Tuesday 3 April 2018

ஏப்ரல் 2 - நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

இந்தியாவுடன் கூட்டுப் பயிற்சி
  • இந்தியா - தென் கொரியா கட லோரக் காவல்படையின் கூட்டுப் பயிற்சி ஏப்ரல் 5-ம் தேதி தொடங்குகிறது.
  • இதற்காக, தென் கொரிய கடலோரக் காவல் படைக் கப்பல் சென்னை வருகிறது.

போக்குவரத்துத் துறைச் செயலர் தகவல்
  • பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் 2018 ஆண்டுக்குள் இணைக்கப்படுகின்றன என்று தமிழக போக்குவரத்துத் துறைச் செயலர் டேவிதார் கூறினார்.
செனட் கூட்டத்தில் ஒப்புதல்
  • சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியில் மீண்டும் பி.எட். படிப்பு கொண்டு வர செனட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியா

தெலங்கானாவில் புதிய கட்சி உதயமாகிறது
  • தெலங்கானாவில், தெலங்கானா போராட்ட சமிதியின் தலைவர் கோதண்டராம் புதிய கட்சி தொடங்க உள்ளார்.
  • இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட உள்ளார்.
ஊழல் கண்காணிப்பு ஆணையர் தகவல்
  • வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிக்கும் ஊழல் அதிகாரிகளை கண்டுபிடிக்க ஆதார் அட்டை உதவும் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் ராஜினாமா
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி முத்துக்கருப்பன்  தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்.

உலகம்

உலகின் முதல் தண்ணீர் காவலர்கள்
  • ‘டே ஜீரோ’ நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகருக்கு உலகில் முதல் முறையாக தண்ணீரைப் பாதுகாக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
சீனாவின் 'டியான்காங்-1’ விண்வெளி நிலையம் 
  • 2011-ம் ஆண்டு சீனா அனுப்பிய ‘சொர்க்கத்தின் அரண்மனை’ என்று அழைக்கப்படும் டியான்காங்-1 விண்வெளி நிலையம்,  பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது என்று சீனா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எச்-1 பி விசா
  • அமெரிக்காவில் தங்கி பணியாற்றுவோர்களுக்கான எச்-1 பி விசா வழங்கும் நடைமுறை தொடங்கியது.
ஈரானில் நிலநடுக்கம்
  • ஈரானில் மேற்கு பகுதியில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு 5.3 ஆக பதிவாகியது.

வணிகம்

 இ-வே பில் முறை அமலுக்கு வந்தது
  • மாநிலங்களுக்கு இடையேயான பொருள் பரிமாற்றத்துக்கு இணைய வழியில் ரசீதுகளை உருவாக்கும் இ-வே பில் முறை நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
1.60 லட்சம் கார்கள் விற்பனை
  • நாட்டின் மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமான மாருதி கடந்த நிதி ஆண்டில்(2017) 1.60 லட்சம் கார்களை விற்பனை செய்திருக்கிறது.

விளையாட்டு

தோனிக்கு பத்மபூஷண் விருது
  • 2011 உலகக்கோப்பையை தோனி படை வென்ற நாளில் மகேந்திர சிங் தோனிக்கு பத்மபூஷண் விருது அளித்து கவுரப்படுத்தியுள்ளனர்.
  • ராணுவ உடையில் மிடுக்குடன் வந்த தோனி விருதைக் குடியரசுத்தலைவரிடமிருந்து பெற்றார்.

No comments:

Post a Comment