Monday 1 May 2017

1ST MAY CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

உலகம் :

சென்யாங் நகரில் உலக போர் ஆரம்பமாகலாம்: சீனாவில் அபாய சங்கு
சீனாவில் உள்ள சென்யாங் நகரில் உலக போர் ஆரம்பமாகலாம் என அந்நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் அபாய சங்கு தொடர்ந்து ஊதப்பட்டு வருகிறது.
சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்து அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது. இதுவரை ஐந்து முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன


இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் சீனாவில் உள்ள சென்யாங் நகரில் உலக போர் ஆரம்பமாகலாம் என அந்நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் அபாய சங்கு தொடர்ந்து ஊதப்பட்டு வருகிறது.
அநேகமாக இம்மாதம் 13ம் தேதி உலகப்போர் தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது. வட கொரியாவின் எல்லை அருகில் தான் சென்யாங் நகரம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா-பாகிஸ்தான் இணைந்து உருவாக்கிய புதிய போர் விமானத்தின் சோதனை வெற்றிகரம்
சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து உருவாக்கிய புதிய போர் விமானத்தின் சோதனைப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று சீன அரசு விமான நிறுவனம் அறிவித்தது.
இது தொடர்பாக சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது: சீன அரசு விமான நிறுவனம் (ஏஐசிசி) உள்நாட்டில் உற்பத்தி செய்த ஜேஎப்-17 தண்டர் ரகப் போர் விமானம் ஏற்கெனவே வெற்றிகரமாக பாகிஸ்தானின் விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதனை மேம்படுத்திப் புதிய போர் விமானத்தை பாகிஸ்தானுடன் இணைந்து உருவாக்கியுள்ளோம். ஜேஎப்-17பி என்ற அந்தப் புதிய போர் விமானமானது, சண்டையின்போது குண்டு வீச்சு நிகழ்த்தப் பயன்படுத்தலாம். இந்த விமானத்தைப் பல விதமான சண்டை நிலைகளிலும் பயன்படுத்த முடியும். அமைதிக் காலத்தில் சிறந்த பயிற்சி விமானமாகவும் அதனை ஈடுபடுத்தலாம். இருவர் பயணம் செய்யும் வசதி கொண்டது ஜேஎப்-17பி போர் விமானம். செங்குடு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனைப் பயணத்தில் 26 நிமிடங்களுக்கு விமானம் பறந்தது.
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார் துருக்கி அதிபர்
துருக்கி அதிபர் தயிப் எர்டோகன இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் அவருக்கு திங்கட்கிழமை ராஸஷ்டிரபதி பவனில் வரவேற்பு மரியாதை அளிக்கப்படும்.
பின்னர், ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்குச் செல்கிறார். அதைதொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த வருகையின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள், அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவுக்கான இடம், ஒன்றிணைந்த தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
கோலாப்பூர்: நாட்டின் 2-ஆவது பெரிய தேசியக் கொடிக் கம்பம் திறப்பு
நாட்டிலேயே இரண்டாவது பெரிய தேசியக்கொடிக் கம்பத்தை மகாராஷ்டிரத்தின் கோலாப்பூர் நகரில் திங்கள்கிழமை திறந்து வைத்த அந்த மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல். உடன் காவல்துறை சிறப்பு ஐஜி
நாட்டிலேயே இரண்டாவது பெரிய தேசியக் கொடிக் கம்பம் மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூரில் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இது 300 அடி உயரம் கொண்டதாகும்.
பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைக்கப்பட்டுள்ள 360 அடி உயர தேசியக் கொடிக் கம்பம்தான் நாட்டிலேயே மிகவும் பெரியதாகும். அந்தக் கம்பம் கடந்த மார்ச் 6-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
அதற்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய தேசியக் கொடிக் கம்பம் மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூரில் அண்மையில் நிறுவப்பட்டது. அங்குள்ள காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு எதிரே அமைந்துள்ள போலீஸ் தோட்டத்தில் இந்தக் கொடிக் கம்பத்தை மாநில வருவாய்த் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
இந்தியா:
ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை
அனைவராலும் இஸ்ரோ என அழைக்கப்படும் கர்நாடகாவில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண் :MCF/01/2017
பணி: TECHNICIAN
1. Electronics Mechanic - 05
2. Electrical - 05
3. Refrigeration & Air Conditioning - 02
4. Carpenter - 01
5. Diesel Mechanic - 02
6. Plumber  - 04
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முத்திருக்க வேண்டும்.
பணி: DRAUGHTSMAN – B
1. Draughtsman (Civil) - 01
சம்பளம்: மாதம் ரூ.21,700
பணி: TECHNICAL  ASSISTANT
1. Mechanical  - 01
2. Electrical  - 01
சம்பளம்: மாதம் ரூ.44,900
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://mcf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://mcf.gov.in,  http://117.239.139.170/Technician-2016/english.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தெற்காசிய செயற்கைக்கோள் மே 5-இல் ஏவப்படும்
தெற்காசிய செயற்கைக் கோள் மே 5-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது அண்டை நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அகில இந்திய வானொலியின் மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களுக்கு மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றியதாவது:
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற மத்திய அரசின் கோட்பாடானது, நமது நாட்டை மட்டும் உள்ளடக்கியதல்ல; இது உலகத்தையும் உள்ளடக்கியது. குறிப்பாக, நமது அண்டை நாடுகளை உள்ளடக்கியது.
வரும் 5-ஆம் தேதியன்று, தெற்காசிய செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தவுள்ளது. இந்த செயற்கைக்கோளால், இத்திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து நாடுகளும் பயனடையும். அண்டை நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் ஈடு இணையற்ற இந்தப் பரிசு, தெற்காசியா முழுமைக்கும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகும்.
தெற்காசியா தொடர்பாக இந்தியா கொண்டுள்ள தீர்மானத்துக்கு இந்த செயற்கைக்கோள் ஒரு சிறந்த முன்னுதாரணம். தெற்காசியா முழுவதும் வளர்ச்சியடைய இந்த செயற்கைக்கோள் உதவியாக இருக்கும் என்று மோடி கூறினார்.

