Monday 17 April 2017

16TH & 17TH APRIL CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பு கடல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை ரத்து
தில்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பு கடல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. 


இந்தியா - பாகிஸ்தான் இரு தரப்பு கடல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை இன்று தொடங்கி 19-ம் தேதி வரை தில்லியில் நடக்க இருந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது மீனவர்கள் பிரச்சினை, மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருவதால் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த இந்தியா விரும்பாமல் ரத்து செய்துள்ளது.
கணினி, இணையதள முன்னோடி  ராபர்ட் டெய்லர் மரணம்
கணினி மற்றும் இணையதள முன்னோடியான ராபர்ட் டெய்லர் (85) காலமானார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், சான் பிரான்சிஸ்கோ அருகே உள்ள உட்ûஸட் நகரில் வியாழக்கிழமை அவர் காலமானதாக அவரது மகன் கர்ட் டெய்லர் கூறினார்
அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனில் கணினி மேம்பாட்டுக்கான மின்னணு ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, பென்டகனின் நிதி உதவியுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த பல நிறுவனங்கள், கல்வி நிலையங்களை மூன்று தனித்தனி கணினிகள் மூலம் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. அதனைத் தவிர்க்கும் வழியை ஆராய்ந்தார்.
அதன் விளைவாகப் பல கணினிகளை இணைத்துச் செயல்பட வைக்கும் நெட்வர்க் முறை 1966-இல் உருவானது.
பொருளாதார வளர்ச்சியில் இலக்கை விஞ்சி சீனா சாதனை!
சீனாவின் முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி அரசு நிர்ணயித்த இலக்கை விஞ்சி சாதனை படைத்தது.
இதுகுறித்து சீனாவின் தேசிய புள்ளியியல் அமைப்பு (என்.பி.எஸ்.) திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
உள்கட்டமைப்புத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு அதிகரித்ததுடன் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்தது. இதன் காரணமாக, நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதலாவது காலாண்டில் சீனப் பொருளாதாரம் 6.9 சதவீதம் என்ற ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டியது.
அதன்படி, முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.63 லட்சம் கோடி டாலரை (சுமார் ரூ.174 லட்சம் கோடி) தொட்டுள்ளது.
வட கொரியாவின் புதிய ஏவுகணை சோதனை தோல்வி
வட கொரியத் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற ராணுவப் பேரணியில் இடம் பெற்ற ஏவுகணை.
வட கொரியா நிகழ்த்திய ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததாக தென் கொரியா தெரிவித்தது.
தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
வட கொரியாவின் ஹம்கியோங் மாகாணத்தில் உள்ள சின்போ பகுதியில் ஏவுகணை சோதனை சனிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த சோதனை தோல்வியில் முடிந்தது என்று முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த வகையான ஏவுகணை செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

இந்தியா:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 7.2 சதவீதமாக உயரும்: உலக வங்கி அறிவிப்பு
நடப்பு 2017-18-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக உயரும் என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
கருப்புப் பண புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்ததை அடுத்து, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், பல்வேறு பன்னாட்டு நிதி அமைப்புகளில் இந்தியா அதிக முதலீடுகளை செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
உலக வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 2016-ஆம் ஆண்டு 6.8 சதவீதமாக இருந்ததாகவும், அது நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக வளர்ச்சியடையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பண வழக்குகளை கையாள சிபிஐ-க்கு புதிய ஆன்லைன் அமைப்பு
கருப்புப் பண வழக்குகளை கையாள்வதற்கு உதவியாக மத்திய புலனாய்வு (சிபிஐ) அமைப்புக்கு புதிய ஆன்லைன் அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாவது:
சட்ட விரோதமாக சொத்து சேர்ப்பு, கருப்புப் பண பதுக்கலுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகளை கையாள்வதற்கு வசதியாக சிபிஐ-க்கு புதிய ஆன்லைன் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது
இந்தப் புதிய அமைப்பு மூலம், சிபிஐ விசாரணை அதிகாரிகள் கருப்பு பண பதுக்கல் தொடர்பான பலதரப்பட்ட தரவுகளை, வருமான வரித்துறை, வங்கி, நிதி புலனாய்வு பிரிவு (எப்ஐயு) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் எளிதாகவும், விரைவாகவும் பெற முடியும்.

