Monday 12 February 2018

பிப்ரவரி 10 & 11 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம் :

அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கான தொழில் வரியை 35% வரை உயர்த்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை
  • சென்னையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரி யும் ஊழியர்களுக்கான தொழில் வரியை 5 ஆண்டுகளுக்கு பிறகு 35 சதவீதம் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு 2 இதய வால்வுகளை மாற்றி டாக்டர்கள் சாதனை
  • நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஏகராசிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். விவசாயி. இவரது மனைவி மைனாவதி (30)மைனாவதியின் இதயத்தில் செயல்படாமல் இருந்த 2 வால்வுகளை அகற்றி, புதிய வால்வுகளைப் பொருத்தினர். மற்றொரு வால்வை சரி செய்து, மீண்டும் பொருத்தினர்.
  • மிக நுண்ணியமான முறையில் நடைபெற்ற இந்த அறுவைசிகிக்சையை செய்த மருத்துவக் குழுவினரை, அரசு மருத்துவமனை டீன் அசோகன் பாராட்டினார்.
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் தொடங்கியது: ஓஎன்ஜிசி துரப்பண பணிக்கும் ஆயத்தம்
  • திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள திருமக்கோட்டையில் இயங்கி வரும் அனல் மின் நிலையத்துக்கு நல்லூர் ஓஎன்ஜிசி எரிவாயு சேமிப்பு மையத்தில் இருந்து கெயில் நிறுவனம் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து குழாய் அமைத்து இயற்கை எரிவாயுவை எடுத்து வருகிறது.
  • இந்தக் குழாயின் கால அவகாசம் 15 ஆண்டுகளைத் தாண்டிவிட்டதால், அக்குழாயை உடனடியாக மாற்றிவிட்டு வேறு குழாய் பதிக்க வேண்டிய சூழல் உள்ளதெனக் கூறி கடந்த 2 ஆண்டுகளாக புதிய குழாய் அமைக்கும் பணியில் கெயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
புதுவைக்கு மோடி வருகிறார்: ஆரோவில் பொன்விழாவில் பங்கேற்பு
  • சர்வதேச நகரமான ஆரோவில்லின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி புதுவை வருகிறார். சென்னை துறைமுகத்துடன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துறைமுகத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி கொள்கலன் சரக்குகளை கையாளக்கூடிய வகையில் இத்துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவுக்கு இந்திய தூதர்களை அனுப்பி அமைதியை நிலைநாட்ட வேண்டும்: இந்திய - மாலத்தீவு நட்புறவு கழகம் வலியுறுத்தல்
  • மாலத்தீவுக்கு இந்திய தூதர்களை அனுப்பி அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று மாலத்தீவில் உள்ள இந்திய - மாலத்தீவு நட்புறவு கழக நிறுவனர் ஹிம்மத் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் பற்றி வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம்
  • ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் புகழ்பெற்ற தமிழ் ஆளுமைகளைப் பற்றி கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார்.
பிப்.13 முதல் தமிழகம் முழுவதும் இணையவழியில் மட்டுமே பத்திரப்பதிவு: 10 நிமிடத்தில் வேலை முடியும்
  • தமிழகத்தில் பிப்ரவரி 13-ம் தேதி முதல் முழுமையாக இணைய வழியில் மட்டுமே பத்திரப் பதிவு செய்யப்படும் என்று மதுரை மண்டல பதிவுத் துறை துணைத் தலைவர் சிவக்குமார் தெரிவித்தார்.
அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றதால் கல்விச் சுற்றுலா: நாசா செல்லும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
  • சென்னை மாநகராட்சி அளவில் நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் 8 பேர் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் அமெரிக்காவின் நாசா விண் வெளி ஆய்வு மையத்துக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
சிசிடிவி கேமரா, வை-பை உட்பட 11 புதிய வசதிகளுடன் சதாப்தி ரயிலில் புதுப்பிக்கப்பட்ட பெட்டி: நேற்று முதல் இணைத்து சோதனை முறையில் இயக்கம்
  • சதாப்தி விரைவு ரயிலில் சிசிடிவி கேமரா, வை-பை வசதி, சொகுசு இருக்கைகள் உட்பட 11 புதிய வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட பெட்டி நேற்று முதல் இணைத்து இயக்கப்பட்டது.
கொழும்பு மாநாகராட்சி தொடங்கப்பட்ட 152 ஆண்டுகளில் முதல் பெண் மேயராக ரோசி சேனாநாயக்க தேர்வு
  • இலங்கையில் கொழும்பு மாநகராட்சி தொடங்கி 152 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் முறையாக பெண் மேயராக முன்னாள் திருமதி உலக அழகியான ரோசி சேனாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியா:

