Monday 19 March 2018

மார்ச் 17 & 18 – நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி மரணம்
  • தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான எஸ்.ஆர்.சாமுவேல் மாரடைப்பால் டெல்லியில் மரணமடைந்தார்.
  • 1999-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சாமுவேல் (43) காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய பதவிகளில் இருந்தவர்.

சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் ‘பங்க்
  • கோவையில் சிறைவாசிகள் மூலம் பெட்ரோல் ‘பங்க்’கள் நடத்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக சிறைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தம்
  • கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது மாலையுடன் நிறுத்தப்பட்டது. மாற்று ஏற்பாடாக வடலூரில் இருந்து தண்ணீர் அனுப்பப் படுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
  • தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியது.
  • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 26.

இந்தியா

சந்திரபாபு நாயுடு தலைமையில் உருவாகிறது 3வது அணி
  • ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3வது அணி உருவாகிறது.
  • இதன் முதல் கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி அமராவதியில் நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது.
திருப்பதி-திருமலையில்  முதல் நவீன பேட்டரி பஸ்
  • காற்றில் மாசு கலப்பதை கட்டுப்படுத்த திருப்பதி-திருமலை இடையே அதிநவீன பேட்டரி பஸ் போக்குவரத்து தொடங்கியது. சுமார் ரூ.
  • 3 கோடி மதிப்புள்ள இந்த பஸ்ஸில் பயணம் செய்த பக்தர்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
5 பைசாவுக்கு 1 லிட்டர் குடிநீர்
  • கடல் நீரை சுத்திகரித்து, குடிநீராக மாற்றி லிட்டர் 5 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் எனவும், தூத்துக்குடியில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை செயலி விரைவில் அறிமுகம்
  • புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் புதிய செல்போன் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் 
  • உபியின் 36 ஐஏஎஸ், 43 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  • தம் சொந்த மாவட்டமான கோரக்பூர் ஆட்சியராக தமிழரான ஐஏஎஸ் அதிகாரியை நியமித்துள்ளார் உபி முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்.

உலகம்

ரஷ்யாவில் அதிபர் தேர்தல்
  • ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
  • இதில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட 8 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.
  • ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது.
சீனப் பிரதமராக லீ கெக்கியாங் 2-வது முறையாகத் தேர்வு
  • சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 2-வது தலைவரான லீ கெக்கியாங் 2-வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
  • இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்.

வணிகம்

டாடா சன்ஸில் இருந்து முகுந்த் ராஜன் ராஜினாமா
  • டாடா சன்ஸின் உயர் அதிகாரிகளில் ஒருவரான முகுந்த் ராஜன் நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு புதிய ரக கார் அறிமுகம்
  • எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ரக சிறிய மாடல் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா (ஹெச்எம்ஐஎல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஒய் கே கூ தெரிவித்துள்ளார்.
20 வருடங்களுக்கு மேலான வர்த்தக வாகனங்களின் பதிவு நீக்கம்
  • 20 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள வர்த்தக வாகனங்களின் ஆயுளை முடிவுக்குக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
  • இதனால் 2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட டாக்ஸிகள்,லாரிகள் மற்றும் பேருந்துகள் போன்ற வணிக வாகனங்களை 2020-ம் ஆண்டு சாலையில் இயக்க அனுமதி கிடையாது.

விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டி
  • ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார்.
  • அதே நேரத்தில் முன்னணி வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
  • ஆடவர் ஒற்றையர் கால் இறுதியில் இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் தோல்வி கண்டார்.
சென்னையில் அகில இந்திய வாலிபால் போட்டி
  • சென்னையில் அகில இந்திய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) சர்க்கிள்களுக்கு இடையிலான வாலிபால் போட்டி மார்ச் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • இந்தப் போட்டி கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ. உள்ளரங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் 
  • இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்(வயது37) தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முறைப்படி அறிவித்தார்.
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் 
  • முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதவுள்ளன.
  • இந்தியா, இலங்கை, வங்கதேசம் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையின் கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில் 3 லீக் ஆட்டங்களில் வெற்றி கண்ட இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் இலங்கையும், வங்கதேசமும் தலா ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தன.

No comments:

Post a Comment