Thursday 19 January 2017

19TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

ஜெர்மனி: செப். 24-இல் பொதுத் தேர்தல்
ஜெர்மனியில் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்தவிருப்பதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில், நான்காவது முறையாக பிரதமர் பதவிக்கு ஏஞ்சலா மெர்க்கல் போட்டியிடவிருக்கிறார். இதுவரை இல்லாத மிக அதிக எண்ணிக்கையில் அகதிகள் ஜெர்மனிக்குள் அனுமதிக்கப்படும் விவகாரம் இந்தத் தேர்தலின் மையப் பிரச்னையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்க்கலின் அமைச்சரவை இந்தத் தேர்தல் தேதிக்கு ஒப்புதல் வழங்கினாலும், அதிபர் ஜோசிம் காவ்க் அதற்கு இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதயத் துடிப்பே கடவுச் சொல்! புதிய தொழில்நுட்பம் உருவாக்குகின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்
இணையவழி மருத்துவத்தின்போது தனிநபரின் உடல்நலம் பற்றிய மின்னணுத் தகவல்களைப் பாதுகாப்பதற்காக, அவரது இதயத் துடிப்பையே கடவுச் சொல்லாக (பாஸ்வேர்ட்) பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பிங்கம்டன் பல்கலைக்கழகப் பேராசியர் ஷன்பெங் ஜின் கூறியதாவது: தற்போது தகவல்களைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் "என்க்ரிப்ட்' தொழில்நுட்பங்கள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாகவும், செலவு பிடிப்பவையாகவும் உள்ளன.
அதனால், இந்தத் தொழில்நுட்பங்களை இணையவழி மருத்துவம், செல்லிடப் பேசி மூலமான மருத்துவம் போன்ற வசதிகளைப் பயன்படுத்தும்போது, ரகசியத் தகவல்களைப் பாதுகாக்க அத்தகைய பாரம்பரியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, "என்க்ரிப்ட்' தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, எளிமையான, மலிவான, மருத்துவத் துறைக்கென்று பிரத்யேகமான தகவல் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்தியா:

சிபிஐயின் புதிய இயக்குநராக அலோக் குமார் வர்மா நியமனம்
தில்லி காவல் துறை ஆணையர் அலோக் குமார் வர்மா, மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கொண்ட மூவர் குழு, அலோக் குமார் வர்மாவை தேர்வு செய்தது.
சிபிஐயின் இயக்குநராக இருந்த அனில் சின்ஹா, கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி ஓய்வுபெற்றதை அடுத்து, கடந்த இரு மாதங்களாக அந்தப் பதவி நிரப்பப்படாமல் இருந்தது. அதையடுத்து, அந்தப் பதவிக்கு இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் இயக்குநர் கிருஷ்ண செளதரி, மகாராஷ்டிர காவல் துறை டிஜிபி எஸ்.சி.மாத்தூர் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.
இந்த நிலையில், சிபிஐயின் புதிய இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம், தில்லியில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிபிஐயில் எந்தப் பதவியையும் வகிக்காத அலோக் குமார் வர்மாவை, அதன் இயக்குநராக நியமிப்பதற்கு மல்லிகார்ஜுன கார்கே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பின்னர், அலோக் குமார் வர்மாவையே பிரதமர் மோடி தலைமையிலான மூவர் குழு தேர்வு செய்தது.
தில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கிறது தேஜஸ் போர் விமானம்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக "தேஜஸ்' போர் விமானம் முதல் முறையாக, தில்லியில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் வான் சாகசத்தில் ஈடுபட உள்ளது.
தில்லியில் கடந்த 1980 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட "மருத்' என்ற போர் விமானங்கள் கடைசியாகப் பங்கேற்றன.
அதன் பிறகு முதன் முறையாக, தில்லியில் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் "தேஜஸ்' ரக போர் விமானம் முதன் முறையாக பங்கேற்று சாகசத்தில் ஈடுபட உள்ளது.
இதுதவிர, மி-17 ரக ஹெலிகாப்டர்கள், சுகோய் சு-30 போர் விமானங்கள், இலகுரக ருத்ரா ஹெலிகாப்டர்கள், சி-17 குளோப் மாஸ்டர் ரக ராணுவப் போக்குவரத்து விமானங்கள் ஆகியவையும் வான்சாகசங்களை நிகழ்த்த உள்ளன.

தமிழகம்:

பிஎஸ்என்எல்: பணமில்லா பரிவர்த்தனைக்கு புதிய செயலி அறிமுகம்
வாடிக்கையாளர்களுக்கென "மொபிகேஷ்' எனும் புதிய செயலியை பிஎஸ்என்எல் எஸ்பிஐ இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் செல்லிடப்பேசியில் சாமானியரும் பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என பிஎஸ்என்ல் தெரிவித்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், பாரத ஸ்டேட் வங்கியும் இணைந்து செல்லிடப்பேசி பரிவர்த்தனை (மொபிகேஷ்) எனும் புதிய செயலியை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.
இந்த செயலியை சென்னை பிஎஸ்என்எல் வட்ட பொதுமேலாளர் கலாவதி, பாரத ஸ்டேட் வங்கி பொதுமேலாளர் இந்து சேகர் தொடக்கி வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கென "மொபிகேஷ்' எனும் புதிய செயலி சாதாரண, ஆண்ட்ராய்டு உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப செல்லிடப்பேசியில் பயன்படுத்தலாம். அதுபோல், கிராமப்புற பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்குப் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு பெரிதும் உதவும் வகையில் இது கொண்டுவரப்பட்டுள்ளது.

விளையாட்டு :

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தார் உலகின் 117-ஆம் நிலை வீரரான உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமின்.
இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக 4 மணி 48 நிமிடங்களுக்கு நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 7-6(8), 5-7, 2-6, 7-6(5), 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார் டெனிஸ்.
முன்னதாக, டிசம்பரில் நடைபெற்ற ஆசிய வைல்ட் கார்டு போட்டியில் வென்றதன் மூலம் முக்கியச் சுற்றுக்கு முன்னேறியுள்ள டெனிஸ், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச்சை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2008-க்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியிலிருந்து ஜோகோவிச் இவ்வாறு ஆரம்பத்திலேயே வெளியேறுவது இது முதல் முறையாகும். முன்னதாக, 2008-ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் ரஷியாவின் மராட் சஃபின், ஜோகோவிச்சை வெளியேற்றியிருந்தார்.
மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: காலிறுதியில் சாய்னா, ஜெயராம்
மலேசியா மாஸ்ட்ர்ஸ் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், அஜய் ஜெயராம் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனேஷியாவின் ஹன்னா ரமாதினியை எதிர்கொண்ட சாய்னா, 21-17, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இருவருக்கும் இடையேயான ஆட்டம் 42 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
சாய்னா தனது காலிறுதியில், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் இந்தோனேஷியாவின் ஃபிட்ரியானி ஃபிட்ரியானியை சந்திக்கிறார்.
அதேபோல், போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் அஜய் ஜெயராம், சீன தைபேவின் ஸுயேஹ் ஸுவானை எதிர்கொண்டார். இதில் ஜெயராம் 21-12, 15-21, 21-15 என்ற செட் கணக்கில் வென்றார். ஜெயராம் தனது காலிறுதியில் இந்தோனேஷியாவின் அன்டோணி சினிசுகா கிங்டிங்கை எதிர்கொள்கிறார்.
ஃபிஃபா நிதிக் குழு உறுப்பினராக பிரஃபுல் படேல் நியமனம்
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) தலைவர் பிரஃபுல் படேல், சர்வதேச கால்பந்து சங்கங்கள் சம்மேளனத்தின் (ஃபிஃபா) நிதிக் குழு உறுப்பினராக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
அவர் அந்தப் பொறுப்பில் 4 ஆண்டுகள் இருப்பார். ஃபிஃபா-வின் நிதிக் குழுவானது, நிதி நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், நிதி விவகாரங்களில் நிர்வாகக் குழுவினருக்கு ஆலோசனைகள் வழங்குகிறது.
பிரஃபுல் படேல் தலைமையின் கீழ், 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி உள்ளிட்டவற்றை நடத்தும் வாய்ப்பு இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
3-ஆவது ஒருநாள் போட்டி: ஆஸி. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில், ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்ய வந்த பாகிஸ்தானில் தொடக்க வீரர் ஹஃபீஸ் 4 ரன்களில் ஆட்டமிழக்க, உடன் வந்த ஷர்ஜீல் கான் அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.

வர்த்தகம் :

டெலிவரி ஊழியர்களை பாதுகாக்கும் ‘நஞ்சுண்டா’ திட்டத்தை அறிமுகம் செய்தது பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனம் தங்களது டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு தேவைகளுக்காக `புராஜெக்ட் நஞ் சுண்டா’ என்கிற திட்டத்தை அறி முகம் செய்துள்ளது.
இந்த திட்டத் தின் கீழ் அவசர காலங்களில் டெலிவரி ஊழியர்கள் / களப்பணியாளர்கள் அருகிலுள்ள டெலிவரி மையங்களில் உதவிகளை கோர முடியும். இந்த திட்டத்துக்கு பெங்களூரு விஜயநகரில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட களப்பணியாளர் நஞ்சுண்ட ஸ்வாமி பெயரைச் சூட்டியுள்ளது.
இது தொடர்பாக பேசிய நிறு வனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி நிதின் சேத், களப்பணி யாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை நிறுவனம் உணர்ந்துள்ளது. இதன் மூலமே களப்பணியில் அனைத்து இடங்களுக்கும் சிறந்த சேவையை கொண்டு சேர்க்க முடியும்.
இதன் மூலமே வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற முடியும். இதற்காக எங்களது களப்பணியாளர்களின் மொபைல் போனில் அவசர கால அழைப்பு பட்டன் (எஸ்ஓஎஸ்) செயலி மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு நஞ்சுண்டா என பெயர் சூட்டியுள்ளோம் என்று கூறினார்.
பங்குச் சந்தையில் பட்டியலிட மத்திய அரசு அனுமதி: 5 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள்
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங் கள் பங்குச் சந்தையில் பட்டியலிடு வதற்கு மத்திய அரசு நேற்று அனு மதி வழங்கியது. கடந்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது: ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியலிட மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி இருக்கிறது. ஓஎப்எஸ் முறையில் பங்குகள் விலக்கிக்கொள்ளப்படும். தற்போது அரசு வசம் 100 சதவீத பங்குகள் இருக்கிறது. இவை படிப்படியாக விலக்கப்பட்டு 75 சதவீதமாக குறைக்கப்படும்.
பொதுவாக நிறுவனங்கள் பட்டியலிடும் போது அவற்றின் வெளிப் படைத்தன்மை உயரும். இந்த நோக்கத்துக்காக ஐந்து பொதுத்துறை நிறுவனங்களும் பட்டியலிடப்படு கின்றன. மேலும் மத்திய அரசின் பங்கு விலக்கலுக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் இலக்கும் எட்டப்படும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

Click here to download 19th January Review in Tamil

No comments:

Post a Comment