Friday 26 May 2017

27th MAY CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

வடகொரியாவுடனான எல்லையோர கட்டுப்பாட்டை அதிகரித்த சீனா
வடகொரியாவுடனான எல்லையோர கட்டுப்பாட்டை சீனா அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சீனா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிழக்கு ஆசியாவுக்கான அமெரிக்க பிரதிநிதி கூறும்போது, "வடகொரியாவுடனான எல்லையோர கட்டுப்பாட்டை சீனா அதிகரித்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும் சீனா- வடகொரியா எல்லையோரத்தில் சீன போலீஸ் அதிகாரிகள் சுங்க ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் வடகொரியாவிலிருந்து நிலக்கரி எற்றுமதி செய்வதை சீனா நிறுத்திக் கொண்டது.


இந்தியா:
இன்று துணைவேந்தர்கள் நேர்காணல்: ஆளுநருடன் தலைமைச் செயலர் சந்திப்பு
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உயர் கல்வித் துறைச் செயலர் சநீல் பாலிவால் ஆகியோர் வியாழக்கிழமை (மே 25) சந்தித்தனர்.
துணைவேந்தர்களின் நேர்காணலை ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெள்ளிக்கிழமை (மே 26)நடத்த உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
3 பல்கலைக்கழகங்களுக்கு...தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியிடங்களாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப தெரிவுக் குழு அமைக்கப்பட்டது.
இந்தத் தெரிவுக் குழுவின் சார்பில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தலா 3 பேரைத் தேர்வு செய்து ஆளுநருக்கு உயர் கல்வித் துறை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி, மூன்று பல்கலைக்கழகங்களிலும் சேர்த்து 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 23 முதல் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு; மே 29 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக வரும் ஜூன் 23 -ஆம் தேதி முதல் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு நடைபெறவுள்ளதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வராதவர்களுக்காக வரும் ஜூன் 23 முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை பிளஸ்-2 துணைத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று மே 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜூன் 1 (வியாழக்கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் பிரௌசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.

தமிழகம்:

‘சன்சத் ரத்னா விருதுகள்’: சென்னை ஐஐடியில் எம்.பி.க்களுக்கு வழங்கும் விழா
ஏ.பி.ஜே..அப்துல் கலாமின் ஆலோசனையின்படி அவரே தொடங்கி வைத்தது தான் ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கும் விழா ஆகும். கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்த விழா ஆண்டு தோறும் சென்னையில் நடந்து வருகிறது.
நடப்பு ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வருகிற 27-ந்தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவின் நிகழ்ச்சிகள் மாலை 6 மணி வரையிலும் நீடிக்கிறது. பிரைம் பாயின்ட் பவுண்டேசன் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமும், ’பிரிசென்ஸ்’ என்ற இணையதள பத்திரிகையும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்தி வருகின்றன.

விளையாட்டு:

சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன்: இந்தியா - சீனா இன்று மோதல்
ஆஸ்திரேலியாவின் கோஸ்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் தொடரின் கால் இறுதியில் இந்தியா இன்று சீன அணியுடன் மோதுகிறது.
சுதிர்மான் கோப்பையில் இந்திய அணி அதிகபட்சமாக கடந்த 2011-ம் ஆண்டு கால் இறுதி வரை முன்னேறியிருந்தது. அப்போது இந்திய அணி சீனாவிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியிருந்தது.
தற்போது 2-வது முறையாக கால் இறுதியில் விளையாட உள்ளது. இந்த முறையும் இந்திய அணி சீன அணியுடனே பலப்பரீட்சை நடத்துகிறது. டி பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி லீக் சுற்றில் டென்மார்க்கிடம் தோல்வியடைந்த நிலையில் இந்தோனேஷியாவை வீழ்த்தியி ருந்தது.
அதேவேளையில் இந்தோனே ஷியா தனது கடைசி ஆட்டத் தில் டென் மார்க்கிடம் தோல்வி யடைந்ததால் இந்திய அணிக்கு நாக் அவுட் சுற்றில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. சுதிர்மான் கோப்பை வரலாற்றில் இந்தோனே ஷிய அணி கால் இறுதிக்கு முன்னே றாமல் வெளியேறுவது இதுவே முதன்முறை.

No comments:

Post a Comment