Sunday 22 April 2018

ஏப்ரல் 20 நடப்பு நிகழ்வுகள்

மாநிலசெய்திகள்

தமிழ்நாடு

நியூட்ரினோ திட்டத்தினால் பாதிப்பு இல்லை : விஞ்ஞானிகள் கருத்து
  • நியூட்ரினோ திட்டத்தினால் ஆபத்து இல்லை என்றும் அது இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் திட்டம் எனவும் தமிழக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஆய்வு மையத்தில் ஆப்டிக்கல் தொலை நோக்கி மூலம் நம்மை சுற்றியுள்ள துகள்கள் கண்டறியப்படும் என்றும் இதனால் சுற்றுசூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தேசியசெய்திகள்

இ-விதான் திட்டத்துக்கான மத்திய திட்ட கண்காணிப்புப் பிரிவு தொடங்கப்பட்டது
  • “இ-விதான்“ திட்டத்துக்கான மத்திய திட்ட கண்காணிப்பு பிரிவின் புதிய அலுவலகத்தை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், புள்ளியியல், திட்டஅமலாக்கத் துறை இணை அமைச்சர்  திரு.விஜய் கோயல் தொடங்கி வைத்தார்.
  • “இ-விதான்“ என்பது இந்தியாவில் உள்ள மாநில சட்டப்பேரவைகளை காகிதம் இல்லாத அடிப்படையில் செயல்பட செய்வதற்கான இயக்க அடிப்படையில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டமாகும். மத்திய அரசின் விரிவான டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமையும்.
செல்போன் மூலம் இன்டெர்நெட் பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம்
  • சர்வதேச அளவில் செல்போன்கள் மூலம் இன்டெர்நெட் பயன்பாடு குறித்து சாம்ஸ்கோர் என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பு பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
சிறுமிகள் பலாத்காரம் : போக்சோ சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு
  • 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய பெண்கள் மற்றும் சிறுமிகள் நல்வாழ்வுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார்.
  • அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை உறுதி செய்யும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசசெய்திகள்

கிர்கிஸ்தான் பிரதமராக முக்கமத்கலிய் அபில்கேசியேவ் பதவி ஏற்கிறார்
  • கிர்கிஸ்தான் பிரதமராக முக்கமத்கலிய் அபில்கேசியேவ் பெயரை அந்நாட்டின் அதிபர் சூரோன்பாய் ஜீன்பெக்கோவ் அறிவித்துள்ளார்.
ஜப்பானில் எரிமலை சீற்றம்
  • ஜப்பானின் க்யூஷு தீவுப் பகுதியில், மவுண்ட் கிரிஷ்மா உள்ளது. இதன் ஒரு பகுதியான மவுண்ட் லோவில் தான் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.எரிமலையிலிருந்து சாம்பல் நிற புகைகள் வெளிவர துவங்கியுள்ளதாகவும் இதனால் அப்பகுதி பாதுகாப்பு வளையத்தின் கீழ் வந்துள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வணிகசெய்திகள்

சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட சீர்திருத்தங்கள் இந்தியாவுக்கு பலன் அளிக்கும்சர்வதேச செலாவணி நிதியம் கருத்து
  • இந்தியாவின் சமீபத்திய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் சாதகமான பலன்களை உருவாக்குவதோடு மக்களுக்கும் நன்மை பயக்கும் என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. இந்தியாவின் கடந்தாண்டு வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளோம். அதற்கு அடுத்த ஆண்டில் வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும்

விளையாட்டுசெய்திகள்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மணிகா பத்ராஹர்மீத் தேசாய் பெயர்கள்அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
  • அர்ஜுனா விருதுக்கு காமன்வெல்த் போட்டியின் டேபிள் டென்னிஸ் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மணிகா பத்ரா, ஹர்மீத் தேசாய் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன
ஹீரோ சூப்பர் கோப்பை கால்பந்து: பெங்களூரு அணி சாம்பியன்
  • ஹீரோ சூப்பர் கோப்பைக்கான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி  ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

No comments:

Post a Comment