Sunday 11 February 2018

பிப்ரவரி 9 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

பிப். 11-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 விஏஓ தேர்வு: 20.7 லட்சம் பேர் எழுதுகிறார்கள்: நடைமுறைகள் அறிவிப்பு
முக்கியமான குறிப்புக்கள்
  1. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும்.
  2. 1929இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பெற்ற ஒரு சட்டத்தின் மூலம் ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பெற்றது.
தலைமைச் செயலக மக்கள் தொடர்பு அதிகாரியாக ஷேக் முகமது நியமனம்
முக்கியமான குறிப்புக்கள்
  1. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம்  அமைந்துள்ளது.
  2. ஷேக் முகமது - அதிமுகவில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரான தமிழ் மகன் உசேனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டில் தமிழகம் முழுவதும் தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா வசதி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
முக்கியமான குறிப்புக்கள்
  1. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் - பிரதீப் யாதவ்
  2. தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் - டி.ஜெகந்நாதன்
  3. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்- சீனிவாசன்
  4. செயலாளர் - எம்.பழனிச்சாமி
  5. பள்ளிக்கல்வி இயக்குநர் -ஆர்.இளங்கோவன்
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை: பிப்.24-ம் தேதி திறக்க ஏற்பாடுகள் தீவிரம்
முக்கியமான குறிப்புக்கள்
ஜெயலலிதா 
  1. முன்னாள் தமிழக முதல்வர் ,அதிமுக பொதுச் செயலாளர்.
  2. 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி காலமானார்.

இந்தியா

பெங்களூரு மெட்ரோ ரயிலில் மகளிருக்கு தனிப் பெட்டி: மார்ச் மாதம் முதல் அமல்
முக்கியமான குறிப்புக்கள்
  1. பெங்களூரு மெட்ரோ ரயில் - 2011 அக்டோபர் 20-ஆம் தேதி நடுவண் அமைச்சர் கமல்நாத் தொடங்கி வைத்தார்.
  2. இது கொல்கத்தா, தில்லி நகரங்களுக்கு அடுத்து இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள மூன்றாவது விரைவுப் போக்குவரத்து அமைப்பு.
ஒரே நாளில் கோடீஸ்வர கிராமமாக மாறிய அருணாச்சலப் பிரதேசத்தின் போம்ஜா!
மார்ச் 11-ல் மூன்று மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் மக்களவை தொகுதிகளுக்கும் பிஹாரின் அராரியா மக்களவை தொகுதிக்கும் வரும் மார்ச் 11-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
  • அதேபோல், பிஹாரின் பபுவா மற்றும் ஜெகனாபாத் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அதே நாளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான குறிப்புக்கள்
  1. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் தொகுதிகளின் எம்.பி.க்களான யோகி ஆதித்யநாத்தும், கேசவ் பிரசாத் மவுரியாவும் தத்தம் பதவியை ராஜினாமா செய்தனர். முதல்வர், துணை முதல்வர் பதவியை ஏற்கும்வகையில் அவர்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர்.
  2. பிஹாரின் பபுவா சட்டப்பேரவை உறுப்பினர் பூஷன் பாண்டே, ஜெகனாபாத் சட்டப்பேரவை உறுப்பினர் முந்த்ரிகா சிங் யாதவ் ஆகியோரது மறைவை அடுத்து அந்த இரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

உலகம்

மாலத்தீவு அரசியல் நெருக்கடி: ட்ரம்ப், மோடி ஆலோசனை
  • மாலத்தீவில் நிகழும் அரசியல் நெருக்கடி குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பும், மோடியும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
  • இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், “இரு நாட்டு தலைவர்களும் இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றாக பணியாற்றுவதற்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
  • மேலும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
முக்கியமான குறிப்புக்கள்
  1. மாலத்தீவு இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து  சுமார் 700 கிமீ தென்மேற்காகவும் அமைந்துள்ளது.
  2. அரசுத்தலைவர் - முகமது வாகித் அசன்

வணிகம்

கத்தாரில் இந்தியர்களுக்கு தொழில் வாய்ப்பு: தோஹா வங்கி தலைமை செயல் அதிகாரி பேட்டி!
முக்கியமான குறிப்புக்கள்
  1. மயிலாடுதுறையில் பிறந்து சீதாராமன் அவர் தற்போது முன்னணி வங்கியாளராக விளங்கி வருகிறார்.
முருகப்பா குழுமத் தலைவராக எம்.எம். முருகப்பன் நியமனம்
முக்கியமான குறிப்புக்கள்
  1. 1900 ஆண்டு உருவான முருகப்பா குழுமம் தற்போது ரூ 30,000 கோடி மதிப்புள்ள குழுமமாகத் திகழ்கிறது.
  2. ஏ. வெள்ளையன் - அண்ணா பல்கலையில் ரசாயன பொறியியலில் இளங்கலைப் பட்டமும், மிச்சிகன் பல்கலையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

விளையாட்டு

உலக குத்துச் சண்டை: தான்சானியா வீரர் சாதிக்கி மொம்பாவுடன் மோதும் காமன்வெல்த் தங்கம் வென்ற அகில் குமார்
  • புதுடெல்லியில், பிப்ரவரி 10 அன்று நடைபெற உள்ள குத்துச்சண்டைப் போட்டியில் தான்சானியா வீரர் சாதிக்கி மொம்பாவுடன் காமன்வெல்த்தில் தங்கம்வென்ற அகில் குமார் மோத உள்ளார்.
முக்கியமான குறிப்புக்கள்
  1. அகில் குமார் மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றவர்.
  2. சாதிக்கி மொம்பா அனுபவமிக்க ஒரு குத்துச்சண்டை வீரர், கலந்துகொண்ட 37 போட்டிகளில் 25 முறை வென்று சாதித்தவர்.
FEB-9 PDF Download

No comments:

Post a Comment