Tuesday 18 April 2017

18TH APRIL CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இடைக்காலத் தேர்தல்: பிரதமர் தெரசா மே திடீர் அறிவிப்பு
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பை தனது இல்லத்துக்கு முன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கும் பிரதமர் தெரசா மே.
பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வரும் ஜூன் 8-ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடத்தப்படும் பிரதமர் தெரசா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்


தற்போதைய நாடாளுமன்றத்துக்கான பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் ஏறத்தாழ 3 ஆண்டுகள் உள்ள நிலையில், தெரசா மே இந்தத் திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு முன்னர் நாட்டில் ஸ்திரத்தன்மையற்ற நிலையை ஏற்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சியினரைக் கடுமையாகச் சாடினார் தெரசா மே.
தலைநகர் லண்டனில் டௌனிங் வீதியில் அவரது இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களிடையே அவர் பேசியதாவது:
பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி வரும் ஜூன் மாதம் 8-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும். இதற்கான காரணங்களையும் தேர்தலின்போது பிரிட்டன் மக்கள் எதைப் பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்பது பற்றியும் நான் விளக்க விரும்புகிறேன்.
ஆஸ்திரேலியாவில் பணியாளர் தொடர்பான விசா முறை ரத்து
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா செல்வதற்குப் பணியாளர்கள் அதிக அளவில் பயன்படுத்திய விசா முறையை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இப் தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களால் உருவான நாடு ஆஸ்திரேலியா என்றாலும், இந்த நாட்டில் உள்ளவர்களுக்குதான் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆஸ்திரேலியர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறி போகும் விதத்தில் '457 விசா' என்று அறியப்பட்ட விசா முறை இருந்து வந்தது. அதனை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
'457 விசா' முறையைப் பயன்படுத்தி தாற்காலிகப் பணியாளர்கள் குடியேறி, இங்குள்ளவர்கள் நியாயமாகப் பெற வேண்டிய வேலைவாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கின்றனர்.
இந்தியா:
பிஎஸ்எல்வி சி 38 ராக்கெட் மே மாதம் ஏவப்படும்: இஸ்ரோ இயக்குநர் தகவல்
பிஎஸ்எல்வி சி 38 ராக்கெட் மே மாதத்தில் ஏவப்படும் என இஸ்ரோ ராக்கெட் தயாரிப்புப் பிரிவு (iprc) இயக்குநர் பி.வி.வெங்கிடகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) 58-ஆவது நிறுவன நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பேசியதாவது:
பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முதலிடம் பெறுவது சாதாரண விஷயமல்ல. இந்த வெற்றியில் அனைத்து மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களின் பங்குள்ளது. தொழில்நுட்பம், உலகமயம் மற்றும் பருவநிலை மாற்றங்களின் தாக்கங்கள் மூன்றும்தான் உலகின் முக்கியக் காரணிகளாக இருந்து வருகின்றன. மாற்றங்கள் வேகமாக நடக்கின்றன, நிகழும் மாற்றங்களுக்கேற்ப புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்றார் அவர்.
முன்னதாகப் பேசிய ஐஐடி இயக்குநர், பாஸ்கர் ராமமூர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கல்லூரி வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள், நிறுவனங்களிடமிருந்து இதுவரை ரூ.55 கோடி வரை நிதி திரட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பான பணிகள் மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான காசோலைக்கு ரூ.100 கட்டணம்: எஸ்பிஐ கார்டு வசூலிப்பு
ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான மதிப்பில் வழங்கப்படும் காசோலைக்கு ரூ.100 கட்டணத்தை 'எஸ்பிஐ கார்டு' நிறுவனம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, ஜிஇ கேபிடல் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக எஸ்பிஐ கார்டு நிறுவனம் உள்ளது. நாடு முழுவதும் கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) வழங்கும் பணியை 'எஸ்பிஐ கார்டு' செய்து வருகிறது. இதில் 40 லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில், 'எஸ்பிஐ கார்டு' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ரூ.2 ஆயிரம் அல்லது ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவான தொகை மதிப்புடைய காசோலைக்கு ரூ.100 கட்டணம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வசூலிக்கப்படுகிறது. ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புடைய காசோலைக்கு கட்டணம் கிடையாது. இலவசமாகும்.
மத்திய அரசின் கொள்கையின்படி, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே இந்த முடிவின் நோக்கமாகும் என்று 'எஸ்பிஐ கார்டு' நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகம்:

உளவுத்துறை ஐ.ஜி.யாக சத்தியமூர்த்தி மீண்டும் நியமனம்
தமிழக உளவுத் துறை ஐ.ஜி.யாக கே.என்.சத்தியமூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்டி செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார். சத்தியமூர்த்தி உளவுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
உளவுத் துறை ஐ.ஜி.யாக இருந்து வந்த கே.என். சத்தியமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் முதல் திடீரென நீண்ட விடுப்பில் இருந்தார். இதனால், காவலர் நலப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த பிப்ரவரி மாதம் 13 -ஆம் தேதி உளவுத் துறை ஐ.ஜி. பதவிக்கு நியமிக்கப்பட்டார். சத்தியமூர்த்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், டேவிட்சனும் 10 நாள்களுக்குப் பின்னர் மீண்டும் காவலர் நலப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதனால் உளவுத்துறை ஐ.ஜி. பொறுப்பை, பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி கூடுதல் பணியாகக் கவனித்து வந்தார்.
இந்த நிலையில், உளவுத்துறை ஐ.ஜி. பதவிக்கு கே.என்.சத்தியமூர்த்தியை மீண்டும் நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் நிரஞ்சன் மார்டி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். சத்தியமூர்த்தி உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்படுவது மூன்றாவது முறையாகும்.
கடந்த 2015 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக சத்தியமூர்த்தி உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.
ஆண்டு இறுதியில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர்
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்குகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன்,
இந்த ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மீண்டும் நடத்தப்படவுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சென்னை மாநிலக் கல்லூரியின் 175-ஆவது ஆண்டு கொண்டாட்ட நிறைவு விழா, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதல்வர் பழனிசாமி கல்லூரியின் 175-ஆம் ஆண்டு நினைவு வளைவிற்கு அடிக்கல் நாட்டி வைத்து, தேசிய மாணவர் படை உள்பட கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் விளையாட்டுப் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதியையும் அவர் ஏற்றி வைத்தார்.
முதல்வர் பழனிசாமி பேசியது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். இதில் மேற்கொண்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வர்த்தகம் :

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்: ஆளுநர் வித்யாசாகர் ராவ்
'டெக்னோ 2017' தொழில்நுட்ப மாநாட்டில் முதல் பரிசுக்கான ரூ.1 லட்சத்துக்கான காசோலையை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் பி.இ. இயந்திரவியல் மாணவர் தீபக் கணேசனுக்கு வழங்குகிறார் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ
உலக அளவில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என தமிழக ஆளுநரும் (பொறுப்பு), பல்கலைக்கழக வேந்தருமான வித்யாசாகர் ராவ் பெருமிதம் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகமும், அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பும் (ஏ.ஐ.எம்.ஓ) இணைந்து நடத்திய 'டெக்னோ 2017' இரண்டு நாள் தொழில்நுட்ப மாநாட்டின் ஒரு பகுதியாக, சிறந்த தொழில்நுட்பத் திட்டத்தை உருவாக்கி முதல் மூன்று இடங்களைப் பிடித்த கல்லூரிகளுக்கு பரிசு வழங்கும் விழா அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

No comments:

Post a Comment