Tuesday 25 April 2017

25TH APRIL CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார் ரணில் விக்ரமசிங்கே
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்தார். கொழும்பில் இருந்து யு.எல்.195 விமானம் மூலம் தில்லி வந்தடைந்தார்.   இந்நிலையில் நாளை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மற்றும் வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசயுள்ளார்.


அதன் பிறகு, மதியம் பிரதமர் மோடியை சந்தித்து பேசயுள்ளார். இந்தியா-இலங்கை இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தமும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவதும், இரு நாட்டு மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தப்படும். அப்போது பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகலாம் என தெரியவந்துள்ளது.
ரணில் விக்ரம சிங்கேயின் இந்திய வருகையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கை செல்கிறார்.
இந்தியா:
பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 1500 உதவி லைன்மேன் வேலை
பஞ்சாப் அரசு பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎஸ்பிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 1500 உதவி லைன்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Lineman
மொத்த காலியிடங்கள்: 1500
வயதுவரம்பு: 39க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.6400 - 20200 + தர ஊதியம் ரூ.3400
தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதியுடன் லைன்மேன் பணியில் 2 ஆண்டு அப்பரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2017
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கட்டணம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விரிவான விளக்கங்கள் அறிய https://cra289.pspcl.in/adv.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
எச்ஏஎல் நிறுவனத்தில் பல்வேறு வேலை
எச்ஏஎல் என்று அழைக்கப்படும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 17
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Vice Principal – 1
2. PRT (English) – 2
3. PRT (Maths & EVS) – 5
4. PRT (Computer) – 1
5. Physical Instructor (Male) – 1
6. LDC – 1
7.  KG Teacher – 1
8. Peon (Male) – 2
9. Ayah – 2
10. PRT (Hindi) – 1
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hal-india.com/Common/Uploads/Resumes/571_CareerPDF1_HAL%20Website%20matter%204th%20May%202017%20(2
).pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விளையாட்டு:

பிளே ஆஃப் நோக்கிச் செல்லும் புணே! வெளியேறவுள்ள கோலி அணி!
ஐபிஎல் போட்டி தற்போது இரண்டாம் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. தில்லி அணி தவிர இதர அணிகள் அனைத்தும் குறைந்தது ஏழு ஆட்டங்களாவது விளையாடியுள்ளன. இதனால் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப்-புக்குத் தகுதி பெறும் என்கிற விவாதங்கள் தொடங்கியுள்ளன.
புணே அணி இந்த ஐபிஎல் போட்டியிலும் சுமாராக விளையாடிவந்தாலும் புள்ளிகள் பட்டியலில் தற்போது நான்காம் இடம் பிடித்துள்ளது. இது எதிர்பாராத மாற்றம். சில நாள்களுக்கு முன்பு அந்த அணி கடைசி இடத்தில் இருந்தது. இப்போது பிளே ஆஃப்-புக்குச் செல்லக்கூடிய தகுதியை அடையவுள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ். இதன்மூலம் மும்பையின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது புணே. முன்னதாக மும்பை அணி தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வென்றிருந்தது.

வர்த்தகம் :

பங்குச்சந்தை உயர்வுடன் முடிவு
இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் முடித்துள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி முதல்முறையாக, 9,300 என்ற அதிகபட்ச புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான், முதல் சுற்றில் வெற்றிபெற்றுள்ளார். இதன் காரணமாக, ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் ஏற்றம் கண்டன. இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகளும் உயர்வுடன் இன்றைய வர்த்தகத்தை தொடங்கின. முன்னணி நிறுவனங்களின் மார்ச் காலாண்டு மற்றும் முழு நிதியாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகிவந்தன. இதில் பெரும்பாலான நிறுவனங்களின் அறிக்கை விவரங்கள், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரிப்பதாக அமைந்துள்ளன.
வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 287 புள்ளிகள் அதிகரித்து, 29,943 புள்ளிகளாக நிலைபெற்றது. நிஃப்டியில் 89 புள்ளிகள் உயர்ந்து, 9,307 புள்ளிகளாக முடிந்தது.
 
 
 

No comments:

Post a Comment