Thursday 15 March 2018

மார்ச் 14 – நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

சாலை பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை தொடர்பாக ஆஸ்திரேலிய அரசு நிறுவனத்துடன் தமிழக அரசு புதிய ஒப்பந்தம்:முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது
  • ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசின் சாலை மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்பான ‘விக்ரோட்ஸ்’ அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்  செய்துள்ளது.
  • அந்த அமைப்புடன் இணைந்து நெடுஞ்சாலை திட்டமிடல், நிர்வகித்தல், சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல், சிறந்த போக்குவரத்து மேலாண்மை, சாலை பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து துறைகளின் திறன் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • மேலும், நவீன தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிரூபணமான சிறந்த தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படும்.

தமிழக பட்ஜெட் தாக்கல்: காவிரி விவகாரத்தில் சிறப்பு தீர்மானம்
  • பட்ஜெட் கூட்டத் தொடருக்காக தமிழக சட்டப்பேரவை 14.03.2018 அன்று கூடுகிறது.
  • 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
  • காவிரி மேலாண்மை வாரியம் தொடர் பாக பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றவும் திட்ட மிடப்பட்டுள்ளது.

இந்தியா

நெபியு ரியோ அரசு வெற்றி
  • நாகாலாந்து சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நெபியு ரியோ தலைமையிலான புதிய அரசு வெற்றி பெற்றது.
2025-க்குள் காச நோய் ஒழிக்கப்படும்
  • கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் காச (டிபி) நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
  • 2025-க்குள் காச நோய் ஒழிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு
  • பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் 14.03.2018 அன்று காலமானார்.
  • அவருக்கு வயது 76.
  • லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தரமான நிர்வாக நகரங்கள் பட்டியல்
  • தரமான நிர்வாகம் அளிக்கும் 23 நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரம் 19-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
  • அதேமயம், மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரம், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா, கேரளாவின் திருவனந்தபுரம், ஒடிசாவின் புவனேஷ்வர் நகரம் ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன.

உலகம்

நேபாள அதிபராக வித்யா தேவி மீண்டும் தேர்வு
  • நேபாள நாட்டின் முதல் பெண் அதிபராக வித்யா தேவி பண்டாரி 2015-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.
  • நேபாளத்தின் அதிபராக 2-வது முறையாக வித்யா தேவி பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அரசின் புதிய செயலராக மைக் போம்பியோ நியமனம்
  • அமெரிக்க அரசின் செயலராக இருந்த ரெக்ஸ் டில்லர்சன்னை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக நீக்கினார். இதையடுத்து, அந்தப் பதவிக்கு சிஐஏ இயக்குநராக பணிபுரிந்து வந்த மைக் போம்பியாவை அவர் நியமித்துள்ளார்.
மேகங்களை கண்காணிக்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் நாசா
  • நாசா உலகளாவிய மேகம் கண்காணிப்பு சவாலை அறிவித்துள்ளது.
  • இந்த பணியை  மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை, அனைத்து வயது குடிமகன் விஞ்ஞானிகளும் செய்யலாம்.
  • GLOBE Observer என்ற ஆப் பை  பயன்படுத்தி  மேகங்களை கண்காணிக்கலாம்.

வணிகம்

வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது
  • வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  • வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இங்கு வழக்குகளில் ஆஜராவதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

விளையாட்டு

பிசிசிஐ, மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
  • நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் நிலையில், ஐபிஎல் போட்டிகளுக்காக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை எப்படி வீணாக்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
  • இதுதொடர்பாக ஐபிஎல் போட்டி நடக்கும் 9 மாநிலங்களுக்கும், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ), மத்திய அரசும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

PDF Download

No comments:

Post a Comment