Wednesday 14 February 2018

பிப்ரவரி 13 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

சென்னையில் 2019-ம் ஆண்டு ஜன. 23, 24-ல் உலக முதலீட்டாளர் மாநாடு: தமிழக அரசு அறிவிப்பு
  • தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
  • அதன்பின், முதல்வர் தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
  • இதில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2019-ம் ஆண்டு ஜனவரியில் நடத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியா

மோடி புத்தகங்களை குவிக்கும் மஹாராஷ்டிரா அரசு: காந்தி, அம்பேத்கர் நூல்கள் குறைவு
  • மகாத்மா காந்தி, அம்பேத்கர் குறித்த புத்தகங்களைக் காட்டிலும், பிரதமர் மோடி குறித்த புத்தங்களை மஹாராஷ்டிரா பள்ளிகள் அதிகமாக வாங்கி இருப்பு வைக்க உள்ளன.
  • பிரதமர் மோடி குறித்த புத்தகங்களை மட்டும் ரூ.59.42 லட்சத்துக்கு மகாராஷ்டிரா வாங்க உள்ளது.

உலகம்

இந்தியா _ ஓமன் இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்து
  • ஓமன் நாட்டு மற்றொரு துணைப் பிரதமர் சய்யித் பாத் பின் மஹ்மூத் அல் சைத்தை மோடி சந்தித்தார். அப்போது, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
  • ராணுவ ஒத்துழைப்பு, சுற்றுலா, சுகாதாரம், கல்வி உட்பட 8 துறைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

வணிகம்

ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு: ஜனவரியில் 14% உயர்வு
  • இந்தியாவில் தொழில்துறை சற்று சீரடைந்து வருவதால் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வது அதிகரித்து வருவதாகவும் ஆன்லைன் மூலம் வேலை ஆட்கள் தேர்வு, இந்த ஜனவரியில் 14 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விளையாட்டு

டி20 கிரிக்கெட்: வில்லியம்சன் அதிரடியில் நியூசிலாந்து வெற்றி: இங்கிலாந்து மீண்டும் தோல்வி
  • வெலிங்டன் நகரில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் கேன் வில்லியம்சன் 46 பந்துகளுக்கு 72 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.
  • இதன் மூலம் இங்கிலாந்து அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது.

PDF Download

No comments:

Post a Comment