Tuesday 10 April 2018

ஏப்ரல் 7 மற்றும் 8 நடப்பு நிகழ்வுகள்

மாநிலசெய்திகள்

தமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகம்:தேசிய தரவரிசை பட்டியலில் சிறப்பிடம்
  • 2018-ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை கட்டமைப்பின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்தப் பிரிவில் 10-வது இடத்தையும், பல்கலைக்கழகங்களின் பிரிவில் 4-வது இடத்தையும், பொறியியல் பிரிவில் 8-வது இடத்தையும் பெற்றது. தமிழக முதல்வர் கே.பழனிசாமியிடம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மெரினாவில் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவுடன் ஜெயலலிதா  நினைவிட வளாகம்: தமிழக சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்து உத்தரவு
  • மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடப் பகுதியில் 36,806 சதுர மீட்டர் பரப்பளவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைய உள்ளது. அதில் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன.


கேரளம்

விவசாயிகளுக்காக பிரத்யேக சமுதாய வானொலி
  • நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்காக பிரத்யேக சமுதாய வானொலி சேவையை கேரள அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வானொலி சேவை மூலம் விவசாயிகளுக்கு தேவையான அறிவிப்புகள், வானிலை முன்னறிவிப்புகள், விதைகள், உரங்கள், நோய்கள், புதிய கண்டுபிடிப்புகள், பாரம்பரிய வேளாண் முறைகள் ஆகியவை குறித்த அறிவிப்புகளும், நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகும்.முதன்முறையாக ஒரு மாநில அரசு விவசாயிகளுக்காக பிரத்யேக வானொலி தொடங்குவது இதுதான் நாட்டிலேயே முதல் முறையாகும்.

பிஹார் 

பெண்களுக்கு போட்டித் தேர்வுக் கட்டணக் குறைப்பு
  • மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணத்தை பிஹார் அரசு   குறைத்துள்ளது. பிஹார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பிகார் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் அனைத்துத் தேர்வுகளுக்குமான கட்டணத்தைக் குறைப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.

தேசியசெய்திகள்

நேபாளப் பிரதமர் இந்தியாவில் பயணம்: இந்தியா-நேபாளக் கூட்டு அறிக்கை
  • நேபாளப் பிரதமர் திரு. கே.பி. சர்மா ஒளி, இந்தியாவில் அரசுமுறைப் பயணமாகப் 2018, ஏப்ரல் 6 –ம் தேதி முதல் 8 –ம் தேதி வரை பயணம் மேற்கொண்டார்.2018, ஏப்ரல் 7 –ம் தேதி .இரண்டு பிரதமர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு இடையேயான பன்முகத்தன்மை கொண்ட உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தனர். இரண்டு அரசுகள், தனியார் துறையினர் மக்கள் நெறிகளில் இரு நாடுகளுக்குமிடையே வளர்ந்துவரும் ஒத்துழைப்பை அவர்கள் வரவேற்றனர். சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் நன்மைகள் அடிப்படையில் இருதரப்பு உறவுகளைப் புதிய உயர்ந்தநிலைக்கு கொண்டு செல்ல சேர்ந்து உழைப்பது என்று இரு பிரதமர்களும் தீர்மானித்தனர்.
பரஸ்பரம் அக்கறையுள்ள மூன்று தனித்தனியான முக்கியப் விஷயங்கள் குறித்து கூட்டறிக்கைகள வெளியிடப்பட்டன.
  • இந்தியா-நேபாள்: வேளாண்மை பற்றிய புதிய ஒத்துழைப்பு
  • ரயில் இணைப்புகளை விரிவாக்குதல்: இந்தியாவில் உள்ள ராக்சாலையை நேபாளத்தில் உள்ள காட்மண்டுடன் இணைத்தல்
  • உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் மூலம் இந்தியா-நேபாளத்திற்கு இடையே புதிய இணைப்புகளை உருவாக்குதல்.

