Tuesday 23 May 2017

24th MAY CURRENT AFFAIRS IN TAMIL FOR TNPSC, SSC, IPPB & INSURANCE

இந்தியா:

இந்திய தபால் துறையில் 20969 வேலை
இந்தியாவின் பெரிய அரசு துறை இந்திய தபால் துறை. இந்த துறை முதன் முதலாக 1854 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது புதுதில்லி சன்சாட் மார்க் பகுதியில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.


இது அரசாங்கத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும்.
இவை இந்தியா முழுவதும் தபால் சேவை, பார்சல், ஈஎம்எஸ், டெலிவரி, சரக்கு பகிர்தல், மூன்றாம் தரப்பு தளவாடங்கள் மற்றும் வைப்புத்தொகை கணக்கு போன்ற சேவைகளை வழங்கு வருகின்றன. தற்போது இந்தியா முழுவதும் 22 தபால் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த துறையில் 4 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது இந்த துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 2017 ஆம் ஆண்டிற்கான 20,969 கிராமின் டக் சேவாக் பணியிடங்களுக்கான அறவிப்புகள் வெளியிடப்பட்டு, அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கடைசி தேதி மற்றும் முழுமையாக நிரப்பப்படாத ஆன்லைன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.
நிறுவனம்: இந்தியா தபால் துறை
மொத்த காலியிடங்கள்: 13482
பணி இடம்: இந்தியா முழுவதும்
தபால் வட்டம் வாரியாக காலியிடங்கள் விவரம்:
- மகாராஷ்டிரா 1789
- கர்நாடகா 1048
- அசாம் 467
- தமிழ்நாடு 128
- தில்லி 16
- குஜராத் 1912
- பஞ்சாப் 620
- உத்தரகண்ட் 579
- மேற்கு வங்கம் 4982
- வட கிழக்கு 748
- கேரளம் 1193
கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம், வாரியத்திலிருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி, கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், தேவையேற்பட்டால்ல நேர்காணல் நடத்தப்படலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தும் முறை: ஆஃப்லைன் செலுத்த வேண்டும் - தலைமை தபால் அலுவலகங்களில் செலுத்தலாம்.
விண்ணப்பத்தின் முறை: www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி விவரம்:
- கேரளா தபால் வட்டம் -  10.06.2017
- வட கிழக்கு - 05.06.2017
- மேற்கு வங்காளம் -  10.06.2017
- உத்தரகாண்ட் - 18.05.2017
- குஜராத் மற்றும் பஞ்சாப் - 11.05.2017
- தமிழ்நாடு - 05.06.2017
- கர்நாடகா - 31.05.2017
- தில்லி -  31.05.2017
- மகாராஷ்டிரா - 27.05.2017
- அசாம் - 24.05.2017
- சத்தீஸ்கர் - 20.05.2017
- ஹரியானா -  24.05.2017
மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மணிக்கு 200 கி.மீ. வரை செல்லக் கூடிய அதிவேக தேஜாஸ் ரயில்!
மும்பை: நாட்டிலேயே நவீன வசதிகளுடன் கூடிய மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை அதிவேகத்துடன் செல்லக் கூடிய தேஜாஸ் ரயில், தனது முதல் பயணத்தை மும்பையில் இருந்து கோவாவின் கர்மாலி வரை தொடங்கியது.
15 கோச் பெட்டிகள் கொண்ட ரயிலில் இரண்டு வகுப்புகள் நாற்காலி கார் மற்றும் நிர்வாக நாற்காலி கார் ஆகியவை அடங்கும். ரயில் முழுவதும் விமானத்தில் உள்ளது போல் இருக்கை, தானியங்கி கதவுகள், வைஃபை இணைய வசதி, சிசிடிவி கேமரா, எல்.இ.டி. திரையுடன் கூடிய தொலைக்காட்சி, தேயிலை-காபி வழங்கும் இயந்திரங்கள், உயர்தரமான கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.
சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவை எட்டரை மணி நேரத்தில் கடக்கும் வகையில் 130 கிலோமீட்டர் வேகத்தில் தேஜாஸ் ரயில் இயக்கப்படும்.
தேஜாஸ் ரயிலின் வேகம் மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகம் :

ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் மரணம்
உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த ஆங்கிலத் திரைப்பட நடிகர் ரோஜர் மூர் (89) செவ்வாய்க்கிழமை காலமானார்.
பிரிட்டன் நாட்டின் ரகசிய உளவுப் பிரிவு அதிகாரியாக "ஜேம்ஸ் பாண்ட்' என்ற கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இந்தத் திரைப்படங்களில் 1970-களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து உலகப் புகழ்பெற்றவர் நடிகர் ரோஜர் மூர். தனது வசீகரத் தோற்றத்தாலும், திறமையான நடிப்பாலும் ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்தவர் ரோஜர்.
ஏவுகணை சோதனை: ஐ.நா. அறிக்கையை நிராகரித்தது வட கொரியா
வட கொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய 'புக்குக்சோங்-2' ரக ஏவுகணை சோதனை.
ஏவுகணை சோதனைகளை நிறுத்தாவிட்டால் வட கொரியா மீது கடுமையான பொருளதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று ஐ.நா. பாதுகாப்புக் குழு வெளியிட்ட அறிக்கையை அந்த நாடு முற்றிலுமாக நிராகரிப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
கடந்த ஒரு வார இடைவெளியில் வட கொரியா இரு ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தியது. இவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, அதிக அளவில் அவ்வகை ஏவுகணைகளை உருவாக்கி ராணுவத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏவுகணை சோதனைகளுக்கு ஐ.நா. பாதுகாப்புக் குழு திங்கள்கிழமை கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும், வட கொரியா மீது புதிய பொருளாதாரத் தடைகளைப் பரிந்துரைக்குமாறு ஐ.நா. பொருளாதாரத் தடை ஆலோசனைக் குழுவைக் கேட்டுக் கொண்டது.
கொரிய தீபகற்ப பகுதியில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் வட கொரியா மீது, பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று ஐ.நா. பாதுகாப்புக் குழு தெரிவித்தது.
இது தொடர்பான அறிக்கையை பாதுகாப்புக் குழு வெளியிட்டது.
அந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாக வட கொரியா தெரிவித்தது.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் ரக போர் விமானம் மாயம்
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் ரக போர் விமானத்தைக் காணவில்லை. வானில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து மாயமானது.
அசாம் மாநிலம் தேஸ்பூரிலிருந்து வடக்குப் பகுதியில் பறந்தபோது சுகோய் - 30 ரக போர் விமானம் ரேடார் தொடர்பில் இருந்து காணாமல் போயுள்ளது.
இந்திய விமானப் படை விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, தேஸ்பூருக்கு வடக்கே 60கி.மீ. தொலைவில் சுகோய் - 30 ரக போர் விமானம் ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது. இந்த விமானத்தில் 2 விமானிகள் பயணம் செய்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் :

பேமன்ட் வங்கி தொடங்கியது பேடிஎம்: 50 கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்க இலக்கு
மின்னணு பணப்பரிமாற்ற சேவையில் ஈடுபட்டு வந்த பேடிஎம் நிறுவனம் பேமன்ட் வங்கி சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்கவுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
இதுகுறித்து பேடிஎம் பேமன்ட் வங்கியின் தலைவர் விஜய் சேகர் சர்மா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வாடிக்கையாளர்களுக்குப் புதிய வழிமுறையில் வங்கிச் சேவையாற்ற ரிசர்வ் வங்கி, சிறப்பானதொரு சந்தர்ப்பத்தை எங்களுக்குத் தந்துள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகள் பாதுகாப்பான அரசு கடன்பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு அது உதவியாக இருக்கும். ஒருபோதும் டெபாசிட்டுகள் ஆபத்தான சொத்துக்களாக மாற்றப்படாது.
பேடிஎம் நிறுவனத்தின் மின்னணு பணப்பை (டிஜிட்டல் வாலட்) சேவையில் தற்போது 22 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரது கணக்குகளும் பேமன்ட் வங்கிக்கு மாற்றப்படும். கணக்கு தொடங்குவதற்கு 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி)' படிவத்தை அவர்கள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
இந்திய வாடிக்கையாளர்களின் மிக நம்பகமான மற்றும் நட்புறவு கொண்ட வங்கியாகத் திகழ வேண்டும் என்பது எங்களின் இலக்கு. இதன் மூலம், 2020-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி வாடிக்கையளர்களை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் பேடிஎம் வங்கி கிளைகளின் விரிவாக்கத்துக்காக ரூ.400 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.
ரூ.25,000 வரை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.250 கேஷ் பேக் சலுகை அளிக்கப்படும்.
இவை தவிர, ஜீரோ பேலன்ஸ் வசதி, கட்டணமில்லா ஆன்லைன் பணப்பரிமாற்றங்கள் (ஐ.எம்.பி.எஸ்., என்.இ.எஃப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். உள்ளிட்டவை), சேமிப்பு கணக்குக்கு 4% வட்டி, ரூபே டெபிட் கார்டு, வணிகர்களுக்கு நடப்புக் கணக்கு வசதி ஆகியவையும் உண்டு.
முதல் ஆண்டில் 31 கிளைகள் மற்றும் 3,000 வாடிக்கையாளர் சேவை முனையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment