Monday 2 April 2018

மார்ச் 31 & ஏப்ரல் 1 - நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

சிறப்பு ரயில் இயக்கம்
  • செங்கோட்டை, புனலூர் வழித்தடத்தில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தாம்பரம்- கொல்லம் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு
  • வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியுள்ளது.
சிறப்பு மலை ரயில் சேவை 
  • கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முத்தரசன் மீண்டும் தேர்வு
  • திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளராக ஆர்.முத்தரசன் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியா

சாதனை படைத்த சித்தராமையா
  • கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த ஒரே முதல்வர் என்கிற சரித்திரத்தை சித்தராமையா படைத்திருக்கிறார்.
ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் தகவல்தொடர்பை இழந்தது
  • ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து , ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ தகவல் தொடர்பு செயற்கைகோள் தகவல்தொடர்பை இழந்தது என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைப்பு
  • உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின் திரிவேணிபுரம் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது.
இந்திய ரயில்வே அறிவிப்பு
  • ரயில்வே உயர் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்திவந்த சலூன் கோச் எனப்படும் ஆடம்பரமான ரயில் பெட்டிகளில் இனி பொதுமக்களும் பயணம் செல்லலாம்.

உலகம்

"அடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்கும்"
  • ஜப்பான் மற்றும் சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழு தலைவர் தாமஸ் பாக் கூறியுள்ளார்.
அரசமைப்பு சாசனம் திருத்தப்படும்
  • மியான்மரின் அரசமைப்பு சாசனம் திருத்தப்படும் என்று அந்த நாட்டின் புதிய அதிபர் வின் மையிண்ட் தெரிவித்துள்ளார்.

வணிகம்

அமெரிக்காவிலிருந்து எல்என்ஜி இறக்குமதி
  • அமெரிக்காவிலிருந்து திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) நிரப்பப்பட்ட கப்பல் இந்தியாவுக்கு வந்தது.
  • அமெரிக்காவிலிருந்து எல்என்ஜி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவது இது முதல் முறையாகும்.
பாரத் நிலை-6 எரிபொருள் 
  • வாகனப்புகையின் காரணமாக உருவாகும் காற்று மாசுபாடு அதிகரித்துவரும் நிலையில் ஏப்ரல்-1 முதல் டெல்லியில் மட்டும் பாரத் நிலை-6 எரிபொருட்கள் (பிஎஸ்-6) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆந்திராவில் அசோக் லேலண்ட் பஸ் உற்பத்தி ஆலை
  • அசோக் லேலண்ட் நிறுவனம் பேருந்து தயாரிப்புக்கான புதிய ஆலையை ஆந்திராவில் அமைக்க உள்ளது.
ரூ.1.40 லட்சம் கோடி முதலீடு
  • பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஐஓசி) தனது சுத்திகரிப்புத் திறனை இரட்டிப்பாக உயர்த்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
  • இதற்காக இந்நிறுவனம் ரூ.1.40 லட்சம் கோடியை முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

விளையாட்டு

டி20 கிரிக்கெட் தொடர்
  • முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஐபிஎல் போட்டியிலிருந்து ஸ்டார்க் விலகல்
  • காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.

No comments:

Post a Comment