Tuesday 13 February 2018

பிப்ரவரி 12 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது
  • ஜெயலலிதா படத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் திறந்து வைத்தார்.
  • இந்தப் படம் 7 அடி உயரும் 5 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. ஆயில் பெயின்டிங் முறையில் படம் வரையப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் படத்தை சென்னை கவின் கல்லூரி மாணவர்கள் உருவாக்கினர்.
  • படத்தின் கீழ் ஜெயலலிதா அடிக்கடி பேசும் வாசகமன அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

முக்கியமான குறிப்புக்கள்
ஜெயலலிதா 
  1. முன்னாள் தமிழக முதல்வர் ,அதிமுக பொதுச் செயலாளர்.
  2. 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி காலமானார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 ஜன.23, 24ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும்
  • உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 ஜன.23, 24ம் தேதிகளில் சென்னையில் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 இந்தியா

கர்நாடகாவின் கம்பளா எருமை ஓட்ட போட்டிக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு: பீட்டாவுக்கு பின்னடைவு
  • கர்நாடக மாநிலத்தில் கம்பளா எனப்படும் எருமை மாடு ஓட்டப் பந்தயத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவில் உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 13இல் உத்தரவிட்டது.
  • கர்நாடக மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்களான உடுப்பி, தக் ஷின கன்னடா பகுதிகளில் கம்பளா ஓட்டப்போட்டி பாரம்பரியமாக நடந்து வருகிறது.
  • சேற்று வயல்களில் எருமை மாடுகளைப் பூட்டி விவசாயிகள் ஓடவிடுவார்கள்.
முக்கியமான குறிப்புக்கள்
உச்ச நீதிமன்றம்
  1. நிறுவப்பட்டது - 28 ஜனவரி 1950
  2. அமைவிடம் - புது தில்லி
பணக்கார நகரங்களின் பட்டியலில் மும்பைக்கு 12-வது இடம்
  • இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பை சர்வதேச அளவில் பணக்கார நாடுகளின் பட்டியலில் 12-ம் இடத்தில் இருக்கிறது.
  • நியூ வோர்ல்ட் வெல்த் என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் இடத்தில் நியூயார்க் நகரம் இருக்கிறது.
  • மும்பை நகரத்தில் உள்ள சொத்து மதிப்பு மட்டும் 95,000 கோடி டாலர் என நியூ வொர்ல்ட் வெல்த் குறிப்பிட்டிருக்கிறது.
முக்கியமான குறிப்புக்கள்
  1. ஆளுநர் - சி. வித்தியாசாகர் ராவ்
  2. முதலமைச்சர் - தேவேந்திர பத்னாவிசு

உலகம்

உலகிலேயே மிக உயரமான ஹோட்டல் துபாயில் பிப்ரவரி 13இல் திறப்பு
  • துபாயில் இதுவரை உயரமான ஹோட்டலாக ஜே.டபிள்யு மாரியாட் மார்குயிஸ் ஹோட்டல் இருந்து வந்தது. அதைவிட உயரமாக பிப்ரவரி 13இல்  துபாயில் மற்றொரு ஹோட்டல் திறக்கப்படுகிறது.
  • 'ஜவோரா' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டல் 75 மாடிகள் கொண்டது. தங்க நிற கோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் 356 மீட்டர்(1,168 அடி) உயரம் கொண்டது. ஏறக்குறைய கால் மைல் தொலைவு உயரம் கொண்டதாகும்.
முக்கியமான குறிப்புக்கள்
  1. நகரவாக்கம் - 9 ஜூன் 1833
  2. விடுதலை - 2 டிசம்பர் 1971
    (பிரித்தானியாவிடம்இருந்து)

வணிகம்

ரூ.20 ஆயிரம் கோடி வாராக் கடனை தள்ளுபடி செய்த எஸ்.பி.ஐ. வங்கி
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த நிதி ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 339 கோடிக்கு வாராக் கடனை தள்ளுபடி செய்துள்ளது என தெரியவந்துள்ளது.
முக்கியமான குறிப்புக்கள்
  1. முக்கிய நபர்கள் - பிரதீப் சவுத்ரி, தலைவர்
  2. தலைமையகம் - மும்பை

விளையாட்டு

தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக அணி அறிவிப்பு
  • தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கேரள மாநிலம் கோழிகோட்டில் நடக்கிறது.
முக்கியமான குறிப்புக்கள்
  1. கைப்பந்தாட்டம் அமெரிக்க விளையாட்டுப் பயிற்சியாளர் வில்லியம் மோர்கன் என்பவரால் 1895ல் உருவாக்கப்பட்டது.
  2. ஒலிம்பிக்கில் 1964ம் ஆண்டு இவ்விளையாட்டு இரு பாலருக்குமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
149 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய நகர்கோட்டிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு
  • ஜூனியர் உலகக்கோப்பையில் 149 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்திய நகர்கோட்டிக்கு ராஜஸ்தான் அரசு 25 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.
முக்கியமான குறிப்புக்கள்
ராஜஸ்தான்
  1. ஆளுநர் - கல்யாண் சிங்
  2. முதல் அமைச்சர் - வசுந்தரா ராஜே

PDF Download

No comments:

Post a Comment