Sunday 18 February 2018

பிப்ரவரி 16 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
  • சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரி திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார்.
  • நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை பிப்ரவரி 19-ம் தேதி திங்கட் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

முக்கியமான குறிப்புக்கள்
ஜெயலலிதா 
  1. முன்னாள் தமிழக முதல்வர் ,அதிமுக பொதுச் செயலாளர்.
  2. 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி காலமானார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 177 டிஎம்சி நீரை கொண்டுவருவோம்: ஓ.பன்னீர்செல்வம்
  • ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தித்தான், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தார்.
  • உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முக்கியமான குறிப்புக்கள்
ஓ.பன்னீர்செல்வம்
  1. பிறப்பு: ஜனவரி 14 1951
  2. துணை முதலமைச்சர்

இந்தியா

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அமிதவ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பை வழங்கியது.
முக்கியமான குறிப்புக்கள்
உச்ச நீதிமன்றம் 
  1. நிறுவியது – 28 சனவரி 1950
  2. அமைவிடம் – புது தில்லி
தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
  • ஆயுஷ்மேன் பாரத் யோஜ்னா’ தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முக்கியமான குறிப்புக்கள்
  1. நரேந்திர மோடி - 15வது இந்தியப் பிரதமர்
  2. பதவியேற்பு - 26 மே 2014
நிரவ் மோடி மீது 3 ஆண்டுகளுக்கு முன்பே புகார் செய்தும் ஏன் நடவடிக்கை இல்லை?- பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
  • தொழில் அதிபர் நிரவ் மோடி செய்த வங்கி மோசடிகள் அனைத்தையும் கணக்கிட்டால் ரூ. 30 ஆயிரம் கோடிவரை இருக்கும்.
  • ஆனால், கடந்த 2015ம் ஆண்டே பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

உலகம்

மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணம்:
  • பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேசத்துக்கு பயணம் செய்ததை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
  • மோடியின் இப்பயணம் இந்தியா - சீன இடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிக்கு உதவப் போவதில்லை என்றும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான குறிப்புக்கள்
  1. அருணாச்சலப் பிரதேசம் 1987ல் மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
  2. இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் இரண்டு முக்கிய பிரதேசங்களில் இதுவும் ஒன்று.
  3. இம்மாநிலம் 12 நகரங்களையும்; 3649 கிராமங்களையும் கொண்டுள்ளது

வணிகம்

காற்றாலை மின் உற்பத்திக்கு பணம் அளிப்பதில் தாமதம்: இந்தியா ரேட்டிங்ஸ் ஆய்வில் தகவல்
  • காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு பணம் செலுத்த மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் 180 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொள்வதாக இந்தியா ரேட்டிங்ஸ் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.
  • 2019-ம் நிதியாண்டுக்கான ஆய்வறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
  • குஜராத், பெங்களூர் மற்றும் தெலுங்கானாவில் 30 நாட்களில் பணம் கொடுக்கப்படுகின்றன. ஆனால் சோலார் நிறுவனங்கள் தமிழகத்தில் பணம் பெற 90 நாட்களுக்கு மேல் ஆகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.
முக்கியமான குறிப்புக்கள்
  1. தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் 7 ஆயிரத்து 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திறன் உள்ளது.
  2. இதற்காக 11 ஆயிரத்து 800 காற்றாலைகள் நிறுவப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் செலவிடும் தொகை 10,000 கோடி டாலராக அதிகரிக்கும்: பாஸ்டன் கன்சல்டிங் குழுமம், கூகுள் நிறுவனம் ஆய்வு
  • ஆன்லைன் வழியாக நுகர்வோர் செலவிடும் தொகை 2020-ம் ஆண்டுக்குள் 10,000 கோடி டாலராக அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • இ-காமர்ஸ் நிறுவனங்கள், சுற்றுலா மற்றும் போக்குவரத்து, நிதிச் சேவை சார்ந்து இந்த வளர்ச்சி இருக்கும்.
  • இணையதளம் வழி யான வர்த்தகம் சுமார் 2.5 மடங்கு வளர்ச்சியடையும் என்றும் கூறியுள்ளது.
முக்கியமான குறிப்புக்கள்
  1. நிறுவியது - செப்டம்பர் 7 1998
  2. தலைமையகம் - மவுண்டன் வியூ, கலிபோர்னியாஐக்கிய அமெரிக்கா

விளையாட்டு

கப்தில் 49 பந்து சாதனை சதம் வீண்: டி20 விரட்டலில் ஆஸ்திரேலியா உலக சாதனை!
  • ஆக்லாந்தில் 16.02.2018 நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் போட்டியில் நியூஸிலாந்து 20 ஓவர்களில் 243 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா 18.5 ஓவர்களில் 245/5 என்று எடுத்து உலக சாதனை டி20 விரட்டலில் அதிரடி வெற்றி பெற்றது.
  • கப்தில் 49 பந்துகளில் எடுத்த சதம், டேவிட் வார்னர் (59), டியார்க்கி ஷார்ட் (76) ஆகியோரது அதிரடியில் மறைந்து போனது. இந்தப் போட்டியில் மொத்தம் 32 சிக்சர்கள் 28 பவுண்டரிகள் விளாசப்பட்டன.
  • 32 சிக்சர்கள் ஒரு போட்டியில் என்பது இன்னொரு டி20 உலக சாதனையாகும்
முக்கியமான குறிப்புக்கள்
  1. ஆஸ்திரேலியா ஆளுநர் - குவெண்டின் பிரைசு
  2. பிரதமர் - டோனி அபோட்

PDF Download

No comments:

Post a Comment