Friday 7 April 2017

7TH APRIL CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

அதிநவீன ஏவுகணை பாதுகாப்புச் சாதனத்தை இஸ்ரேலிடம் இருந்து வாங்குகிறது இந்தியா: ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்து
எதிரிநாடுகளின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து நமது நாட்டை பாதுகாக்கும் வல்லமை கொண்ட நவீன ஏவுகணை பாதுகாப்புச் சாதனத்தை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்குகிறது.
இதுதொடர்பாக இஸ்ரேல், இந்தியா இடையே சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.


இஸ்ரேல் அரசுக்குச் சொந்தமான ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துடன் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதேபோல், அந்நாட்டைச் சேர்ந்த ரபேல் நிறுவனத்துடன் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம், இந்திய ராணுவத்துக்கு தரையில் இருந்து பாய்ந்து சென்று எதிரியின் இடத்தில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் மத்திய ரக நவீன ஏவுகணையை அளிக்கும். இதேபோல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலில் பொருத்தக்கூடிய வகையில், நீண்ட தொலைவு வான் பாதுகாப்பு ஏவுகணை சாதனங்களையும் அந்நிறுவனம் அளிக்கும். இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்புத் துறை வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரத்தில் ரபேல் நிறுவனம், வான் பாதுகாப்புச் சாதனத்துக்கு தேவையான உதிரிபாகங்களை இந்தியாவுக்கு அளிக்கும்.
முன்னதாக, இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இந்திய அரசுத் தலைவர்களுடன் மேற்கண்ட ஒப்பந்தங்கள்
குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இந்தியா:
வங்கதேசப் பிரதமர் இந்தியா வருகை: மரபுகளை புறந்தள்ளி நேரில் சென்று வரவேற்றார் மோடி
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை பூங்கொத்து வழங்கி வரவேற்கும் பிரதமர் மோடி.
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மோடி மரபுகளை விலக்கி வைத்து விட்டு தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.
அண்டை நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில், இத்தனை ஆண்டுகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரபுகளையும் தாண்டி பிரதமர் செயல்பட்டிருப்பது பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்காக வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா வெள்ளிக்கிழமை தில்லி வந்தார். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு பிரதமர் மோடி பூங்கொத்து வழங்கி வரவேற்பு தெரிவித்தார். அப்போது மத்திய அமைச்சர்களும், அரசு உயரதிகாரிகளும் உடனிருந்தனர்.

தமிழகம்:

மாநில தேர்தல் ஆணையாளராக மாலிக் பெரோஸ் கான் நியமனம்: இன்று பொறுப்பேற்கிறார்
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளராக மாலிக் பெரோஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், சனிக்கிழமை காலை 11 மணியளவில் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்துக்குள் நடத்த வேண்டுமென்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக காலியாக இருந்த மாநிலத் தேர்தல் ஆணையாளர் பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாலிக் பெரோஸ் கானை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் முழு பொறுப்பு மாநில தேர்தல் ஆணையத்தைச் சார்ந்தது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மே மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, மாநிலத் தேர்தல் ஆணையாளராக இருந்த பி.சீதாராமன் கடந்த மார்ச் 22-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனால்
மாநிலத் தேர்தல் ஆணையாளர் பதவி காலியாக இருந்தது.
இந்தப் பதவிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கும் பணியில் தமிழக அரசு கடந்த சில நாள்களாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான மாலிக் பெரோஸ் கானை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

விளையாட்டு:

டேவிஸ் கோப்பை ராம்குமார், பிரஜ்னேஷ் வெற்றி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான ஆசிய-ஓசியானியா குரூப் 1 போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் நாளில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆகியோர் வெற்றி கண்டனர்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் 6-2, 5-7, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் டெய்முர் இஸ்மெயிலை தோற்கடித்தார்.
3 மணி, 3 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ராம்குமார் 6-2 என்ற கணக்கில் கைப்பற்ற, அதற்குப் பதிலடியாக அடுத்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார் டெய்முர்.
இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட ராம்குமார் 3-ஆவது செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்ற, 4-ஆவது செட்டில் டெய்முர் கடுமையாகப் போராடினார். ஆனால் விடாப்பிடியாக போராடிய ராம்குமார் அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

வர்த்தகம் :

விக்கெட் இழப்பின்றி வென்றது கொல்கத்தா: கிறிஸ் லின் 93, கம்பீர் 76
விக்கெட் இழப்பின்றி வென்ற பிறகு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் கிறிஸ் லின், கெளதம் கம்பீர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 14.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 184 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின் 41 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 93 ரன்களும், கெளதம் கம்பீர் 48 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 76 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் அணியில் ஜேசன் ராய்-பிரென்டன் மெக்கல்லம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 3.1 ஓவர்களில் 22 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ராய் 14 ரன்களில் (12 பந்துகள்) வெளியேற, கேப்டன் சுரேஷ் ரெய்னா களம்புகுந்தார்.விரிவாக்கத் திட்டங்களில் ரூ.4,300 கோடி முதலீடு: பி.எஸ்.என்.எல்.
பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் விரிவாக்கத் திட்டங்களில் ரூ.4,300 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்ததாவது:
தொலைத் தொடர்புத் துறையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது.
வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்காக ஏற்கெனவே 5,000 'வை-ஃபை ஹாட்ஸ்பாட்' மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நடப்பு நிதி ஆண்டில் கூடுதலாக 35,000- ஹாட்ஸ்பாட் மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதற்காக ரூ. 600 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. அதன் மூலம், வாடிக்கையாளர்கள் தரமான தொலைத்தொடர்பு சேவைகளைப் பெற முடியும்.
 
 

No comments:

Post a Comment