Wednesday 21 February 2018

பிப்ரவரி 20 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம் :

வட தமிழகம், சென்னையில் ஓரிரு இடங்களில் மூடுபனி கொட்டும்: வானிலை ஆய்வு மையம்
  • ''தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும். வட தமிழகம் மற்றும் சென்னையில் அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மூடுபனி கொட்டும். இதன்காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும்.
  • சென்னையில் பகல்நேரத்தில் மட்டும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்றார்.


மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு பிப்ரவரி 17-20 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்றது. சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், என். சங்கரய்யா ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
  •  80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆந்திராவில் 5 தமிழர்கள் உயிரிழப்பு; சிபிஐ விசாரணை தேவை
  • ''ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் நேற்று முன் தினம் மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னையில் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி
  • அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தை முதல்வர் தலைமையில் அனைத்து தலைவர்களோடு வரும் 24-ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த அனுமதி வழங்கப்படுமேயானால் கருப்புக்கொடி போராட்டம் கைவிடுவது குறித்து பரிசீலிப்போம்.''என்று   பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
இந்தியா :
ரூ.11,400 கோடி வங்கி மோசடி விவகாரம்
  • நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி நிறுவனங்களைச் சேர்ந்த விபுல் அம்பானி உட்பட மூத்த செயலதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது.
  • பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளது.
40 ஆண்டுகளில் இல்லாத திருத்தம்: தனியாருக்கு திறந்துவிட்டது மத்திய அரசு: நிலக்கரியை வர்த்தகரீதியாக விற்க அனுமதி
  • நிலக்கரி துறையில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சீர்திருத்தமாக, தனியார் நிறுவனங்கள் நிலக்கரியை வெட்டி எடுத்து வர்த்தகரீதியாக விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • இந்தியன் கோல் நிறுவனத்தின் தனியுரிமையை முடிவுக்கு வந்துள்ளது. உள்நாட்டில் இருந்து அதிகமான நிலக்கரியை ஏற்றுமதி செய்யவதற்கான கதவுகளை மத்திய அரசு திறந்துவிட்டுள்ளது. உள்நாட்டில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை வர்த்தகரீதியாக விற்பனை செய்ய அனுமதியில்லை.
நாடாளுமன்றத்தில் குழந்தைகளுக்கான காப்பகம் அமைக்க திட்டம்
  • நாடாளுமன்றத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வசதியாக 1,500 சதுர அடியில் க்ரெஷ் எனப்படுகிற குழந்தைகள் காப்பகம் அமைக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
கனடா நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ருடியூ ஒரு வாரப்பயணம்
  • கனடா நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ருடியூ ஒரு வாரப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருடன் அவரின் மனைவி சோஃபி கிரிகோய்ர், 3 குழந்தைகள் உடன் வந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக பல்வேறு நகரங்களுக்கும் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் இன்று அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு செல்ல திட்டமிட்டார் .

உலகம் :

அமெரிக்காவின் மோசமான அதிபர் டிரம்ப்: சிறந்தவர் ஆபிரஹாம் லிங்கன்
  • அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபராக ஆபிரகாம் லிங்கனையும், செயல்பாட்டில் மிகமோசமாக கடைசி இடத்தில் தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப்பையும் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கருத்துக்கணிப்பில் தேர்வு செய்துள்ளனர்.
பாக்., அபாயகரமானது; ஜப்பான் பாதுகாப்பானது: குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்து யுனிசெப் அறிக்கை
  • பிறந்து 30 நாட்களுக்குள்ளான குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாகக் கொண்டு பாகிஸ்தான் அபாயகரமானதாகவும், ஜப்பான் குறைந்த அளவிலான குழந்தை இறப்பு விகிதத்துடன் பாதுகாப்பானதாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவில் 30 நாட்களுக்கு ‘எமர்ஜென்சி’ நீட்டிப்பு
  • ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 85 பேரில் 39 உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். பின்னர் அவசர நிலையை 30 நாட்களுக்கு நீட்டிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை சட்டவிரோதம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

வணிகம் :

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு
  • அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பிப்ரவரி 20  (செவ்வாய்) 31  காசுகள் சரிந்து 64.52 ரூபாயாக இருந்தது.
ஹைப்பர்லூப் விரைவு போக்குவரத்து சேவை: விர்ஜின் குழுமம், மஹாராஷ்டிர அரசு ஒப்பந்தம்
  • ஹைப்பர்லூப் அதிவேகப் போக்குவரத்துக்கான ஒப்பந்தத்தை விர்ஜின் குழுமத்துடன் மஹாராஷ்டிர அரசு செய்துள்ளது. இதன் மூலம் மும்பை மற்றும் புணேவுக்கான பயண தூரம் மூன்று மணி நேரத்திலிருந்து 25 நிமிடமாகக் குறையும்.
விளையாட்டு :
அஸ்லான் ஷா கோப்பை:
  • மலேசியாவில் மார்ச் மாதம் நடக்க உள்ள அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய ஆடவர் அணிக்கு கேப்டனாக சர்தார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில ஹாக்கி போட்டியில் மத்திய கலால் துறை முதலிடம்
  •  மத்திய கலால் துறை அணி தரப்பில் தாமு 2 கோல்களும், ஹசன் பாஸா ஒரு கோலும் அடித்தனர். இந்தத் தொடரில் புள்ளிகள் அடிப்படையில் மத்திய கலால் துறை அணி முதலிடம் பிடித்தது. அந்த அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

PDF Download


No comments:

Post a Comment