முக்கியமான குறிப்புக்கள்

நேபாளம்
பிரதமர் : கே.பி. சர்மா ஒளி
ஜனாதிபதி : வித்யா தேவி பண்டாரி
தலைநகரம்: காத்மாண்டு
நாணயம் : நேபாள ரூபாய்
நேபாளம் பிரதமருக்கு கவுரவ டாக்டர் பட்டம்உத்தராகண்ட் பல்கலைக்கழம்
  • இந்தியா வந்துள்ள நேபாளம் பிரதமர் சர்மா ஒலிக்கு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜி.பி. பன்ட் பல்கலைக்கழம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

சர்வதேசசெய்திகள்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
  • பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவிலுள்ள மவுண்ட் ஹகன் நகரத்தில் இன்று (சனிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6. 3 ஆக பதிவாகியது, இந்த நிலநடுக்கம் பூமிக் கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.
மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு
  • தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, பிரிட்டனிடம் இருந்து 1957 ஆகஸ்ட் 31-ம் தேதி விடுதலை பெற்றது. 1959-ல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. தற்போது பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான பாரிசன் நேஷனல் கூட்டணி ஆட்சியில் உள்ளது.
  • இந்நிலையில் மலேசிய நாடாளுமன்றம் சனிக்கிழமை அதிகாரபூர்வமாக கலைக்கப்படும் என்று பிரதமர் நஜீப் ரசாக் கோலாலம்பூரில் நேற்று அறிவித்தார். அந்த நாட்டு சட்டத்தின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி அடுத்த சில நாட்களில் பொதுத்தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

வணிகசெய்திகள்

சிறிய நகரங்களில் தொழில் வளர்ச்சி: தென் மண்டல சிஐஐ
  • தென் மாநிலங்களின் சிறிய நகரங்களில் தொழில் முன்னேற்றத்திற்காக மாநில அரசுகளுடன் சிஐஐ இணைந்து செயல்படும். மேலும் தென்னிந்தியாவில் வலுவான தொழில் சூழலை உருவாக்குவதற்கான குறிக்கோள் மற்றும் அக்கறையுள்ள மாநில அரசுகளுடனும் சிஐஐ நெருக்கமாக பணியாற்றும் என்று சிஐஐ அமைப்பின் தென் மண்டலத் தலைவர் ஆர். தினேஷ் கூறினார்.இதன்படி தென்னிந்திய அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிகள், பெண்களுக்கான சம வாய்ப்பு, நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவுள்ளோம். தென்னிந்திய மாநிலங்களில் வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்துறை திட்டங்களில் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவோம்.

விளையாட்டுசெய்திகள்

காமன்வெல்த் போட்டிகள்வலுதூக்குதலில் தங்கம் வென்றார் சதீஷ் சிவலிங்கம்
  • கோல்ட் கோஸ்ட்டில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் 3வது தங்கப்பதக்கத்தை வென்றார் வலுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம்.77 கிலோ உடல் எடைப்பிரிவில் மொத்தம் 317 கிலோ எடைதூக்கி தங்கம் வென்று சாதனை படைத்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம்.
காமன்வெல்த் பளு தூக்குதலில் இந்தியாவின் ராகுல் ரகாலா தங்க பதக்கம் வென்றார்
  • ஆடவருக்கான 85 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் வெங்கட் ராகுல் ரகாலா தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  இதனால் இந்தியாவின் தங்க பதக்க எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
காமன்வெல்த் பளு தூக்குதலில் இந்தியாவின் பூனம் யாதவ் தங்க பதக்கம் வென்றார்
  • காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டியின் மகளிர் பிரிவில் 69 கிலே எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பேக்கர் தங்க பதக்கம்வென்றார்
  • துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பேக்கர் தங்க பதக்கத்தினை தட்டி சென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பேக்கர் தங்க பதக்கம்வென்றார்
  • மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் மாணிக்கா பத்ரா, மாதுரிகா பட்கர் மற்றும் மௌமா தாஸ் ஆகிய வீராங்கனைகள் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது.

No comments:

Post a Comment