Thursday 8 February 2018

பிப்ரவரி 7 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

உலக முதலீட்டாளர் மாநாட்டு தனி அலுவலர் நியமனம்: முதல் மாநாட்டு தொடக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது

  • தமிழக அரசு சார்பில் இந்தாண்டு(2018) நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தனி அலுவலராக, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழகத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. 2015-ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டன.

சென்னை துறைமுகத்தில் ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக ரவீந்திர பாபு பதவியேற்பு
  • சென்னை துறைமுக தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக பி.ரவீந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் பிப்.5-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். 1997-ம் ஆண்டு இந்திய ரயில்வே துறையில் மெக்கானிக்கல் இன்ஜினீயராக பணியில் சேர்ந்த ரவீந்திர பாபு, தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி மண்டலத்திலும், தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்திலும் பல் வேறு பதவிகளை வகித்துள்ளார்

இந்தியா

நாட்டில் 1,500 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பற்றாக்குறை: மக்களவையில் அரசு தகவல்
  • நாட்டில் பல்வேறு துறைகளுக்கும், பணிகளுக்கும் 1,500 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறையாக இருக்கின்றனர் என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சங், கடந்த 2017ம் ஆண்டில் 6,500 ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்க வேண்டிய நிலையில், 5,004 அதிகாரிகள் இருக்கின்றனர். 1,496 இடங்கள் காலியாக இருக்கின்றன என்றார்.

உலகம்

உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்: ஸ்போர்ட்ஸ் காரும் பயணிக்கிறது
  • அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கேனவெரல் ஏவு தளத்தில் இருந்தில் உலகிலேயே மிகச் சக்திவாய்ந்த, மிகப் பெரிய ராக்கெட்டை தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் 07.02.2018 அன்று விண்ணில் செலுத்தியது.
  • இந்த மெகா ராக்கெடுடன் டெஸ்லா நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் காரும் பயணிக்கிறது.
  • அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனம் விண்வெளி ஆய்வுகளிலும், ராக்கெட் தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், அரசின் உதவியுடனும், உதவியின்றியும் இதுவரை பல்வேறு ராக்கெட்டுகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்.
வரலாற்றில் முதல்முறையாக தென் கொரியாவுக்கு செல்லும் கிம்மின் சகோதரி
  • வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் வரலாற்றில் முதல் முறையாக தென் கொரியாவுக்கு செல்ல இருக்கிறார்.
  • தென்கொரியாவில் இந்த வாரம் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் வடகொரியாவின் தொழிலாளர் கட்சியின் முக்கிய உறுப்பினராக கிம் யோ ஜாங் பங்கேற்கிறார்.

வணிகம்

கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை’: நிதிக் கொள்கையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  • நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவது, அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகரிப்பு, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால், கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையில அறிவித்தது.
ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் சென்னை ..டி. 103–வது இடத்தை பிடித்தது
  • பல்கலைக்கழகங்களின் செயல்திறன், ஆய்வுகள், கட்டமைப்புகள், கற்பித்தல் திறன் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசை அளிக்கப்பட்டு உள்ளது.
  • அதன்படி சிங்கப்பூரை சேர்ந்த தேசிய பல்கலைக்கழகம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 2–வது இடத்தை பெற்றது.
  • இந்தியாவை சேர்ந்த 42 பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசையில் இடம் பெற்றுள்ளன. இருந்தாலும் பல பல்கலைக்கழங்கள் தங்கள் தரவரிசையில் சறுக்கி உள்ளன. இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (பெங்களூரு) 2 இடம் சறுக்கி 29–வது இடத்தையும், மும்பை ஐ.ஐ.டி. 2 இடம் இறங்கி 44–வது இடத்தையும் பிடித்தது.

விளையாட்டு

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்:
  • ஆசிய பாட்மிண்டன் குழு சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி ஹாங்காங்கை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து ஒற்றையர் பிரிவிலும், இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்று அசத்தினார்.
ஜுலன் கோஸ்வாமி சாதனை:
  • ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் கிரிக்கெட் வீராங்கனையானார் இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி.

PDF feb-7-pdf Download

No comments:

Post a Comment