Thursday 20 April 2017

19TH & 20TH APRIL CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

பாட்மிண்டன் தரவரிசை 3-ஆவது இடத்தில் சிந்து
சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக 5-ஆவது இடத்தில் இருந்த சிந்து, சிங்கப்பூர் ஓபனில் காலிறுதி வரை முன்னேறியதன் மூலம் தரவரிசையில் இரு இடங்கள் ஏற்றம் கண்டுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால் ஓர் இடம் முன்னேறி 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.


ஆடவர் ஒற்றையர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் ஆகிய இருவரும் தலா 8 இடங்கள் முன்னேறி முறையே 21 மற்றும் 22-ஆவது இடங்களைப் பிடித்துள்ளனர். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக அஜய் ஜெயராம் 13-ஆவது இடத்தில் உள்ளார். முன்னதாக 14-ஆவது இடத்தில் இருந்த அவர், தற்போது ஓர் இடம் முன்னேறியிருக்கிறார்.

சீன மாஸ்டர்ஸ் காஷ்யப் தோல்வி
சீன மாஸ்டர்ஸ் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் காஷ்யப் தோல்வி கண்டார்.
சீனாவின் சங்ஜௌ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் காஷ்யப் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 10-21, 22-20, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் கியாவ் பின்னிடம் தோல்வி கண்டார்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ஹர்ஷீல் டேனி 17-21, 18-21 என்ற நேர் செட்களில் சீனாவின் சன் பெய்க்ஸியாங்கிடம் தோல்வி கண்டார். இதன்மூலம் சீன மாஸ்டர்ஸ் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
சர்வதேச ஸ்குவாஷ்: அரையிறுதியில் வேலவன்
வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் போட்டி, தொழில்முறை வீரர்கள் ஸ்குவாஷ் சங்கத்தின் (பிஎஸ்ஏ) சார்பில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் வேலவன் 7-11, 11-5, 11-3, 11-6 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் லையீட் புல்லாரை தோற்கடித்தார்.
இந்தப் போட்டியில் தகுதிநிலை வீரராக களமிறங்கிய வேலவன் தனது முதல் சுற்றில் 11-7, 8-11, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரியாவின் அகீல் ரெஹ்மானை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

உலகம் :

உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள புதிய கிரகம்: ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள புதிய கிரகம் ஒன்றை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
சூரியக் குடும்பத்துக்கு அப்பால் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நிற நட்சத்திரத்தை இந்தக் கிரகம் சுற்றிவருவதாக ஐரோப்பிய வானியல் மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எல்.எச்.எஸ். 1140பி. சூப்பர் எர்த் என இந்த புதிய கிரகத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கிரகம் உருவாகி இருக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கிரகம் பூமியை விட அதிக விட்டம் கொண்டது என்று கூறும் விஞ்ஞானிகள், 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இதன் மீது வெளிச்சம் விழுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த பிப்ரவரி மாதம் நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள இந்த கிரகத்தில்  கார்பன் அடிப்படையிலான கரிமப் பொருட்கள் இருப்பதை  கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
சீனா: முதல் சரக்கு ராக்கெட்
விண்வெளியில் பொருள்களை ஏற்றிச் செல்லும் சீனாவின் முதல் சரக்கு ராக்கெட், வியாழக்கிழமை (ஏப். 20) செலுத்தப்படுகிறது. தியான்கோங்-2 விண்வெளி ஆய்வகத்துக்கு அந்த ராக்கெட் எரிபொருள் ஏற்றிச் செல்கிறது.
ஹெச்1பி விசா விதிகளை கடுமையாக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து: இந்திய ஐ.டி. துறைக்கு பெரும் பின்னடைவு
ஹெச்1பி விசா விதிகளை கடுமையாக்குவது தொடர்பான உத்தரவில் கையெழுத்திட்டுவிட்டு ஆதரவாளர்களை நோக்கி வெற்றிச் சின்னம் காட்டுகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்.
ஹெச்1பி விசா விதிகளை கடுமையாக்குவது தொடர்பான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டிருப்பது, இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக புதிதாக பதவியேற்றிருக்கும் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு முடிவாக, ஹெச்1பி விசா விதிகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்தப் போவதாகவும், மிகுந்த திறன் வாய்ந்தவர்கள் அல்லது அதிக அளவில் ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசாக்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யப் போவதாகவும் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்தியா:
பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்
இலங்கை, ரஷியா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பிரதமர்
மோடி அடுத்த மாதம் முதல் ஜூலை மாதம் வரை சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:
இலங்கையில் அடுத்த மாதம் 2-ஆவது வாரத்தில் 'சர்வதேச விசாக தினம்' கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி அங்கு செல்லவிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய பகுதிகளுக்கும் அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைப் பயணத்துக்கு பின்னர், ரஷியாவுக்கு செல்கிறார் மோடி. அங்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறும் சர்வதேச வர்த்தக மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.

தமிழகம்:

ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை வெளியீடு: ஏப்ரல் 24 முதல் விண்ணப்பங்கள் பெறப்படும்
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான (2017-2018) அனைத்து வகை ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்ற அரசின் முடிவின்படி 2017-2018-ஆம் கல்வி ஆண்டில் அரசு நகராட்சி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பொது மாறுதல் கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெறவுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக ராஜாராம் உள்ளிட்ட 5 பேர் நியமனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் உள்பட 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.
வழக்குரைஞர்கள் பிரதாப்குமார், சுப்பையா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜாராம் உள்ளிட்ட 11 பேர் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உறுப்பினர்கள் நியமனத்துக்குத் தடை விதித்தது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது.

வர்த்தகம் :

எல்.ஐ.சி. புதிய பிரீமிய வருவாய் 27% உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி.) முதல் பிரீமிய வருவாய் சென்ற நிதி ஆண்டில் 27.22 சதவீதம் வளர்ச்சி கண்டது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வங்கிகளில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக ஒற்றை-பிரீமியம் பாலிசிகள் விற்பனை சென்ற நிதி ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டது. இதையடுத்து, அந்த நிதி ஆண்டில் முதல் பிரீமிய வருவாய் ரூ.1,24,396.27 கோடியை எட்டியது. 2015-16 நிதி ஆண்டில் ஈட்டிய முதல் பிரீமிய வருவாய் ரூ.97,777.47 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 27.22 சதவீதம் அதிகமாகும்.


 

 

No comments:

Post a Comment