Tuesday 20 February 2018

பிப்ரவரி 19 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

பிப்.22-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
  • காவிரி பிரச்சினை பற்றி ஆலோசிக்க பிப்.22-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட உள்ளதாக முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  • தலைமைச் செயலகத்தில் சிங்காரவேலர் மாளிகையின் 10-வது தளத்தில் பிப்.22 காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கும் என்றும், கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் அலுவலக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் அறிவிப்பு
  • பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்: தமிழ்-299; ஆங்கிலம் - 237; கணிதம் - 468; அறிவியல் - 731; சமூக அறிவியல் - 488.
  • ஆசிரியர் பணி நியமனத்தைப் பொறுத்தவரையில், 50 % நேரடி நியமன முறையிலும், 50 %பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.
  • பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது.
  • வெயிட்டேஜ் முறையில், தகுதித்தேர்வு தேர்ச்சிக்கு 60 சதவீதமும், பிளஸ் 2, பட்டப் படிப்பு, பிஎட். மதிப்பெண்-க்கு 40 சதவீதமும் வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

ஹைதராபாத்தில் சர்வதேச தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு: காணொளி மூலம் தொடக்கி வைத்தார் மோடி
  • ஹைதராபாத் ஹைடெக்ஸில் 3 நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு மாநாட்டை 19.02.2018 காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து காணொளி மூலம் தொடக்கி வைத்தார்.
  • இந்தக் கருத்தரங்கில் தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி. ராமாராவ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
  • இதில் 30 நாடுகளைச் சேர்ந்த 2,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவு: பாஜகவுக்கு மீண்டும் சவாலாகும் காங்கிரஸ்
  • குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன.
  • தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோதிலும், முந்தைய தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் வலிமையான எதிர்கட்சியாக உள்ளது.
பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
  • நாட்டிலேயே முதல்முறையாக பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில், ரோபோ எந்திரத்தை களம் இறக்கும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.
  • கேரளாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘ஜென்ரோபாட்டிக்ஸ் ‘தாங்கள் தயாரித்த ரோபோ எந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. இந்த ரோபோவுக்கு ‘பெருச்சாளி’ என பெயர் வைத்துள்ளது.

உலகம்

மெக்சிகோவில் மிதமான நிலநடுக்கம்
  • மெக்சிகோவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
  • இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், "மெக்சிகோவின் சாண்டா கேட்ரினா, ஒசாகா ஆகிய நகரங்களில் இன்று (திங்கட்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • ரிக்டர் அளவுகோலில் 5.9  ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 40 மீட்டர்ஸ் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
சவுதி பெண்கள் தொழில் தொடங்க இனி ஆண்கள் அனுமதி தேவையில்லை
  • சவுதி அரசின் பாதுகாப்பாளர் சட்டத்தின்படி, பெண் ஒருவர் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்றால், தந்தை, சகோதரர் கணவர் ஆகியோரில் ஒருவரது அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்தச் சட்டத்தை நீக்கக் கோரியும், திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் சவுதி பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன.
  • இந்த நிலையில் தனியார் துறையை விரிவுப்படுத்துவதை கருத்தில் கொண்டு பெண்கள் தொழில் தொடங்க இனி ஆண்கள் அனுமதி தேவையில்லை என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.

வணிகம்

வெற்றி மொழி: பாப் மார்லி
  • ஒரு இசைப்போராளியாக அறியப்பட்டவர்.
  • ஜமைக்காவின் கலாசாரம் மற்றும் அடையாளத்தின் சின்னமாகத் திகழ்ந்ததோடு, இருபதாம் நூற்றாண்டின் சர்வதேச இசை மற்றும் கலாசாரத்தின் முக்கிய நபராகவும் விளங்கினார்.
  • வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருது, சர்வதேச அமைதி விருது உட்பட பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.
மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் பேட்டரி பஸ் தயாரிக்கும் சீன நிறுவனம்
  • ஆட்டோமொபைல் துறை இப்போது பேட்டரி வாகனத் தயாரிப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
  • பொது போக்குவரத்தில் அதிகம் பயன்படும் பஸ்கள் தயாரிப்பிலும் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளன.
  • தற்போது சீனாவைச் சேர்ந்த பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் பேட்டரி பஸ்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

விளையாட்டு

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
  • வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.
  • புவனேஷ்வர் குமார் 4 ஒவர்கள் 24 ரன்களுக்கு 5 விக்கெட் என்று டி20 சிறந்த பந்து வீச்சை நிகழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார், டி20 தொடரிலும் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றது.

PDF Download

No comments:

Post a Comment