியா

நிலவின் தென் துருவப் பகுதியில் ஆராய ஏப்ரலில் சந்திராயன்-2 செலுத்தப்படும்: மத்திய விண்வெளித் துறை அமைச்சர் தகவல்
  • வரும் ஏப்ரல் மாதம் சந்திராயன்-2 விண்ணில் தனது பயணத்தைத் தொடங்கும் என்று மத்திய விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
  • நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் சந்திராயன்-1 திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) 2008-ல் வெற்றிகரமாக நடத்திக்காட்டியது.
  • இதைத் தொடர்ந்து சந்திராயன்-2 திட்டத்தை இஸ்ரோ அறிவித்தது. இந்நிலையில் சந்திராயன்-2 திட்டப் பணிகளை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.
வர்த்தகம், எரிசக்தி, தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: 9 ஒப்பந்தங்களில் கையெழுத்து
  • இந்தியா வந்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியுடன் இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்தினார்.
  • அதன்பின், இரு நாடுகளுக்கும் இடையில் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் ரவ்ஹானியும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன்பின், ஈரான் அதிபரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும்
  • உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், அதற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
டெல்லியில் பாஜகவுக்கு புதிய தலைமை அலுவலகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  • புதுடெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தலைமை அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி 18.02.2018 அன்று திறந்து வைத்தார்.
  • டெல்லியில் உள்ள 6, தீனதயால் உபாத்யாயா மார்க் என்ற முகவரியில் இந்த புதிய தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.
  • இந்த விழாவுக்கு மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்தியஅமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

உலகம்

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
  • அமெரிக்காவில் ‘நாசா’ மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடிக்க கடந்த 2009-ம் ஆண்டு கெப்லர் விண்கலத்தை அனுப்பியுள்ளது.
  • அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
  • அவ்வாறு கிடைத்த போட்டோக்கள் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
  • ‘கே 2 மிஷின்’ என அழைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் இதுவரை 300 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, தாய்லாந்து நடத்தும்கோப்ரா கோல்டுராணுவ பயிற்சியில் தென்கொரிய வீரர்கள் பங்கேற்பு
  • தாய்லாந்தின் சட்டஹிப் கடற்படை தளத்தில் ‘கோப்ரா கோல்டு’ என்ற பெயரில் ஆண்டுதோறும் ராணுவப் பயிற்சி நடைபெறுகிறது.
  • அமெரிக்காவும் தாய்லாந்தும் இணைந்து நடத்தி வரும் இந்தப் பயிற்சியில் பிற நாடுகளைச் சேர்ந்த ராணுவமும் பங்கேற்கிறது.
  • இதனால் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியாக இது கருதப்படுகிறது.
ஈரானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து 66 பேர் பலி
  • ஈரானில் டெஹ்ரானிலிருந்து யாசூஜ் என்ற இடத்துக்குச் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 66 பயணிகளும் பலியாகியுள்ளனர்.
  • ஸாக்ரோஸ் மலைகளில் மோதி விபத்துக்குள்ளானது.
  • இதில் பயணித்த பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வணிகம்

40% பிளிப்கார்ட் பங்குகளை வாங்க வால்மார்ட் திட்டம்
  • இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்க அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • ஒரு வேளை இந்த முதலீடு நடக்கும் பட்சத்தில் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடாக இருக்கும்.
  • ஏற்கெனவே இருக்கும் மற்றும் புதிய பங்குகளை வாங்குவதற்கு பேச்சு வார்த்தை அடுத்த வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது.
தேசிய வாகன வரைவுகொள்கை வெளியீடு
  • தேசிய வாகன வரைவு கொள்கையை கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • வாகனங்களால் எழும் மாசுபாட்டைக் குறைப்பதற்கு இந்த வரைவில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • குறைவான மாசுபாட்டை ஏற்படுத்தும் நான்கு மீட்டருக்கும் குறைவான சிறிய கார்களுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்குள் 5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: கல்ராஜ் மிஸ்ரா தகவல்
  • அடுத்த ஆண்டுக்குள் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கான மத்திய இணை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
  • நாட்டின் அதிக மக்கள்தொகை காரணமாக வேலைவாய்ப்பு உருவாக்கங்கள் உணரப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்

விளையாட்டு

சென்னை ஓபன் சாலஞ்சர் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் யுகி பாம்ப்ரி- இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன்
  • சென்னை ஓபன் சாலஞ்சர் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி உலக சாதனை
  • நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 244 ரன் இலக்கை வெற்றிகரமாக ‘சேசிங்’ செய்து ஆஸ்திரேலியா உலக சாதனை படைத்தது.
முதலிடம் பிடித்தார் பெடரர்
  • ரோட்டர்டாமில் நடைபெற்று வரும் டென்னிஸ் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
  • இதன் மூலம் அதிக வயதில் முதலிடத்தை பிடித்த வீரர் என்ற சாதனைக்கு உரியவரானார் ரோஜர் பெடரர்.
முத்தரப்பு டி20; வீணான இங்கிலாந்து வெற்றி: இறுதிப்போட்டிக்கு நியூஸி. தகுதி
  • ஹேமில்டனில் 18.02.2018 நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தை இங்கிலாந்து வீழ்த்தினாலும் நிகர ரன்விகிதத்தில் நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது.
தென்கொரிய ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டியில் தங்கம் வென்ற நார்வே வீரர்
  • தென்கொரியா நாட்டில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
  • இதில் பியாங்சங் நகரில் 18.02.2018 நடந்த பனிச்சறுக்கு போட்டியின் கிராஸ் கன்ட்ரி பிரிவில் நார்வே நாட்டின் வீரரான கிளேபோ தங்கம் வென்றுள்ளார்.

PDF Download


No comments:

Post a Comment