பிரதமரின் ஆராய்ச்சி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: பிஹெச்டி மாணவர்கள் மாதம் ரூ.80 ஆயிரம் பெறுவர்
  • நாட்டில் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில், ‘பிரமதரின் ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, ஐஐடி, என்ஐடி போன்ற முன்னணிக் கல்வி நிறுவனங்களில் பி.டெக். படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களில் சுமார் 1000 பேர் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் நேரடியாக ஆராய்ச்சிப் படிப்பை (பிஹெச்டி) மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சிறந்த பிஹெச்டி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை உதவித்தொகையாக வழங்கப்படும். 2018-19-ம் நிதியாண்டில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
மானசரோவர் யாத்திரை நாதுலா பாதையை திறந்தது சீனா
  • கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நாதுலா கணவாய் பாதையை சீனா திறந்து விட்டுள்ளது.
  • டோக்லாம் பிரச்சினை காரணமாக நாதுலா பாதை வழியாக கடந்த ஆண்டு கைலாஷ் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து சீன அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து நாதுலா பாதையை சீனா தற்போது திறந்துள்ளது என்றார்.
சுகாதார குறியீட்டு பட்டியல்: கேரளா முதலிடம்; தமிழகம் மூன்றாவது இடம்
  • நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள நாட்டின் சுகாதார மற்றும் உடல்நலக் குறியீடு பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிஹார் போன்ற மாநிலங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.
  • நாடுமுழுவதும் மக்களுக்கு கிடைக்கும் சுகாதார வசதி, உடல்நலம் பேணும் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் நிதி ஆயோக் ஆய்வு செய்துள்ளது.
கல்விக் கடன் விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலமே வங்கிகள் ஏற்கும்
  • மாணவர்கள் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களை மட்டுமே ஏற்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அரசு சார்பில் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை: முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு
  • அயோத்தி சர்ச்சையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்போம். அதற்கிடையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தெரிவித்துள்ளது.
பெண்கள் பீர் குடிப்பது குறித்த மனோகர் பாரிக்கர் கருத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்: இந்திய அளவில் டிரெண்டாகும் #GirlsWhoDrinkBeer
  • இளம் பெண்கள் பீர் குடிப்பது குறித்து கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறிய கருத்தால் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
  • ‘‘கோவா மாநிலத்தில் இளைய தலைமுறையினரிடையே போதை பழக்கம் அதிகரித்து வருவது வேதனையை தருகிறது. இளம் பெண்கள் கூட பீர் குடிப்பதை பார்க்கும் போது கவலை ஏற்படுகிறது. ஐஐடியில் நான் படிக்கும்போதுகூட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தன.
2ஜி மேல்முறையீடு வழக்கறிஞராக துஷார் நியமனம்
  •  “2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மேல் முறையீடு செய்வது, அரசு தரப்பில் வாதங்களை எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளை கவனிக்க, மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
60 நாடுகளின் 200 படம் திரையிடல்: 22-ல் சர்வதேச திரைப்பட விழா பெங்களூருவில் தொடக்கம்- இரு தமிழ் திரைப்படங்கள் தேர்வு
  • பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் 10-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக சர்வதேச அளவில் 800 திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக 60 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திரைப்படங்கள் விழாவின்போது திரையிடப்படும்.

உலகம் :

வட கொரியாவின் ராணுவ தலைவர் திடீர் பணி நீக்கம்
  • வட கொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்றது முதலாக, அதற்கடுத்த உயர் பதவியான ராணுவ தலைவர் பதவியை வாங் பியாங் வகித்து வந்தார்.
  • அவரது அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசுப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சில ஒப்பந்தங்கள் தொடர்பாக வாங் பியாங் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • அந்தப் பதவியிலிருந்து வாங் பியாங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அந்தப் பதவியை ராணுவ அமைச்சராக இருக்கும் கிம் ஜாங் காக் கூடுதலாக கவனிப்பார் என்று அரசு தெரிவித்துள்ளது.
அபுதாபியில் முதல் இந்து கோயில்: அடிக்கல் நாட்டினார் மோடி
  • ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அபுதாபி நகரில் முதல் இந்து கோயில் கட்டும் திட்டத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
  • மேற்கு ஆசியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். பாலஸ்தினம், ஜோர்டான் நாடுகளில் பயணத்தை முடித்து, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு நேற்று மோடி வந்தார்.
இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: ராஜபக்ச கட்சி அபார வெற்றி
  • இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்ச தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி (எஸ்எல்பிபி) கட்சி ஒட்டுமொத்தமாக 45 சதவீத வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வணிகம் :

நீண்டகால மூலதன ஆதாய வரி: கடினமான முடிவாக இருந்தாலும் பலன் தரக்கூடியது- மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
  • பட்ஜெட்டில் நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்பட்டது. இது கடினமான முடிவுதான் என்றாலும் முந்தைய அரசுகளை போல கடினமான முடிவுகளை எடுக்க இந்த அரசு தயங்காது என அருண் ஜேட்லி கூறினார்.
180 நாட்களுக்குள் கடனை திரும்ப செலுத்தலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு பின்னலாடை துறையினர் வரவேற்பு
  • பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி விதிப்புக்கு பின் பல்வேறு தொழில்கள் முடக்கம் அடைந்தன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், வங்கியில் தொழிலுக்காக பெறப்படும் கடனை 90 நாட்களில் திரும்ப செலுத்த வேண்டும் என்பதை, 180 நாட்கள் வரை தளர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதை தொழில்துறையினர் வரவேற்றிருக்கின்றனர்.
பாரத் மேட்ரிமோனி தொடர்ந்த வழக்கில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.136 கோடி அபராதம்
  • கூகுள் நிறுவனத்துக்கு போட்டி ஒழுங்குமுறை ஆணையம் ரூ.136 கோடி அபராதம் விதித்துள்ளது. இணைய தேடுதல் மற்றும் விளம்பரங்களைத் தேடுவதில் பாரபட்சமாக நடந்து கொண்டதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷியாவில் கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையமும் கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கிரிப்டோ கரன்சி விதிமுறைகள்: செபி தலைவர் அஜய் தியாகி தகவல்
  • பிட்காயின் பரிவர்த்தனையை அரசு அனுமதிக்காது என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திட்டவட்டமாக அறிவித்த நிலையிலும் இது தொடர்பான குழப்பம் இன்னமும் நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் பண பரிவர்த்தனை தொடர்பான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று செபி தலைவர் அஜய் தியாகி கூறினார்

விளையாட்டு :

கோலாகலமாகத் தொடங்கியது குளிர்கால ஒலிம்பிக் போட்டி
  • 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க விழாவுடன் தென் கொரியாவின் பியாங்சங் நகரில் நேற்று தொடங்கியது.
ஐசிசி இயக்குநராக இந்திரா நூயி நியமனம்
  • பெப்சி நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) முதல் தன்னாட்சி பெண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் மாதம் முதல் இந்த பொறுப்பை அவர் வகிப்பார் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி... சென்னையின் மறக்க முடியாத நாள்
  • இந்திய கிரிக்கெட் அணிக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் முதல் வெற்றியை இன்றுதான் பெற்றது. அதுவும் இந்த வெற்றி சென்னை மைதானத்தில் கிடைத்தது மிகச்சிறப்பாகும்.
சாஹல், குல்தீப் யாதவுக்கு விளாசல்; தென் ஆப்பிரிக்கா வெற்றி
  • வாண்டரர்ஸ் ஒருநாள் போட்டியில் தொடரை இழக்கும் அபாயத்துடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை முதலில் 289 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது,
  • பிறகு மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் டக்வொர்த் முறையில் திருத்தப்பட்ட இலக்கான 28 ஓவர்களில் 202 ரன்கள் இலக்கை 25.3 ஓவர்களில் விரட்டி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி: டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது
  • வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 215 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 1-0 கைப்பற்றியது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டி: முதல் தங்கத்தை வென்றது சுவீடன்
  • குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை சுவீடன் நாட்டின் கிராஸ் கன்ட்ரி ஸ்கையர் வீராங்கனையான சார்லோட் கல்லா வென்றார்
  • 23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவின் பியாங்சங் நகரில் நேற்றுமுன்தினம் கோலாகலமாக தொடங்கியது. நேற்று 5 பிரிவுகளில் தங்கப் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெற்றன.

Feb-10-11-tamil PDF Download

No comments:

Post a Comment