Thursday 1 March 2018

பிப்ரவரி 28 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

மணமக்களின் மருத்துவ தகுதிச்சான்று திருமண பதிவுக்கு அவசியம் என அறிவிக்க கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
  • திருமண பதிவுக்கு மணமக்களின் மருத்துவ தகுதிச்சான்று அவசியம் என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஆயுஷ்மான் பாரத்திட்டத்திற்கு மக்கள் மூலம் இலட்சினையை பெற சுகாதார அமைச்சகம் திட்டம்
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, முழுமையான சுகாதாரத்திற்கான இரண்டு பெரும் முயற்சிகளை அரசு அறிவித்துள்ளது.
  • 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கியமான மையங்கள் மக்களை மையப்படுத்திய முழுமையான முதல்கட்ட சுகாதார சேவையை அளிக்கும்.
  • ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இரண்டாவதாக தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் அதிகமான ஏழைகள் மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு (சுமார் 50 கோடி ஏழைகள்) குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் வரை இரண்டாவது கட்ட மற்றும் மூன்றாவது கட்ட, மருத்துவமனை சிகிச்சைக்கு அளிக்கப்படும்.

இந்தியா

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பாலர் ஆதார் அடையாள அட்டை அறிமுகம்:
  • ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பாலர் ஆதார் அடையாள அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது.
  • 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு நீல வண்ணத்தில் பிரத்யேக ஆதார் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரிலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு இனி மின்சார கார்
  • அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மின்சார காரில் பயணம் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் அமலாக உள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்தார்.
இந்தியா விரைவில் உலகின் 5-வது பொருளாதார வல்லரசாக மாறும் பிரதமர் மோடி உறுதி
  • டெல்லியில், இந்தியா- கொரியா வர்த்தக உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
  • இந்தியா, வர்த்தகத்துக்கு தயாராக உள்ளது. தொழில் தொடங்க சுதந்திரமான நாடாக இந்தியா உள்ளது.
  • உலகில் வேறு எந்த நாட்டிலும் இத்தகைய தடையற்ற, வளரும் சந்தையை பார்க்க முடியாது.
  • எனவே இந்தியா விரைவில் உலகின் 5-வது பொருளாதார வல்லரசாக மாறும் என்று பிரதமர் மோடி கூறினார்.

 உலகம்

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை 24 கோடியாக அதிகரிப்பு
  • சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, தற்போது 24 கோடியை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து ராணுவ கூட்டுப் பயிற்சி: நேபாள அரசு அறிவிப்பு
  • இந்தியாவுடன் இணைந்து ராணுவ கூட்டுப் பயிற்சியில் ஈடுபடப் போவதாக நேபாளம் அறிவித்துள்ளது.
  • இந்த கூட்டுப் பயிற்சியானது உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இதன்படி, வனப் பகுதியில் போர்ப்பயிற்சி, துப்பாக்கிச் சுடும் பயிற்சி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கை பயிற்சி, பேரிடர் காலங்களை எதிர்கொள்வது எப்படி என்பது போன்ற பயிற்சிகளில் இந்திய ராணுவ வீரர்களுடன் நேபாள ராணுவ வீரர்கள் இணைந்து மேற்கொள்ளவுள்ளனர்.
  • இத்தகவலை நேபாளத்திலுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் துணை மந்திரியாக நியமனம்
  • துணை மந்திரியாக பெண் ஒருவரையும் மன்னர் சல்மான் நியமித்துள்ளார். சமூக முன்னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை துணை மந்திரியாக டாக்டர் தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிகம்

ஒரே ஜிஎஸ்டி விகிதம் சாத்தியம் இல்லை: அருண் ஜேட்லி தகவல்
  • அதிக மக்கள் வரி செலுத்தாமல் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் ஒரே வரி விகிதம் என்பது சாத்தியம் இல்லை.
  • அதே சமயத்தில் வரி விகிதங்களை மாற்றம் செய்யும் பணியை மத்திய அரசு தொடர் ந்து செய்யும். அதிக மக்கள் வரி செலுத்தாமல் இருக்கின்றனர்.
  • முதலில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். தவிர வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் ஒரே வரி விகிதத்தை இங்கு கொண்டு வர முடியாது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார்.

விளையாட்டு

நெகிழ வைத்த விராட் கோலி: கேப் டவுன் தண்ணீர் தாகத்தை போக்க 'இந்திய அணி' நிதி உதவி
  • தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் கோலி தலைமையிலான இந்திய அணியும், டூப் பிளசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் இணைந்து ரூ. 5.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளன.

 PDF Download

No comments:

Post a Comment