Monday 10 April 2017

10TH APRIL CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

லண்டன் நீதிமன்றத்தில் முதல்முறையாக இந்திய வம்சாவளி நீதிபதி நியமனம்
லண்டனின் மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


அனுஜா ரவீந்திர தீர் (49) என்ற அவர், அந்த நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் முதல் வெள்ளையர் அல்லாத நீதிபதி என்பதும் முக்கிய அம்சமாகும்.
அதுமட்டுமன்றி, தற்போது பணியிலிருக்கும் சர்க்யூட் நீதிபதிகளில் அவர்தான் மிக இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா:
ரூ.54,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் இந்தியா-வங்கதேசம் இடையே கையெழுத்து
தில்லியில் இந்திய - வங்கதேச தொழில் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிகழ்ச்சியில் பங்கேற்ற வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தொழில் துறை தலைவர்கள்.
இந்திய - வங்கதேச தொழில் நிறுவனங்கள் இடையே ரூ.54,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகின.
மின் உற்பத்தி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தில்லியில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில், பல்வேறு இந்திய தொழில் துறை தலைவர்களின் பங்கேற்புடன் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அந்த நிகழ்ச்சியில், வங்கதேசத்தில் உள்ள ராம்பால் நகரில் ரூ.9,600 கோடி செலவில் 1,320 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தைக் கட்டுவதற்காக, வங்கதேச-இந்திய நட்புறவு மின்உற்பத்தி நிறுவனத்துக்கும், எக்ஸிம் வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
வேலை... வேலை... வேலை...: இந்திய தபால் துறையில் 2853 வேலை
இந்திய தபால் துறையின் கர்நாடக வட்டம், மகாராஷ்டிரா, புதுதில்லி தபால் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 2853 ஊரக தபால் சேவாக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Gramin Dak Sevaks (GDS)
மாநிலம்: கர்நாடகம்
காலியிடங்கள்: 1048
மாநிலம்: மகாராஷ்டிரா
காலியிடங்கள்: 1789
மாநிலம்: புதுதில்லி
காலியிடங்கள்: 16
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 8.5.2017, 06.05.2017
கர்நாடக தபால் வட்டம்: http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/04/Karnataka-Postal-GDS-Circle-Recruitment-2017-1048-Gramin-Dak-Sevaks-GDS-Posts.pdf
மகாராஷ்டிரா தபால் வட்டம்: http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/04/Maharashtra-Postal-GDS-Circle-Recruitment-2017-1789-Gramin-Dak-Sevaks-GDS-Posts.pdf
புதுதில்லி தபால் வட்டம்: http://indiajobvacancy.com/wp-content/uploads/2017/04/Delhi-Postal-GDS-Circle-Recruitment-2017-16-Gramin-Dak-Sevaks-GDS-Posts.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
SPMCIL-ல் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை
இந்திய அரசு நிறுவனமான பாதுகாப்பு அச்சிடுதல் மற்றும் மைன்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2017-ம் ஆண்டிற்கான 141 இளநிலை தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 141
பணியிடம்: நாசிக் (மகாராஷ்டிரம்)
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 99
2. Tool & Die Maker Trade - 02
3. Forger & Heat Treatment - 02
4. Lab Asstt. /Inst. Mech. Chemical - 06
5. Driver Cum Mechanic - 04
6. Electrical /Electronics - 05
7. Mill Wright/ Mill Wright Mech - 09
8. Machinist - 03
9. Turner - 04
10. Welder - 01
11. Plumber - 04
12. Mason (Building) - 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி 18 -25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தமிழகம்:

குரூப் 4 தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-இல் தொடக்கம்
குரூப் 4 தொகுதியில் அடங்கியுள்ள தட்டச்சர் நிலை காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17-இல் தொடங்குகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-குரூப் 4 தொகுதியில் சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை-ஐஐஐ பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்ய எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது.
தேர்வானோருக்கு விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கவும், அவற்றின் உண்மைத் தன்மையை அறிய சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17 முதல் 24 வரையில் சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அட்டவணை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு: "ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியீடு
தமிழகத்தில் ஏப்.29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவோருக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (தாள்-1, தாள்-2) ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மார்ச் 23-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) 2 லட்சத்து, 37 ஆயிரத்து, 293 பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து, 2 ஆயிரத்து 964 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
இதன் மூலம் ரூ.33.50 கோடி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உடனடியாக சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (www.trb.tn.nic.in) இணையதளத்தில் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விளையாட்டு:

உலக ஹாக்கி லீக்: இந்திய மகளிர் சாம்பியன்
உலக மகளிர் ஹாக்கி லீக் "ரவுண்ட்-2' போட்டியில் இந்திய அணி சாம்பியன் ஆனது.
இந்திய அணி தனது இறுதிச் சுற்றில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் சிலி அணியைத் தோற்கடித்தது.
கனடாவின் வான்கோவர் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் மோதிய இந்தியாவும், சிலியும் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடின. 5-ஆவது நிமிடத்தில் கோலடித்த சிலி அணி 1-0 என முன்னிலை பெற்றது.
22-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் இந்தியாவின் கோல் வாய்ப்பை சிலி கோல் கீப்பர் கிளாடியா முறியடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் வரையில் இந்தியா பின்தங்கியே இருந்தது.
3-ஆவது கால் ஆட்டத்தின் 41-ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் இந்தியாவின் அனுபா பர்லா கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது.
கடைசிக் கட்டத்தில் இரு அணிகளும் கோலடிப்பதில் தீவிரம் காட்டியபோதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்திய கேப்டன் ராணியின் கோல் வாய்ப்பை அற்புதமாக முறியடித்தார் சிலி கோல் கீப்பர் கிளாடியா.
இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருக்க, வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
உலக ஸ்குவாஷ் காலிறுதியில் ஜோஷ்னா
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
எகிப்தின் எல் கெளனா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஜோஷ்னா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 11-5, 7-11, 9-11, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் அலிசன் வாட்டர்ûஸ வீழ்த்தினார். இதுவரை அலிசனுடன் 6 முறை மோதியுள்ள ஜோஷ்னா, இப்போது முதல்முறையாக அவரை வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக ஜோஷ்னா தனது முதல் சுற்றில் 13-11, 11-8, 12-10 என்ற நேர் செட்களில் ஜப்பானின் மிஸாக்கி கோபயாஷியை தோற்கடித்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான தீபிகா பலிக்கல் தனது முதல் சுற்றில் 9-11, 10-12, 6-11 என்ற நேர் செட்களில் மலேசியாவின் நிகோல் டேவிட்டிடம் தோல்வி கண்டார்.

வர்த்தகம் :

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 10.5% சரிவு
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை வாயிலான வருவாய் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 10.5 சதவீதம் சரிந்தது.
இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், வாடிக்கையாளர் சேவை மூலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.37,284 கோடி வருவாய் ஈட்டின. முந்தைய ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.41,681 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 10.5 சதவீதம் சரிவாகும். ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்த வருவாய் ரூ.44,754 கோடியாக காணப்பட்டது.

No comments:

Post a Comment