Sunday 18 March 2018

மார்ச் 16 நடப்பு நிகழ்வுகள்

தமிழகம் :

வட தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • அடுத்து வரும் 24 மணிநேரத்தில் வட தமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிதி பகிர்வில் தமிழகத்துக்கு 4.969 சதவீதத்தில் இருந்து 4.023 சதவீதமாக குறைப்பு
  • மத்திய வரிகளில் தமிழகத்துக்கான பங்கு 2017-18-ல் ரூ.27,099 கோடியே 72 லட்சமாகும். 2018-19-ல் ரூ.31,707 கோடியே 9 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை உட்பட மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் உதவி மானியங்கள் 2018-19-ல் ரூ.20,626 கோடியே 87 லட்சமாக இருக்கும் என கணக்கிடப் பட்டுள்ளது.
போக்குவரத்து கழகங்களுக்கு 3,000 புதிய பேருந்துகள்
  • மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய கடன் தொகையில் ரூ.3,001.47 கோடி மூலதனப் பங்குத் தொகையாக இந்த ஆண்டில் மாற்றம் செய்யப்படும். இந்த நிதியாண்டில் மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்கு மொத்தமாக தேவைப்படும் ரூ.600 கோடியை பங்கு மூலதனமாக அரசு வழங்கும்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக 345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்
  • மருத்துவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் நோக்கத்துடன் வரும் ஆண்டுகளில் திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பில் (எம்பிபிஎஸ்) புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும்
ரூ.50 கோடியில் ஜெ. நினைவு மண்டபம்
  • சென்னை போயஸ் தோட்டத் தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவிடமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில், மெரினா கடற்கரையில் ரூ.50 கோடியே 80 லட்சத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்.

இந்தியா :

தெலங்கானா மாநிலத்துக்கு ரூ.1.42 லட்சம் கோடி கடன்:
  • தெலங்கானா உதயமானபோது, மாநிலத்துக்கு ரூ.72 ஆயிரம் கோடி கடன் இருந்தது. அதன் பின்னர், மாநில வளர்ச்சிக்காக மேலும் கடன் பெற வேண்டி இருந்தது. தற்போது நமது மாநிலத்துக்கு ரூ. 1.42 லட்சம் கோடி கடன் உள்ளது. ஆனால், மாநிலத்துக்கு பல லட்சம் கோடி கடன் இருப்பதாக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
ஐன்ஸ்டீன் சொன்னதை விட வேதத்தில் சிறந்த கோட்பாடு உள்ளது: ஹாக்கிங் கூறியதாக மத்திய அமைச்சர் :
  • மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்திய அறிவியல் மாநாட்டில் பேசும்போது, ‘இந்திய வேதத்தில் உள்ள கோட்பாடு ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக்கொள்கையைக் காட்டிலும் சிறந்தது என்று மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்’ என்று கூறினார்.
மும்பையில் புதிய முறை அறிமுகம்
  • மும்பையில் பரபரப்பான சாலைகளில் எளிதாக சாலையை கடக்கும் வகையில், மக்களே சிக்னலை மாற்றும் பட்டனை மாநகராட்சி கொண்டுவந்துள்ளது.சாலையை கடக்கும் மக்களில் யாராவது ஒருவர் அந்த பட்டனை அழுத்தினால், சிக்னலில் சிவப்பு விளக்கு எரியத்தொடங்கும். அதன்பின் மக்கள் அனைவரும் எளிதாக சாலையை கடக்கலாம்.
ஞாயிறு முதல் வேலை நிறுத்தம்: ஓலா, உபெர் கால் டாக்ஸி டிரைவர்கள் அறிவிப்பு
  • ஓலா மற்றும் உபெர் கால் டாக்ஸி நிறுவனங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக்கூறி அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை

உலகம் :

பனாமா பேப்பர்ஸ் ஊழலில் சிக்கிய சர்வதேச சட்ட நிறுவனம் மூடல்
  • நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் நிறுவனத்தின் நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து எங்களால் மீள முடியாததால் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் எங்கள் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சிரியாவில் மோசமடையும் நிலைமை
  • கடந்த 30 நாட்களாக மட்டும் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கிறார்கள். சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

வணிகம் :

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிரொலி: பங்குச்சந்தைகள் கடும் சரிவு
  • சர்வதேச காரணங்கள் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன.அதானி எண்டர்பிரைசஸ், என்எல்சி, ரிலையன்ஸ் கேபிடல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் அதிக அளவில் சரிவை சந்தித்தன.
‘ஆடி’ கார் விலை ஏப்ரல் 1 முதல் ரூ. 9 லட்சம் உயர்வு
  • ‘‘மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால் எங்கள் கார்களின் விலையை 4 சதவீதம் உயர்த்தியுள்ளோம். வரியுடன் சேர்ந்து சமூக நலத்திட்டங்கள் மற்றும் கல்விக்கான கூடுதல் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் விலை உயர்வு தவிர்க்க முடியாத சூழல் உள்ளது. ஆடி கார்களின் விலை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை விலையை உயர்த்தியுள்ளோம். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது’’  ஆடி’ நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் ரஹில் அன்சாரி  எனக்கூறினார்.

வணிக நூலகம்:

  • ஒன்றுபடுதலையும் அதற்கு ஆதாரமான உடன்பாடுகளையும் REID HOFFMAN என்ற நூல் ஆசிரியர் தன்னுடைய ALLIANCE என்ற புத்தகத்தில் எழுதியுள்ளது நம்மை சிந்திக்க வைக்கிறது.

விளையாட்டு :

நேபாள கிரிக்கெட்டின் மிகப்பெரிய தினம்: ஒருநாள்போட்டி சர்வதேச அணி என்ற தகுதி பெற்றது
  • ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தியதையடுத்து நேபாளத்துக்கு ஒருநாள் சர்வதேச அணி அந்தஸ்து கிடைத்தது.
ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டி:
  • இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார். அதே நேரத்தில் முன்னணி வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.

PDF Download

No comments:

Post a Comment