Monday 30 January 2017

31ST JANUARY REVIEW IN Tamil FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:
பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் மருத்துவ மாணவி தேர்வு..!
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2017-ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஐரிஷ் மிட்டனேரே வெற்றி பெற்றுள்ளார்.


2017-ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகிக்கான போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு, இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இதில் 13 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் சிறப்பாக செயல்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐரிஷ் மிட்டனரே, பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை ஹைதி நாட்டைச் சேர்ந்த ரகுவல் பெலிசியரும், மூன்றாவது இடத்தை கொலம்பியாவின் ஆண்ட்ரியா டோவரும் பெற்றனர்.
பிரபஞ்ச அழகியாக பட்டம் சூட்டப்பட்ட மிட்டனரே, பெர்சியா வம்சாவளியைச் சேர்ந்தவர். தற்போது பல் அறுவை சிகிச்சை குறித்த பட்டப்படிப்பை படித்து வருகிறார். தன்னுடைய பிரபஞ்ச அழகி பட்டத்தின் மூலம், பற்கள் சுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க, ரஷ்ய உறவை வலுப்படுத்த ட்ரம்ப், புதின் உறுதி
அமெரிக்கா, ரஷ்யா இடையே உறவை வலுப்படுத்த இரு நாட்டு அதிபர்களும் உறுதி பூண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நேற்றுமுன்தினம் தொலைபேசியில் பேசினர். அப் போது மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை, வடகொரிய அணுஆயுத விவகா ரம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயல்பட ட்ரம்பும் புதினும் ஒப்புக் கொண்டனர். முதல்கட்டமாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அழிக்க இரு தலைவர்களும் உறுதி பூண்டனர்.
‘இரண்டு உலகப்போர்களின் போதும் அமெரிக்காவும் ரஷ்யா வும் இணைந்து செயல்பட்டன. இதேபோல சர்வதேச தீவிர வாதத்துக்கு எதிராக அமெரிக்கா வும் ரஷ்யாவும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று அதிபர் புதின் தெரிவித்தார்.
இதை ஆமோதித்த அதிபர் ட்ரம்ப், இருநாட்டு உறவை வலுப் படுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார்.

இந்தியா:

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: ஒருங்கிணைந்த பட்ஜெட் நாளை தாக்கல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை (ஜன.31) தொடங்குகிறது. ஒருங்கிணைந்த பட்ஜெட் (பொது பட்ஜெட்டுடன் இணைந்த ரயில்வே பட்ஜெட்) புதன்கிழமை (பிப்.1) தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் முதல் அமர்வு செவ்வாய்க்கிழமை (ஜன.31) முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும்.
பின்னர், மார்ச் மாதம் 9-ஆம் தேதி 2-ஆவது அமர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.
நிகழ் ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்துகிறார். கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவுள்ளார்.
அமலாக்கத் துறை இயக்குநர் நியமனம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
அமலாக்கத் துறை இயக்குநராக (இ.டி.) கர்னால் சிங்கை நியமித்தது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மும்பையைச் சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி உதய் பாபு கல்வடேகர் என்பவர் பொதுநல மனு தொடுத்துள்ளார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அமலாக்கத் துறை இயக்குநர் பதவிக்காலம் என்பது 2 ஆண்டுகளைக் கொண்டது என்று 2003-ஆம் ஆண்டைய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய சட்டத்தின் 25-ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அமலாக்கத் துறை கூடுதல் இயக்குநராக கர்னால் சிங்கை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதியன்று நியமித்தது.
பின்னர் அவரை முழு நேர இயக்குநராக மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ஆம் தேதியன்று நியமித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில், கர்னால் சிங்கின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம்:

தேசிய புலனாய்வு துறையில் 111 ஆய்வாளர் பணிக்கு பிப்.2-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேதிய புலனாய்வு துறையில் நிரப்பப்பட உள்ள 111 ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Inspector - 23
பணி: Sub-Inspector - 54
பணி: Assistant Sub-Inspector - 34
விண்ணப்பிக்கும் முறை: www.nia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.02.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விளையாட்டு :

பிசிசிஐயை நிர்வகிக்க முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையில் 4 பேர் குழு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கு முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு பிசிசிஐக்கு முறைப்படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை வினோத் ராய் தலைமையிலான குழுவே பிசிசிஐயை நிர்வகிக்கும்.
இந்தக் குழுவில் வினோத் ராய் தவிர, வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா, ஐடிஎஃப்சி (உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம்) நிர்வாக இயக்குநர் விக்ரம் லிமாயே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தரவரிசை: செரீனா முதலிடம்
மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னதாக 2-ஆவது இடத்தில் இருந்த செரீனா, ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். கெர்பர் 2-ஆவது இடத்திலும், செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 7 இடங்கள் முன்னேறி 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3 இடங்கள் முன்னேறி 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

வர்த்தகம் :

ஒன்றாக கைகோர்க்கப் போகும் வோடாபோன்-ஐடியா : கலக்கத்தில் ஏர்டெல், ஜியோ !
இந்திய தொலைபேசி துறையின் இரு பெரும் கம்பெனிகளான வோடாபோன் மற்றும் ஐடியா இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் இந்திய தொலைபேசி துறையில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
வோடாபோனைப் பொறுத்த வரை இந்தியாவில் உள்ள 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் 20 கோடி வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது. அதேபோல் ஐடியா தொலைபேசி நிறுவனமும் இதே அளவு வாடிக்கையாளர்களுடன் 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் இயங்கி வருகிறது. இரண்டு நிறுவனங்களுமே இந்த நிதியாண்டு முடிவில் , 4G சேவைகளை துவக்க உள்ளன.
இந்நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைக்கப்படுமானால், அந்த கூட்டு நிறுவனமானது 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக விளங்கும்.  தற்போது இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனத்திற்கு 26 கோடி வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Click here to download 31st January Review in Tamil

No comments:

Post a Comment