Tuesday 4 April 2017

4TH APRIL CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

ஐபிஎல்: 47 நாள்கள் -8 அணிகள் - 60 ஆட்டங்கள்
வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, அதிரடி, ஆக்ரோஷம், சிக்ஸர் மழை என ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவைக்கும் 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஹைதராபாதில் புதன்கிழமை தொடங்குகிறது.


புதிய கேப்டன்கள், புதிய பயிற்சியாளர்கள், கேப்டன் பதவியின்றி களமிறங்கும் தோனி என ஏராளமான மாற்றங்கள் இந்த சீசனில் நிகழ்ந்துள்ளன. புணே அணியால் ரூ.14.5 கோடிக்கு வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், பெங்களூர் அணியால் ரூ.12 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள டைமல் மில்ஸ் ஆகியோர் தங்களின் அணிக்காக வெற்றி தேடித்தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

உலகம் :

வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியா - பிரிட்டன் பேச்சுவார்த்தை
இந்தியா வந்துள்ள பிரிட்டன் நிதியமைச்சர் பிலிப் ஹாமண்டை, தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான இருதரப்புப் பேச்சுவார்த்தை, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கென இந்தியா வந்துள்ள பிரிட்டன் நிதியமைச்சர் பிலிப் ஹாமண்ட், நிதிமயமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரிடையே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் வெளியேறும் நிலையில், இந்தியாவுடன் தனது வர்த்தக உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த பிரிட்டன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து, பிலிப் ஹாமண்ட் - அருண் ஜேட்லி இடையிலான பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா:

WAPCOS நிறுவனத்தில் 47 சர்வேயர்கள், தொழில்நுட்பவியலாளர், பொறியாளர் பணி
WAPCOS என அழைக்கப்படும் நீர் மற்றும் மின்சார கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் 2017 - 2018-ம் ஆண்டிற்கான 47 பொறியாளர் (சிவில்), ஜிஐஎஸ் மேற்பார்வையாளர், சூப்பர்வைஸர், டெக்னீசியன், இளநிலை பொறியாளர் (சிவில்), சர்வேயர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Water and Power Consultancy Services
மொத்த காலியிடங்கள்: 47
பணியிடம்: குஜராத்
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Engineer (Civil)-15
2. GIS Supervisor /Technician-02
3. Jr. Engineer (Civil) - 15
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
4. Surveyors-15
தகுதி: 10, +2 மற்றும் ஐடிஐ, பொறியியல் துறையில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“Chief Project Manager WAPCOS Limited SSP Field Unit, 1st Floor,“Sadbhav Complex”, Near Drive-in-Cinema Road, Ahmedabad - 380054, Gujarat”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.04.217
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.wapcos.co.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
BECIL நிறுவனத்தில் வேலை: 14க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பிஇசிஐஎல் என அழைக்கப்படும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து 14-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Manager
சம்பளம்: மாதம் ரூ.70,000
பணி: Team Lead - 01
சம்பளம்: மாதம் ரூ.46,000
பணி: Database Administration Support - Level 2  
சம்பளம்: மாதம் ரூ.28,000
பணி: Database Administration Support - Level 1  
சம்பளம்: மாதம் ரூ.22,000
பணி: SW Developer - 02
சம்பளம்: மாதம் ரூ.18,000
பணி: Tester - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: பி.எஸ்சி (ஐடி), பிசிஏ, பி.இ., பி.டெக் அல்லது எம்சிஏ, எம்.எஸ்சி (ஐடி) படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Assistant General Manager (HR),
in BECILs Corporate office, BECIL Bhawan, C-56A-17, Sector-62, Noida-201307 (U.P.)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 13.04.2017

தமிழகம்:

தமிழ்நாடு கால்நடை பல்கலை.க்கு தேசிய அளவில் முதலிடம்
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட சிறந்த கால்நடை பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சு.திலகர் சென்னை செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசை ஆய்வு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மொத்தம் 2,600 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.
அதன்படி, பல்கலைக்கழகங்களுக்கான மதிப்பீட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 38-ஆவது இடத்தையும், மாநில அளவில் 4-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. மேலும் தேசிய அளவில் முதல் 50 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது பெருமையளிக்கிறது.


வர்த்தகம் :

புதிய ரூ.200 நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டம்
புதிய ரூ.200 நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் முதலாக, இந்த நோட்டுகள் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
கருப்புப் பணப்புழக்கத்தை தடை செய்யும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டன. இதையடுத்து, ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அதிகளவில் புழக்கத்தில் விட்டு வருகிறது.
இது மட்டுமின்றி, ரூ.50, ரூ.100 போன்றவற்றிலும் புதிய நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அடுத்த முயற்சியாக, ரூ.200 நோட்டை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட திட்டமிட்டுள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான கொள்கை முடிவுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கி ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment