Wednesday 5 April 2017

5TH APRIL CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

மலேசிய ஓபன் பாட்மிண்டன்: சிந்து, சாய்னா அதிர்ச்சித் தோல்வி
மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
மலேசியாவின் குச்சிங் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-18, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் யூஃபெயிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.


 
சென் யூஃபெய் 1 மணி, 8 நிமிடங்களில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த சிந்துவை வீழ்த்தினார். மற்றொரு முதல் சுற்றில் சாய்னா நெவால் 21-19, 13-21, 15-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுசியிடம் தோல்வியடைந்தார்.
குத்துச்சண்டை: அரையிறுதியில் ஷியாம், ரோஹித்
தாய்லாந்து சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஷியாம் குமார் (49 கிலோ எடைப் பிரிவு), ரோஹித் டோகாஸ் (64 கிலோ) ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
இதன்மூலம் அவர்கள் இருவரும் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஷியாம் தனது காலிறுதியில் தாய்லாந்தின் சமாக் சேஹனையும், ரோஹித் தனது காலிறுதியில் கஜகஸ்தானின் குயாடோவ் குயானையும் தோற்கடித்தனர்.
அதேநேரத்தில் இந்தியாவின் மனோஜ் குமார் தனது காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் கியாசோவ் ஷக்ராமிடம் தோல்வி கண்டார். ஷியாம் தனது அரையிறுதியில் முன்னணி வீரரான கியூபாவின் ஜார்ஜ் அலிஜான்ட்ரோவை எதிர்கொள்கிறார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் ரோஹித்தும், உஸ்பெகிஸ்தானின் இல்னூரும் மோதுகின்றனர்.

உலகம் :

ஈரான்: சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஈரானின் வடகிழக்குப் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கதில் ஒருவர் உயிரிழந்தார். ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகுகள் பதிவான இந்த நிலநடுக்கம் மற்றும் அதன் பின்னதிர்வுகள் காரணமாக, 5,000 பேர் வசிக்கும் செஃபீத் சாங் மாவட்டத்தில் 4 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்தது வட கொரியா
ஜப்பான் கடல் பகுதியில் வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையை நடத்தியதாக தென் கொரியாவும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், வட கொரியாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து ஜப்பான் கடலை நோக்கி புதன்கிழமை ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டதாகவும், அந்த ஏவுகணை 60 கிலோ மீட்டர் பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாகவும் தென் கொரியப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.
இந்தத் தகவலை உறுதிப்படுத்திய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன், வட கொரியாவின் நடுத்தர தொலைவு ஏவுகணையான கே.என்.15 ரக ஏவுகணை பரிசோதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.நியூயார்க்கை விட 3 மடங்கு பெரிய நகர் ஒன்றை உருவாக்க சீனா முடிவு
கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுபாட்டில் சிக்கித் தவிக்கும் சீனா, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை இல்லாமல் புதிய நகர் ஒன்றை உருவாக்க  முடிவு செய்துள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில்  நடந்த உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகும் நகரம் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ளது.

இந்தியா:

தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் 205 நிர்வாக அதிகாரி வேலை
கொல்கத்தாவில் செயல்பட்டு  வரும் நேஷ்னல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-ல் 205 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணி: Administrative Officers (Generalist)
காலியிடங்கள்: 205
சம்பளம்: மாதம் ரூ.32,795 - 62,315
வயதுவரம்பு: 01.03.2017 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படும். 
முதல்கட்ட எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 3.6.2017, 4.6.2017
தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.nationalinsuranceindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nationalinsuranceindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தமிழகம்:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் தமிழக ஆளுநர்(பொறுப்பு) சி.எச்.வித்யாசாகர் ராவ்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி புதன்கிழமை பதவியேற்றார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கௌல், கடந்த பிப்ரவரியில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.
இதையடுத்து, தில்லி உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி இந்திரா பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி புதன்கிழமை பதவியேற்று கொண்டார்.

வர்த்தகம் :

புது நிதி ஆண்டை ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தை
புதிய நிதி ஆண்டில் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தது. திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி முன்எப்போதும் இல்லாத சாதனை அளவை எட்டின.
சென்ற பிப்ரவரியில் தயாரிப்புத் துறை உற்பத்தி ஐந்து மாதங்களில் காணப்படாத வகையில் அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து, முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர்.
பொறியியல் சாதன துறை பங்குகளின் விலை அதிகபட்சமாக 3.47% ஏற்றம் கண்டது. இதையடுத்து, ஆரோக்கிய பராமரிப்பு, எண்ணெய்-எரிவாயு, வங்கி, நுகர்வோர் சாதனங்கள், மோட்டார் வாகனம் ஆகிய துறை பங்குகளுக்கும் வரவேற்பு காணப்பட்டது.
 
 

No comments:

Post a Comment