தமிழகம்:

ஜிசாட் 9 செயற்கைக்கோள்: இன்று எரிபொருள் நிரப்பும் பணி தொடக்கம்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்படவுள்ள ஜிஎஸ்எல்வி - எஃப்09 ராக்கெட்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ள ஜிசாட் 9 செயற்கைக்கோளை சுமந்து செல்ல உள்ள ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி செவ்வாய்க்கிழமை (மே 2) தொடங்குகிறது.
சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்09 ராக்கெட் மூலம் ஜிசாட் 9 செயற்கைக்கோள் வரும் வெள்ளிக்கிழமை (மே 5) விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த ராக்கெட் சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவுது ஏவுதளத்திலிருந்து செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். தெற்காசிய மண்டல நாடுகளில் பாகிஸ்தானைத் தவிர, மற்ற நாடுகளின் கூட்டுத் திட்டத்தில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 13க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர் லிமிடெட் நிறுவனத்தில் செமி ஸ்கில்டு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 மொத்த காலியிடங்கள்: 23
பணியிடம்: திருச்சிராப்பள்ளி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Semi Skilled (D) (Instrument Mechanic)
2. Semi Skilled (C) (Instrument Mechanic)
3. Semi Skilled (B) (Instrument Mechanic)
4. Semi Skilled (C) (Instrumentation)
5. Semi Skilled (B) (Instrumentation)
6. Semi Skilled (A) (Instrumentation)
வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு 30க்குள்ளும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
“GENERAL MANAGER (HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED KAGITHAPURAM – 639 136, KARUR DISTRICT, TAMIL NADU”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.05.2017
மேலும், தகுதி, விண்ணப்பிக்கும் முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/semiskilled_instru&mech.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விளையாட்டு:

கேல் ரத்னா விருது: சர்தார் சிங் பெயர் பரிந்துரை
விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஹாக்கி வீரர் சர்தார் சிங்கின் பெயரை பரிந்துரைத்துள்ளது ஹாக்கி இந்தியா.
இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர்களான எஸ்.வி.சுநீல், தரம்வீர் சிங், ஹாக்கி வீராங்கனை தீபிகா ஆகியோரின் பெயர் அர்ஜுனா விருதுக்கும், ஆர்.பி.சிங், சாமுராய் டெட்டே ஆகியோரின் பெயர்கள் தயான் சந்த் விருதுக்கும், பயிற்சியாளர்கள் சந்தீப் சங்வான், ரமேஷ் பதானியா ஆகியோரின் பெயர்கள் துரோணாச்சார்ய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மான்பிரீத் கெளர் ஆகியோரின் பெயர்களை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது பிசிசிஐ.
பார்சிலோனா ஓபன்: 10-ஆவது பட்டம் வென்றார் நடால்
பார்சிலோனா ஓபனில் 10-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் ஸ்பெயினின் ரஃபேல் நடால்.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் நடால் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை தோற்கடித்தார்.
வெற்றி குறித்துப் பேசிய நடால், "கடந்த வாரம் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியிலும், இப்போது பார்சிலோனா ஓபனிலும் சாம்பியனாகியிருக்கிறேன். எனக்கு இந்த இரண்டு போட்டிகளுமே சிறப்புமிக்கவையாகும். எனது கிளப் மக்கள் முன்னிலையில் பார்சிலோனா ஓபனில் 10-ஆவது பட்டம் வென்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார்.
பார்சிலோனா ஓபனில் 2005 முதல் 2009 வரையிலும், அதன்பிறகு 2011 முதல் 2013 வரையிலும் சாம்பியன் பட்டம் வென்ற நடால், இப்போது 10-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.
கடந்த வாரம் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 10-ஆவது பட்டமும், இப்போது பார்சிலோனா ஓபனில் 10-ஆவது பட்டமும் வென்றிருக்கும் நடால், அடுத்ததாக பிரெஞ்சு ஓபனில் 10-ஆவது பட்டத்தை கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்.

வர்த்தகம் :

சிஐஐ அமைப்புக்கு புதிய நிர்வாகிகள்
ஷோபனா காமினேனி, உதய் கோட்டக், ராகேஷ் பார்தி மித்தல்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்புக்கு (சிஐஐ) புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிஐஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தலைவராக, அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் என்டர்பிரைஸஸ் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவரான ஷோபனா காமினேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளநிலை பட்டம் பெற்றவர். பட்டப் படிப்புக்குப் பிறகு, நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவமனை நிர்வாகத்தில் பட்டயப் படிப்பு முடித்தவர்.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிர்வாகத் துணைத் தலைவரான உதய் கோட்டக், சிஐஐ கூட்டமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மும்பையில் வணிகவியலில் இளநிலை பட்டப் படிப்பு முடித்த பின்னர், மும்பை ஜம்னாலால் பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் கல்வி நிலையத்தில் பயின்று, எம்பிஏ முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் நியமனத் தலைவராக பார்தி எண்டர்பிரைஸஸின் துணைத் தலைவரான ராகேஷ் பார்தி மித்தல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று சிஐஐ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment