Friday 9 February 2018

பிப்ரவரி 8 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

தமிழக மாணவர்களுக்கு ரஷ்யாவில் இலவசமாக அணு தொழில்நுட்ப படிப்பு: 
  • ரஷ்ய பல்கலைக்கழத்தில் முதுகலை அணு தொழில்நுட்ப படிப்பு படிக்க தமிழகத்தைச் சேர்ந்த 5 பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
  • இதுகுறித்து ரஷ்ய துணை தூதர் மிக்கைல் கார்ப்படோவ் சென்னையில் நிருபர்களிடம்,இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து கூடங்குளத்தில் அணுமின் நிலைய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 20 அணுமின் நிலையங்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஒரு அணுமின் நிலையத்துக்கு 1,525 அணு தொழில்நுட்ப நிபுணர்கள் தேவைப்படுவர். எனவே, வரும் காலத்தில் இந்தியாவில் அணு தொழில்நுட்ப நிபுணர்கள் அதிகம் வேண்டும்.


  • ரஷ்யாவில் உள்ள தேசிய அணு ஆராய்ச்சி பல்கலைக்கழகம் அணு தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டப் படிப்பை வழங்கி வருகிறது.
முக்கியமான குறிப்புக்கள்
  1. ரஷ்யாவின் சனாதிபதி - விளாதிமிர் பூட்டின்
  2. பிரதமர் - திமித்ரி மெட்வெடெவ்
தமிழகத்தின் சிறந்த ஊராட்சியாக புதுமடம் கிராமம் தேர்வு
  • தமிழ்நாட்டின் சிறந்த ஊராட்சியாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த புதுமடம் கிராமம் மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாய கிராம விருதிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முக்கியமான குறிப்புக்கள்
  1. தமிழ்நாட்டில் மொத்தம் 12,524 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.
  2. தமிழக ஊராட்சி மன்றங்கள் தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர்.

இந்தியா

தகுந்த சூழ்நிலைகளில் உயர் நீதிமன்ற வாதங்களில் உள்ளூர் மொழியை பயன்படுத்தலாம்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கருத்து
  • உள்ளூர் மொழிகளை உயர் நீதிமன்றங்களில் நடைபெறும் வாதத்தில் தகுந்த சூழ்நிலைகளில் பயன்படுத்தலாம் என்று குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு கூறினார்.
முக்கியமான குறிப்புக்கள்
முதல் குடியரசு துணைத் தலைவர்
  1.  ராஜேந்திர பிரசாத் (1950)
  2. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்(1952)
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா மஸ்தகாபிஷேக விழா கர்நாடகாவில் கோலாகலம்: குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
  • கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஷரவண பெலகோலா சமணர்களின் புனித தலமாக விளங்குகிறது. இங்குள்ள வித்யகிரி மலையில் சமண பகவான் பாகுபலி கோமதேஷ்வரின் 59 அடி உயர பிரம்மாண்ட பிரதிஷ்டை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பாகுபலி மூர்த்திக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சமண மத குருமார்களால் மகா மஸ்தகாபிஷேகம் செய்யப்படுகிறது.
முக்கியமான குறிப்புக்கள்
கர்நாடகா
  1. முதலமைச்சர் - கே. சித்தராமையா
  2. ஆளுநர் - வஜூபாய் வாலா
டெல்லி மாணவர்இளைய இந்தியா மாணவர்விருதை வென்றார்
  • டெல்லியை சேர்ந்த மாணவர் கட்டுரை போட்டி ஒன்றில் இங்கிலாந்து நாட்டின் பாத் பல்கலை கழகத்தின் “இளைய இந்தியா மாணவர்”விருதை வென்றுள்ளார்.
முக்கியமான குறிப்புக்கள்
டெல்லி
  1. முதலமைச்சர் - அரவிந்த் கெஜ்ரிவால்
  2. ஆளுநர் - அனில் பைஜால்

உலகம்

வடகொரியா உலகத் தரம் வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ளது: கிம்
  • வடகொரியா உலகில் தரம் வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ளது என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.
  • தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவுக்கு முன்னதாக வடகொரியாவில் அந் நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் முன்பாக ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

வணிகம்

ஜிஎஸ்டி ஏய்ப்பு 5 மாதங்களில் ரூ.5.7 கோடி: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்
  • சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் ( ஜிஎஸ்டி) அமலாக்கம் செய்த பிறகு ரூ.5.70 கோடி வரி ஏய்ப்பை அரசு கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனங்கள் விவகாரத்துறை இணை அமைச்சர் பிபி சவுத்திரி மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறினார்.
முக்கியமான குறிப்புக்கள்
  1. ஜிஎஸ்டி - இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநிலஅரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்த பட்டிருக்கிறது.
3 ஆயிரம் மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் விரைவில் ஏலம்: மனோஜ் சின்ஹா அறிவிப்பு
  • மத்திய அரசு 3 ஆயிரம் மெகா ஹெர்ட்ஸ் ரேடியோ அலைக்கற்றையை ஏலம் விட திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தைக் காட்டிலும் அதிக அளவு மெகா ஹெர்ட்ஸை கொண்டதாக இந்த ஏலம் இருக்கும் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
முக்கியமான குறிப்புக்கள்
  1. ஹெர்ட்ஸ் - அதிர்வெண் ஒரு வினை(process) அல்லது அலையில் (signal) ஒரு நொடியில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் இயற்பியல் பண்பாகும்.
  2. மெகா ஹெர்ட்ஸ் megahertz (106 Hz,குறியீடு MHz)

விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவில் 09.02.2018 தொடக்கம்:
  • தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கேலாகலமான தொடக்க விழாவுடன் 09.02.2018 தொடங்குகின்றன.
  • 23-வது குளிர்கால ஒலிம்பிக் தொடரான இதில் 92 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். தென் கொரியாவுடன், தீவிர பகை நாடான வட கொரியாவும் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளது.
முக்கியமான குறிப்புக்கள்
தென் கொரியா
  1. பிரதமர் - ஹுவாங் கியோ-அஹ்ன்
  2. குடிஅரசு தலைவர் - பார்க் கீன்-ஹை
200 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்திய இந்திய வீராங்கனை!
  • 35 வயதான ஜுலன், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.
முக்கியமான குறிப்புக்கள்
ஜுலன்
  1. பிறப்பு - 25 நவம்பர் 1982
Feb-8-PDF Download

 

No comments:

Post a Comment