Wednesday 10 May 2017

10TH MAY CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

விளையாட்டு:

ஐசிசி சேர்மன் பதவியில் 2018 வரை தொடர்கிறார் சஷாங்க் மனோகர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சேர்மன் பதவியில் 2018 ஜூன் வரை தொடர்வது என சஷாங்க் மனோகர் முடிவு செய்துள்ளார்.
முன்னதாக வரும் ஜூன் மாதத்தோடு தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த மனோகர், இப்போது அந்த முடிவை மாற்றியுள்ளார்.
இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஐசிசியின் தற்போதைய சேர்மனான சஷாங்க் மனோகர் தனது பதவிக்காலம் (2018 ஜூன் வரை) முடியும் வரை அந்தப் பதவியில் இருப்பார் என்பதை உறுதி செய்துகொள்கிறோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 நவம்பரில் ஐசிசியின் சேர்மனாக பதவியேற்ற சஷாங்க் மனோகர், கடந்த மார்ச்சில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். எனினும் வரும் ஜூனில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டம் வரை சேர்மன் பதவியில் நீடிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.


உலகம் :

தென் கொரிய அதிபராக பதவியேற்றார் மூன் ஜே-இன்: வட கொரியா செல்ல விரும்புவதாக அறிவிப்பு
தென் கொரியாவின் அதிபராக புதன்கிழமை பதவியேற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மூன் ஜே-இன்.
தென் கொரியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற மூன் ஜே-இன் (64) அந்த நாட்டின் புதிய அதிபராக புதன்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.
கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, வட கொரியாவுடன சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக அறிவித்த அவர், தேவைப்பட்டால் அந்த நாட்டுக்குச் செல்லப்போவதாகக் கூறினார்.
முன்னாள் மனித உரிமை ஆர்வலரான மூன் ஜே-இன், அதிபர் தேர்தலில் தென் கொரிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் அவருடன் சேர்த்து 13 பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் 41.1 சதவீத வாக்குகள் பெற்று மூன் ஜே-இன் வெற்றியடைந்தார்.
இரு தரப்பு ஒத்துழைப்பு: இந்தியா - ரஷியா பேச்சுவார்த்தை
தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை புதன்கிழமை சந்தித்துப் பேசிய ரஷிய துணைப் பிரதமர் டிமித்ரி ரோகோசின்.
இந்தியா - ரஷியா இடையே அணுசக்தி, வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான பேச்சுவார்த்தை புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளைச் சேர்ந்த தொழில், வர்த்தகம் மற்றும் அணுசக்தித் துறையின் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, பல்வேறு புதிய துறைகளிலும் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு அதிகரிப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இதுதவிர, இந்தியா வந்துள்ள ரஷிய துணைப் பிரதமர் டிமித்ரி ரோகோசின், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து பின்னர் கருத்துத் தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அடுத்த மாதம் ரஷியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதினை ஜூன் 1-ஆம் தேதி சந்தித்துப் பேச இருக்கிறார். அப்போது, இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அவை குறித்து முடிவு செய்வதற்காக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தியா:
பிரதமர் மோடி இன்று இலங்கை பயணம்: விசாக நாள் விழாவில் பங்கேற்கிறார்
இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் சர்வதேச விசாக நாள் விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 11) அந்நாட்டுக்குச் செல்கிறார்.
கௌதம புத்தர் பிறந்தது, ஞானம் பெற்றது, மறைந்தது என மூன்று முக்கியத்துவங்கள் வாய்ந்த நாளாக விசாக நாளை (புத்த பூர்ணிமா) பௌத்த மதத்தினர் கொண்டாடுகின்றனர். நிகழாண்டில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் மே 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சர்வதேச விசாக நாள் நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 குழுக்கள் பங்கேற்கும் பௌத்த மத மாநாடும் அங்கு நடைபெறவுள்ளது.
இந்த விழாவில், தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதற்காக, 2 நாள் பயணமாக அவர் இலங்கைக்கு வியாழக்கிழமை புறப்பட்டுச் செல்கிறார்.

வர்த்தகம் :

பி.எஸ்.என்.எல். திட்டத்துக்கு வரவேற்பு: 15 நாள்களில் 2 லட்சம் வாடிக்கையாளர்கள்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'இத விட ஒசந்தது எதுவுமில்ல' திட்டத்தில் கடந்த 15 நாள்களில் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் சார்பில் 'இதவிட ஒசந்தது எதுவுமில்ல' எனும் பெயரில் எஸ்டிவி 333, 349, 395, 339 ஆகிய 4 டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த திட்டங்கள் தற்போது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெற தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த 15 நாள்களில், எஸ்டிவி 333- திட்டத்தில் 59,832 பேரும், எஸ்டிவி 339-திட்டத்தில் 63,292 பேரும், எஸ்டிவி 349-திட்டத்தில் 49,960 பேரும், எஸ்டிவி 395 திட்டத்தில் 26,512 பேர் என 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment