Thursday 9 February 2017

10TH FEBUARY REVIEW IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

இந்தியா:

ஒரே ராக்கெட்டில் 105 செயற்கைக்கோள்கள்: பிப்.15-இல் விண்ணில் ஏவ ஏற்பாடு: இஸ்ரோ இயக்குநர் தகவல்
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஒரே ராக்கெட்டில் 105 செயற்கைக்கோள்கள் வரும் 15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறன என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) இயக்குநர் பி.வி.வெங்கிடகிருஷ்ணன் கூறினார்.


இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் மதுரையில் வியாழக்கிழமை தொடங்கிய "டெக்எஸ்போ 2017' தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் அவர் பேசியது:
கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அதேபோல, தொழில் நிறுவனங்களுடனான கூட்டுத் திட்டங்களையும் இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் அன்றாட நடவடிக்கைகள், பல இணையதளம் வாயிலாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. அதற்கேற்ப தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
இதைக் கருத்தில் கொண்டு, தகவல் தொடர்புக்கான செயற்கைக்கோள் பலவற்றை இஸ்ரோ அனுப்பி வருகிறது. இஸ்ரோவின் வரலாற்று சாதனைகளில் முக்கியமாக வரும் 15ஆம் தேதி ஒரே ராக்கெட்டில் 105 செயற்கைகோள்களை அனுப்ப உள்ளது.
இந்திய தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும், அண்மையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போதும் தொழில் துறைக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், சர்வேதச அளவில் இந்தியாவுக்கான பிராண்டுகள் அதிகளவில் வர வேண்டும் என்றார்.

விளையாட்டு :

இந்தியா-வங்கதேசம் டெஸ்ட்: இந்திய அணி 86/1
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி உணவு இடைவேளையின் போது 1 விக்கெட் இழப்புக்க்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாதில் இன்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைதொடர்ந்து இந்திய அணியின் துவக்க வீரர்களாக முரளி விஜய்,  கே.எல்.ராகுல் களமிறங்கினர்.
அதில் ராகுல் வந்த வேகத்திலேயே 2 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய புஜாரா, முரளி விஜய்யுடன் இணைந்து பொறுப்பான ஆட்டதை வெளிப்படுத்தி வருகிறார். முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் (45), புஜாரா (39) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

வர்த்தகம் :

இஐஎல்-லுடன் 6 நிறுவனங்களை இணைக்க மத்திய அரசு திட்டம்
பொதுத்துறையை சேர்ந்த ஆறு ஆலோசனை நிறுவனங்களை இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத் துடன் (இஐஎல்) இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவில் பெரிய ஆலோசனை நிறுவனமாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கல்வி, இபிசி என பல துறைகளை சேர்ந்த ஆலோசனை நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறு வனங்களை இணைத்து சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாக உருவாக்க வேண்டும் என அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொதுத்துறை நிறுவனங்களை இணைப்பது குறித்து கடந்த பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார். ஆலோசனை பிரிவில் அதற்கான சாத்தியம் இருப்பதாக மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இன்ஜினீயரிங் புராஜக்ட்ஸ் (இந்தியா) நிறுவனம் கட்டுமானம் மற்றும் இபிசி துறைகளில் ஆலோசனை வழங்கி வருகிறது. குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினீயர்ஸ் இந்தியா பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளது.
தவிர கட்டுமானத்துறையில் தொழில்நுட்ப ஆலோசனைகளை மிகான் நிறுவனம் வழங்கி வருகிறது. டெலிகாம் பிரிவில் டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டன்ஸ் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Click here to download 10th February Review in Tamil

No comments:

Post a Comment