Monday 16 January 2017

16TH JANUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

நிகழாண்டு இறுதிக்குள் இந்தியாவில் அணு மின்நிலையம் அமைக்க ஒப்பந்தம்: அமெரிக்கா நம்பிக்கை
நிகழாண்டு இறுதிக்குள் இந்தியாவில் அணு மின்நிலையம் அமைப்பதற்கான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இணையமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியதாவது:

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் செயலாக்கம் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
தற்போது, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் அணு மின்நிலையங்கள் அமைப்பதற்கான வர்த்தக விவகாரங்களைப் பற்றிய பேச்சுவார்த்தையும், இதற்கான நிதியளிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியதுதான் பாக்கி.
இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் கடந்த ஆண்டு சந்தித்தபோது, அணுமின் நிலையம் அமைப்பதற்கான வர்த்தக ஒப்பந்தம் 2017-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தனர்.
'ஒபாமா கேர்' திட்டத்துக்கு பதிலாக 'அனைவருக்குமான மருத்துவ காப்பீடு': ட்ரம்ப் அறிவிப்பு
ஒபாமாவின் கேர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு பதிலாக 'அனைவருக்குமான மருத்துவ காப்பீடு' திட்டத்தை உறுதி செய்யவிருப்பதாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன் போஸ்ட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த நேர்காணல் ஒன்றில் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்தார். தான் அறிமுகப்படுத்தும் மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பற்றிய மேற்கொண்ட தகவல் ஏதும் ட்ரம்ப் தெரிவிக்கவில்லை.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மருத்துவக் காப்பீடு திட்டம் பற்றி ட்ரம்ப் கூறும்போது, "இது எல்லோருக்குமான மருத்துவக் காப்பீடு திட்டம் ஆகும். காப்பீட்டுக்கான கட்டணம் குறைவாகவே இருக்கும். இந்த திட்டம் முடிவு பெறும் தருவாயில் உள்ளது.
குடியரசு கட்சியின் சார்பாக சுகாதார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டாம் பிரைஸ் பதவியை நாடளுமன்றம் உறுதி செய்யும்வரை நாங்கள் காத்திருக்கிறோம்" என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டம் தொடர்பாக, மருத்துவ நிறுவனங்களை அரசுடன் நேரடி பேச்சு வார்த்தைக்கு அழைக்க விருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்ற குழுக்களில் இந்திய வம்சாவளியினர்
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியினர் ஐவரும் முக்கிய நாடாளுமன்றக் குழுக்களில் இடம் பெற்றுள்ளனர்.
அண்மையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் நாடாளுமன்றத்துக்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் ஐந்து பேரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற குழுக்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஐந்து பேருமே ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலிக்கன் வேலியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரோ கன்னா, நாடாளுமன்ற பட்ஜெட் விவகாரக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சியாட்டில் நகரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரமீளா ஜெயபால், நாடாளுமன்ற நீதித் துறைக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியா:

ஜூலை முதல் ஜிஎஸ்டி வரி அமல்: ஜேட்லி நம்பிக்கை
சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே வரி வசூல் அதிகாரங்கள் தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜேட்லி இவ்வாறு கூறினார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை உறுதி செய்வதற்காக ஜிஎஸ்டி மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் அந்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அதனை வரும் ஏப்ரல் முதல் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டு, மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்தொற்றுமை எட்டப்படவில்லை.
கடல் வழி வர்த்தகத்தின் வாயிலாக சந்தைக்கு வரும் பொருள்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம், வரித் தொகை பகிர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கருத்து வேறுபாடு எழுந்தது.

விளையாட்டு :

ஆஸ்திரேலிய ஓபன்: முர்ரே, ஃபெடரர், வாவ்ரிங்கா போராடி வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்டன் வாவ்ரிங்கா ஆகிய முன்னணி வீரர்கள் தங்களது முதல் சுற்று ஆட்டத்தில் போராடி வெற்றி பெற்றனர்.
ஆண்டின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் திங்கள்கிழமை தொடங்கியது.
இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, உக்ரைனின் இலியா மார்சென்கோவை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் முர்ரே, 7-5, 7-6 (7/5), 6-2 என்ற செட் கணக்கில் மார்சென்கோவை போராடி வீழ்த்தினார்.
3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரான சுவிட்சர்லாந்தின் ஸ்டன் வாவ்ரிங்கா, தரவரிசையில் 35-ஆவது இடத்திலுள்ள ஸ்லோவாக்கியாவின் மார்ட்டின் கிளிசானை எதிர்கொண்டார்.

வர்த்தகம் :

உலக பொருளாதார மைய மாநாடு இன்று தொடக்கம்: நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
உலக பொருளாதார மையத்தின் ஐந்து நாள் மாநாடு இன்று தொடங்க இருக்கிறது. இதில் இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
உலக பொருளாதார மையத்தின் 47-வது ஆண்டு கூட்டம் இதுவாகும். இந்தியாவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் தலைவர் அர்விந்த் பனகாரியா, மத்திய தொழில்கொள்கை மற்றும் ஊக்குவிப்பு (டிஐபிபி) தலைவர் ரமேஷ் அபிஷேக், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் இந்தியாவில் இருந்து கலந்து கொள்ள இருக்கின்றனர்.
பண மதிப்பு நீக்கம், அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு உள்ளிட்டவை முக்கியமான விவதாங்களாக இருக்க கூடும். தவிர இந்தியாவுக்கான சிறப்பு அமர்வும் இருக்கிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் வரி சீர்த்திருத்தங்களின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து வல்லுநர்கள் விவாதிக்க இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment