Wednesday 7 February 2018

பிப்ரவரி 6 நடப்பு நிகழ்வுகள்

1. ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய ஜிஎஸ்டி வரி
  •  ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கும், சேவை என்ற பிரிவின் கீழ் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதார் அட்டையில் சில குறிப்பிட்ட திருத்தங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.
  • அதன்படி, 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால், இப்போது வசூலிக்கப்படும் 25 ரூபாயோடு, கூடுதலாக 4 ரூபாய் 50 காசுகள் கொடுக்க வேண்டியிருக்கும்.


2. அக்னி I விண்ணில் பாய்ந்தது: அணு ஆயுதம் தாங்கிச்செல்லும் திறன்கொண்ட ஏவுகணை சோதனையில் வெற்றி
  •  ஏவுகணை அணுஆயத வெடிபொருட்களை ஏந்திச்செல்லும் திறன் கொண்டது. இது பயனாளியின் தரப்பு சோதனையின் ஒரு பகுதியாக ஒடிசா கடற்கரையிலிருந்து இந்திய ராணுவத்தினரால் ஏவப்பட்டது.
  • பலாசோரில் உள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சின் பேட் -4ல் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவிற்கான இந்த பயனாளி ஏவுகணைச் சோதனையை இந்திய இராணுவப் படைகள் நடத்தியது .
3. 'நாங்கள் ஒன்றும் குப்பை பொறுக்குபவர்கள் அல்ல'- மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
  • திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக முழுமையான தகவல்கள் இல்லாத 845 பக்க பிரமாண பத்திரத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'நாங்கள் ஒன்றும் குப்பை பொறுக்குபவர்கள் அல்ல' என்று மத்திய அரசை கடுமையாக சாடினர்.
4. கடற்கொள்ளையர்கள் பிடித்து வைத்திருந்த 22 இந்தியர்களும், கப்பலும் 4 நாட்களுக்குப் பின் விடுதலை
  • மேற்கு ஆப்பிரிக்க கடற்கரைப்பகுதியில் 22 இந்தியர்கள் சென்ற எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர் பிடித்து வைத்து இருந்தனர்.  4 நாட்களுக்குப் பின் நேற்று விடுதலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • மும்பையில் இருந்து 'தி மரைன் எக்ஸ்பிரஸ்' எனும் எண்ணெய் கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜிரியா நாட்டுக்குச் சென்றது. பெனின் நாட்டுக்கு அருகே கினியா வளைகுடா கடற்பரப்பில் சென்றபோது,  அந்த கப்பல் திடீரென மாயமானது. அதைத் தொடர்ந்து பல்வேறு தேடுதலுக்கு பின், கடற் கொள்ளையர்கள் பிடித்து வைத்து இருப்பதாக செய்திகள் தெரிவித்தன. 4 நாட்கள் நடத்தப்பட்ட பேச்சுக்கு பின் இப்போது, 22 இந்தியர்களையும், கப்பலையும் கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்
5. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விற்பனை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் குழப்பம்
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்) விற்பனை தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் (இசிஐ) வெளியிட்டுள்ள உத்தரவால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
  • இவிஎம்-களைத் தயாரிக்கும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) மற்றும் இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பொரேஷன் (இசிஐஎல்) நிறுவனங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவுகளை அனுப்பியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவால்தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
6. மீனாட்சி கோயில் தீ விபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து சம்பவம் தொடர்பான வழக்கு தேவைப்பட்டால் சிபிசிஐடிக்கு மாற்றப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
  • மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சேமடைந்தன. இதுகுறித்து கோயில் காவல் நிலைய போலீஸார் எதிர்பாராத விபத்து என வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான குழுவினர் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment