Sunday 1 April 2018

மார்ச் 30 – நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

சென்னை-மதுரை ரயில் 
  • சென்னை-மதுரை இடையே ஒரு வழித்தடத்திலும், மதுரை-சென்னை இடையே மற்றொரு வழித்தடத்திலும் என இரட்டை ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
  • இதன் மூலம் சென்னை-மதுரை இடையே பயண நேரம் மேலும் குறையும்.

காவிரி விவகாரம்
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கத் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா

சிபிஎஸ்இ மறு தேர்வு
  • சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நாடு முழுவதும் பிளஸ் 2 பொருளாதாரப் பாடத்துக்கு ஏப்ரல் 25-ம்தேதி மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகருக்கு தனி தேர்தல் 
  • கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெங்களூரு மாநகருக்கென்று தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக, மஜத ஈடுபட்டுள்ளன.

உலகம்

டைம் 100’ பட்டியலில் மோடி
  • அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்ட புகழ்பெற்ற 100 பேர் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார்.
68 வயதில் 20 வயது இளைஞர்
  • சீனாவின் ஷாங்காய் நகரில் வசிக்கும் ஹு ஹாய், 20 வயது இளைஞர்போல் இருக்கிறார். ஆனால் இவரது வயது 68.

வணிகம்

மத்திய அரசு அறிவிப்பு
  • ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இவர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (பிஎப்) தொகை 12 சதவீதத்தை அரசே செலுத்தும் என்றும் அறிவித்துள்ளது.
 மத்திய அமைச்சர் தகவல்
  • சைபர் குற்றச் செயல்களுக்கு 1,020 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கூறியுள்ளார்.
அமேசானுக்கு கூடுதல் வரி விதிக்க திட்டம்
  • அமேசான் நிறுவனத்துக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஓலா, உபெர் இணைய திட்டம்
  • டாக்ஸி சேவையில் செயல்பட்டு வரும் ஓலா மற்றும் உபெர் நிறுவனங்கள் இணைய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • சர்வதேச அளவில் முக்கியமான முதலீடு நிறுவனம் ஜப்பானை சேர்ந்த சாப்ட்பேங்க்.
  • இந்த நிறுவனம் டாக்ஸி சேவையில் செயல்பட்டு வரும் அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க திட்டமிட்டிருக்கிறது.

விளையாட்டு

துணை ஆட்சியரானார் கிடாம்பி ஸ்ரீகாந்த்
  • பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு அமரா வதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை ஆட்சியருக்கான பணி நியமன உத்தரவை வழங்கி சிறப்பித்தார்.
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்
  • முத்தரடிப்பு டி20 மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

No comments:

Post a Comment