தமிழகம்:

பொறியியல் பட்டதாரிகளுக்கு சென்னை மெட்ரோ ரயிலில் வேலை
சென்னை மெட்ரோ ரயிலில் காலியாக உள்ள பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 06
பணியிடம்: சென்னை
பணி: Site Engineer (Civil) - 06
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 12.04.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.40,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU,
CHENNAI - 600 107.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 22.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://chennaimetrorail.org/wp-content/uploads/2017/04/Emp-Notification-Site-Engineer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை
திருவாரூர் மாவட்டம் கொருக்கையில் செயல்பட்டு வரும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாகவுள்ள 17 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்ப, 36 வயதிற்குட்பட்ட தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்:
பணியிடம்: கொருக்கை (திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  
Skilled Assistant
1. Skilled Assistant [Mechanical Department] - 01
2. Skilled Assistant [Computer Engg Dept] - 01
3. Skilled Assistant [Electronics Department] - 01
4. Skilled Assistant [Mechanical Department] - 01
5. Skilled Assistant [Mechanical Dept] - 01
6. Skilled Assistant [Electrical Department] - 01
7. Skilled Assistant [Electrical Department] - 01
Lab Assistant
8. Lab Assistant [Civil Department] - 01
9. Lab Assistant Electronics Department] - 01
10. Lab Assistant [Civil Department] - 01
11. Lab Assistant [Electrical Department] - 01
12. Lab Assistant [ Mechanical Department] - 01
13. Lab Assistant [Electronics Department] - 01
14. Lab Assistant [Electricial Department] - 01
15. Lab Assistant [Computer Engg Dept] - 01
16. Lab Assistant [Mechanical Department] - 01
17. Lab Assistant [Electronics Department] - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2017 தேதியின்படி 36க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஒவ்வொரு பணிக்கும் விண்ணப்பிக்க தகுதி பெற்ற நபர்கள், தங்களது 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஐடிஐ சான்று, என்டிசி, என்ஏசி சான்று, சாதிச்சான்று ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்கும் பதவியின்பெயர், துறை விவரம், பிறந்த தேதி, சாதி விவரம் போன்றவற்றை தெளிவார குறிப்பிட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதல்வர்,
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கொருக்கை-614711
திருத்துறைப்பூண்டி தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விளையாட்டு:

சாய் பிரணீத்: இந்திய பேட்மிண்டனின் புதிய நட்சத்திரம்!
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சூப்பர் சீரிஸ் போட்டியில் பிரணீத் பட்டம் வெல்வது இதுவே முதல்முறை.
சூப்பர் சீரிஸ் போட்டியில் இதற்கு முன்னால் காலிறுதிக்குப் பிறகு அவர் சென்றது கிடையாது. ஆனால் இந்த ஒரு கோப்பையை வென்றதன் மூலம் அனைத்தையும் தகர்த்தெறிந்துவிட்டார் இந்த 24 வயது இளைஞன். சாய்னா நெவால், சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோருக்குப் பிறகு சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்ற நான்காவது இந்தியர் என்கிற பெருமையுடன்.

வர்த்தகம் :

"இந்தியா-ஜப்பான் பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை'
இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்ற வர்த்தக கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது:
இந்தியா மற்றும் ஜப்பான் இயல்பான தோழமை கொண்ட நாடுகள். இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படும்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தயாரிப்புத் துறையின் பங்களிப்பு தற்போது 17 சதவீதமாக உள்ளது. அதனை 25 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட இயல்பான வர்த்தக கூட்டாளியான ஜப்பான் மிகப்பெரும் உதவியாக இருக்கும்.
இந்தியாவில், உணவுப் பதப்படுத்தல், ஜவுளி, மருத்து உபகரணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல்தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜப்பான் தனது முதலீட்டை பரவலாக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment