Thursday 13 April 2017

12TH & 13TH APRIL CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

சிங்கப்பூர் ஓபன் 2-ஆவது சுற்றில் சிந்து
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சிந்து தனது முதல் சுற்றில் கடும் போராட்டத்துக்குப் பிறகு 10-21, 21-15, 22-20 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை தோற்கடித்தார். போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து தனது 2-ஆவது சுற்றில் இந்தோனேசியாவின் ஃபிட்ரியானியை எதிர்கொள்கிறார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ரிதுபர்னா 18-21, 13-21 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஷூ யா சிங்கிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் 17-21, 21-7, 21-19 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் எமில் ஹோல்ஸ்டை தோற்கடித்தார். 2-ஆவது சுற்றில் சீனாவின் கியாவ் பின்னை சந்திக்கிறார் சாய் பிரணீத்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் தூதராக ஹர்பஜன் உள்பட 8 பேர் நியமனம்
மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான தூதர்களாக இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் உள்பட 8 பேரை நியமித்துள்ளது ஐசிசி.
பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதி, வங்கதேசத்தின் ஹபிபுல் பாஸ்கர், இங்கிலாந்தின் இயான் பெல், நியூஸிலாந்தின் ஷேன் பாண்ட், ஆஸ்திரேலியாவின் மைக் ஹசி, இலங்கையின் குமார் சங்ககாரா, தென் ஆப்பிரிக்காவின் கிரீம் ஸ்மித் ஆகியோர் மற்ற 7 பேர் ஆவர்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் ஜூன் 1 முதல் 8 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், 'இந்தியா நடப்பு சாம்பியனாக களமிறங்குகிற உலகளாவிய போட்டிக்கு நான் தூதராக நியமிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய விஷயமாகும். அதற்காக பெருமை கொள்கிறேன். இந்த முறை இந்தியா கோப்பையை கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்றார்.
முன்னாள் பாகிஸ்தான் கேப்டனான அப்ரிதி கூறுகையில், 'தலைசிறந்த வீரர்களைக் கொண்ட தூதர் குழுவில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் 3 பேர் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்தவர்கள்' என்றார்.

உலகம் :

உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் இணையதளம் இன்று தொடக்கம்
நான்காவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் இணையதளம் தொடக்க விழா சென்னையில் வியாழக்கிழமை (ஏப்.13) நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சென்னை வளர்ச்சிக் கழகத் தலைவர் வி.ஆர்.எஸ்.சம்பத் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
சென்னை வளர்ச்சிக் கழகமும் உலகத் தமிழர் பொருளாதார மையமும் இணைந்து நடத்தும் 4-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டு இணையதளம் தொடக்கம் மற்றும் விளக்க ஏடு வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இந்தியா:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: 18 மசோதாக்கள் நிறைவேற்றம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு புதன்கிழமை (ஏப்.12) நிறைவடைந்தது. இந்தத் தொடரில் இரு அவைகளிலும் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், மொத்தமாக 312 மணி நேரத்துக்கு ஆக்கப்பூர்வமான அலுவல்கள் நடைபெற்றிருப்பதாகவும் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
அவற்றில் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை அமலாக்க வகை செய்யும் 4 துணைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் செயல்பாடுகள் திருப்திகரமாகவும், வெற்றிகரமாகவும் அமைந்திருந்ததாக பிரதமர் மோடி ஏற்கெனவே மகிழ்ச்சி வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதனை தற்போது நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே, பிப்ரவரி மாதத்தின் இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதுதான் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த நடைமுறையை மாற்றி முன்கூட்டியே (பிப்.1) இம்முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது மத்திய பாஜக அரசு. அதற்கு தகுந்தாற்போல, ஜனவரி 31-ஆம் தேதியே பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையுடன் தொடங்கியது.
பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்தால்தான், அதில் வெளியிடப்படும் அறிவிப்புகளை நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே செயல்படுத்த முடியும் என்று மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.
மேலும், இம்முறை ரயில்வே பட்ஜெட் தனியாகத் தாக்கல் செய்யப்படாமல் பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளில் மத்திய அரசு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி: குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலம்
2016ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விருதுகளை வழங்கி கௌரவித்தார். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திரைப்பட பின்னணிப் பாடகர் யேசுதாஸ், ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி, பிரணாப் முகர்ஜி கௌரவித்தார்.
மேலும் படிக்க: பத்ம விருதுகள் பெற்றவர்களின் முழுப் பட்டியல்
துக்ளக் இதழ் ஆசிரியர் மறைந்த சோ சார்பில் அவரது மனைவி பத்ம பூஷண் விருதினை வழங்கினார்.
ஒலிம்பிக் வீரர்களான மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர்  உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளையும் பிரணாப் முகர்ஜி வழங்கிப் பாராட்டினார்.

தமிழகம்:

10 வகுப்பு தகுதிக்கு ஆந்திரா வங்கியில் வேலை
சென்னையில் செயல்பட்டு வரும் ஆந்திரா வங்கியில் நிரப்பப்பட உள்ள Sub Staff பணியிடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Sub Staff
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.andhrabank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.andhrabank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வர்த்தகம் :

நான்கு ஜி.எஸ்.டி சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல்!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்  நிறைவேற்றப்பட்ட நான்கு ஜி.எஸ்.டி சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
சுதநதிர இந்தியாவின் மிக முக்கிய வரி சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மசோதாவானது சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனை நாடு முழுவது அமல் செய்வதற்கு வசதியாக நான்கு விதமான துணை மசோதாக்களும் இரண்டு அவைகளிலும் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அந்த நான்கு ஜி.எஸ்.டி சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனை அடுத்து மத்திய அரசின் திட்டப்படி வரும் ஜுலை ஒன்றாம் தேதி முதல் இந்தியா முழுமைக்கும் சரக்கு மற்றும் சேவை வரியானது (ஜி.எஸ்.டி)  அமலுக்கு வரவுள்ளது.
 

No comments:

Post a Comment