Wednesday 8 February 2017

9TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம்:

உலக பொருளாதார வல்லரசு நாடுகள்: 2050-ல் சீனா முதலிடம்; இந்தியா 2-ம் இடம் - பிரிட்டிஷ் ஆய்வு நிறுவனம் கணிப்பு
உலக பொருளாதார வல்லரசு நாடுகள் பட்டியலில் வரும் 2050-ம் ஆண்டில் சீனா முதலிடத்தையும் இந்தியா 2-ம் இடத்தையும் பிடிக்கும் என்று பிரிட்டிஷ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


பிரிட்டிஷ் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பி.டபிள்யூ.சி. என்ற ஆய்வு நிறுவனம் வரும் 2050-ம் ஆண்டில் உலகம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சீனாவும் இந்தியாவும் விரைவில் முந்தி விடும். வரும் 2030-ம் ஆண்டி லேயே உலகின் மிகப்பெரிய பொரு ளாதார வல்லரசு நாடாக சீனா உருவெடுத்துவிடும். அமெரிக்கா 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் இருக்கும். ஜப்பான், இந்தோனேசியா, ரஷ்யா, ஜெர்மனி, பிரேசில், மெக்ஸிகோ, பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கும்.
அதன்பிறகு வரும் 2050-ம் ஆண்டு நிலவரப்படி உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு நாடு என்ற அந்தஸ்தை சீனா தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும். அப்போது அமெரிக் காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா 2-ம் இடத்துக்கு முன்னேறிவிடும். அமெரிக்கா 3-ம் இடத்தில் இருக்கும்.

இந்தியா:

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-ஆவது அலகு நிகழாண்டில் செயல்படும்'
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகில் வர்த்தக ரீதியான மின் உற்பத்தி நிகழ் நிதியாண்டுக்குள் (2017-18) தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் புதன்கிழமை கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்து பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது அலகும் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டதாகும்.
இந்த அலகானது கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் உற்பத்திக்கு தயாரானது. இதனைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஒருங்கிணைந்த மின் தொகுப்பில் இந்த அலகு சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த அலகு தனது முழு மின் உற்பத்தித் திறனை எட்டுவதற்கான சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தச் சோதனைகள் நிறைவடைந்ததும் இந்த அலகு செயல்படத் தொடங்கும்.
அதனைத் தொடர்ந்து, இந்த இரண்டாவது அலகின் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி நடவடிக்கைகள் நிகழ் நிதியாண்டுக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா.வின் அலுவல் மொழியாக ஹிந்தியை கொண்டு வர அரசு தொடர் முயற்சி
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக ஹிந்தியை கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருவதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மக்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் புதன்கிழமை எழுத்துப் பூர்வமாக அளித்த பதில்:
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 2015-ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற உலக ஹிந்தி மாநாட்டில் "வெளியுறவுக் கொள்கையில் ஹிந்தி' என்ற கருப்பொருளுக்காகவே ஓர் அமர்வு ஒதுக்கப்பட்டது.
மேலும் ஹிந்தி மொழியை உலகமெங்கும் பிரபலப்படுத்தவும், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக ஏற்றுக் கொள்ள வைப்பதற்காகவும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சி வருகிறது.
ஹிந்தியைப் பரப்புவதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.5.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹிந்தியை சர்வதேச மொழியாக மேம்படுத்துவதற்காக மோரீஷஸில் உலக ஹிந்தி மொழிக்கென செயலகம் கடந்த 2008-இல் ஏற்படுத்தப்பட்டது என்று தனது பதிலில் அக்பர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம்:

"தமிழகத்தின் பெருமை'- சாதனையாளர் விருது அறிமுகம்
தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களை கெளரவிக்கும் வகையில், "தமிழகத்தின் பெருமை' (பிரைட் ஆஃப் தமிழ்நாடு) எனும் சாதனையாளர் விருது அறிமுகம் செய்யப்படுகிறது.
ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மார்ச் 19-இல் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
விழாவில், விருதுக்கான பரிந்துரை விண்ணப்பப் படிவத்தை நடிகர் விஷால் வெளியிட உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா பெற்றுகொண்டார். மேலும், பிரைட் ஆப் தமிழ்நாடு எனும் இணையப்பக்கத்தை நடிகர் விஷால் தொடங்கிவைத்தார்.

விளையாட்டு :

தென் ஆப்பிரிக்காவுக்கு 4-ஆவது வெற்றி
இலங்கைக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 367 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டூபிளெஸ்ஸிஸ் 185, கேப்டன் டிவில்லியர்ஸ் 64 ரன்கள் குவித்தனர்.
இலங்கைத் தரப்பில் குமாரா, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
டூபிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

வர்த்தகம் :

பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் 4 மடங்கு அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூன்றாம் காலாண்டு லாபம் 4 மடங்கு அதிகரித்தது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.14,497.65 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.13,891.20 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 4.36 சதவீதம் அதிகமாகும்.வரி தவிர்த்து, இ
தரவகை செலவுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.3,775.53 கோடியிலிருந்து 22.23 சதவீதம் குறைந்து ரூ.2,935.86 கோடியாக காணப்பட்டது.
இதையடுத்து, நிகர லாபம் ரூ.51.1 கோயிலிருந்து 306 சதவீதம் (4 மடங்கு) அதிகரித்து ரூ.207.18 கோடியாக காணப்பட்டது.
வழங்கப்பட்ட மொத்த கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 8.47 சதவீதத்திலிருந்து அதிகரித்து 13.70 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 5.86 சதவீதத்திலிருந்து உயர்ந்து 9.09 சதவீதமாகவும் காணப்பட்டது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment