Wednesday 11 January 2017

12th January Review in Tamil For TNPSC, SSC, IPPB & Insurance

உலகம்:

நிகராகுவா அதிபராக ஓர்டேகன் பதவியேற்பு
மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவின் அதிபராக டேனியல் ஓர்டேகன் (71), மூன்றாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவரது மனைவி ரோஸாரியோ முரில்லோ துணை அதிபராகப் பதவியேற்றார்.

நிகராகுவாவின் உயரிய இரு பதவிகளை ஒரு தம்பதி வகிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகத்தை பாதுகாத்திடுங்கள்! பதவி நிறைவு உரையில் அமெரிக்கர்களிடம் ஒபாமா உருக்கம்
ஆபத்திலிருக்கும் அமெரிக்க ஜனநாயகத்தைப் பாதுகாத்திடுங்கள்' என்று அந்த நாட்டு மக்களை பதவி விலகும் அதிபர் ஒபாமா உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.
"முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தாற்காலிகத் தடை விதிக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து, அதிபர் தேர்தலைச் சந்தித்த தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப், எதிர்பாராத வகையில் வெற்றி பெற்று அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில், பதவிக் காலம் முடிந்து வெளியேறும் அதிபர் ஒபாமா, தனது சொந்த ஊரான சிகாகோ நகரில் செவ்வாய்க்கிழமை பிரிவுரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மாற்றத்தை ஏற்படுத்துவதில் எனக்கு இருக்கும் திறன் மீது நம்பிக்கை வைக்காமால், பொதுமக்களாகிய உங்களுக்குள் இருக்கும் திறனில் நம்பிக்கை வையுங்கள்.

இந்தியா:

நேபாள நதிநீர்த் திட்டங்களுக்கு இந்தியா ரூ.38.82 கோடி நிதியுதவி
நேபாளத்தில் மூன்று முக்கிய நதிகளுக்கு கரைகளைக் கட்டுவதற்காக ரூ.38.82 கோடி நிதியுதவியை இந்திய அரசு புதன்கிழமை அளித்துள்ளது.
நேபாளத்தில் லால்பகேயா, பாக்மதி, கமலா ஆகிய மூன்று நதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, தாழ்வான பகுதிகளுக்கு வெள்ளம் பாய்வதைத் தடுப்பதற்காக நதிக்கரைகள் கட்டப்படவுள்ளன.
இதற்கான கட்டுமானப் பணிகளுக்கு இந்தியாவின் பங்களிப்பாக, ரூ.38.82 கோடி நிதியதவியை நேபாள அரசுக்கு இந்திய அரசு அளித்துள்ளது. இதற்கான காசோலையை நேபாள நீர்வளத் துறை அமைச்சர் தீபக் கிரியிடம் நேபாளத்துக்கான இந்தியத் தூதர் ரஞ்சித் ரேவ், காத்மாண்டில் புதன்கிழமை அளித்தார்.
இதுதொடர்பாக, காத்மாண்டில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், ""நேபாளத்தின் நீர்வளத் திட்டங்களில் மேலும் ஒத்துழைப்புடன் செயல்படுவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யாவுக்கு ரூ.683 கோடி கடனுதவி: மோடி-கென்ய அதிபர் முன்னிலையில் கையெழுத்து
கென்யாவின் விவசாயத் துறை வளர்ச்சிக்காக, 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.683 கோடி) கடனுதவி வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம், தில்லியில் பிரதமர் மோடி, கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா முன்னிலையில் புதன்கிழமை கையெழுத்தானது.
இந்தியா வந்துள்ள கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதிலும், இரு தரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதிலும் முன்னுரிமை அளிப்பது என இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.

தமிழகம்:

சிங்கப்பூர் தூதர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சசிகலாவுடன் சந்திப்பு
சிங்கப்பூர் நாட்டின் சிறப்புத் தூதர் டத்தோ ஸ்ரீஎஸ்.சாமிவேலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தியா -தெற்காசிய நாடுகளுக்கான மலேசிய அரசின் கட்டமைப்புத் துறையின் சிறப்புத் தூதர் டத்தோ ஸ்ரீஎஸ்.சாமிவேலு, சிறப்புத் தூதரின் செயலாளர் சிவபாலன், தென்னிந்திய மலேசிய தூதர் பின் அப்துல் ஜலீல் ஆகியோர் சசிகலாவை சந்தித்தனர்.
இதேபோன்று, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன், அவரது மனைவி பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் சசிகலாவை நேரில் சந்தித்துப் பேசினர்.

விளையாட்டு :

ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச்சுற்று: யூகி முன்னேற்றம்; சாகேத் வெளியேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச்சுற்றின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி வெற்றி பெற்றுள்ளார்.
அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான சாகேத் மைனேனி, முதல் சுற்றில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில் அதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை தொடங்கின.
அதில் யூகி பாம்ப்ரி தனது முதல் சுற்றில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் ஸ்டீபன் கோஷ்லோவெனை தோற்கடித்தார்.
இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் பாம்பரி 20 நெட் புள்ளிகளைப் பெற்றார். ஸ்டீபனிடம் தனது சர்வீஸை இரு முறை இழந்த பாம்ப்ரி, ஸ்டீபனின் சர்வீஸை 6 முறை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் சானியா ஜோடி
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சிட்னியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சானியா-பர்போரா ஜோடி தங்களின் காலிறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வைல்ட்கார்டு ஜோடியான அமெரிக்காவின் மேடிசன் பிரெங்லே-ரஷியாவின் அரினா ரொடினோவா ஜோடியைத் தோற்கடித்தது.
சானியா-பர்போரா ஜோடி தங்களின் அரையிறுதியில் அமெரிக்காவின் வானியா கிங்-கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஷ்வேடோவா ஜோடியை சந்திக்கிறது.

வர்த்தகம் :

செளத் இந்தியன் வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 111.38 கோடி
செளத் இந்தியன் வங்கியின் கடைசி காலாண்டின் நிகர லாபம் ரூ. 111.38 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்கியின் சார்பில் மும்பை பங்குச் சந்தையில் உள்ள ஒரு ஒழுங்குமுறை ஆவணத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - வங்கியின் கடந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ 1,737.47 கோடியாகும்  கடந்த  2015 டிசம்பர் 31 வரையிலான காலாண்டில் ரூ 101.63 கோடியாயாக இருந்த நிகரலாபம் 31, டிசம்பர்  2016- ல் முடிவடைந்த காலாண்டின் ரூ 111.38 கோடியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Click here to download 12th January Review in Tamil

No comments:

Post a Comment